தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாய் நாட்டில் நடைபெற்றது.
அவ்விழாவில் கலந்துக் கொண்ட ரஜினி இஸ்லாமியர்கள் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது…
என் வாழ்வில் நான் இந்த அளவுக்கு வந்ததற்க்கு மிகப்பெரிய காரணம் என் இஸ்லாமிய நண்பர்கள் தான்.
நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள் தான்.
நான் இப்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.
ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்..
அனைத்துக்கும் மேல என் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான்.
அதுக்கும் மேல நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம் தான்.
அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர் தான்.
இப்படி பல வகையில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது என்று 2.O ஆடியோ விழா மேடையில் ரஜினிகாந்த் பேசினார்.
Islam plays main role in my life says Rajini in 2point0 audio launch at Dubai