JUST IN ரஜினியின் ‘பாட்ஷா’ பஞ்ச் டயலாக்கை PS2 மேடையில் பேசிய கார்த்தி

JUST IN ரஜினியின் ‘பாட்ஷா’ பஞ்ச் டயலாக்கை PS2 மேடையில் பேசிய கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 28ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசும்போது…

“இந்த PS2 படத்தை பத்திரிக்கையாளராகிய நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்.

தினமும் படத்தைப் பற்றியும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாறு பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் இந்த படம் மக்களை சென்றடைந்து வருகிறது.

முதல் பாகம் வெற்றி பெற முக்கிய காரணம் நீங்கள்தான். தலைவர் (ரஜினி) ஸ்டைலில் சொன்னால் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. நீங்கள் ஒருவர் எழுதினால் அது ஒரு லட்சம் (மக்களை சென்றடையும்) தடவை சொன்ன மாதிரி” என பேசினார் கார்த்தி.

Karthi spoke rajini dialogue at PS2 event

செய்யாத சாதனைக்காக மாதவனை வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்

செய்யாத சாதனைக்காக மாதவனை வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவனின் மகன் வேதாந்த் நீச்சலில் பதக்கங்களை குவித்து அவருக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாதவன் இந்த படங்களைப் பகிர்ந்துகொண்டு, “கடவுளின் கிருபையுடனும், உங்கள் எல்லா விருப்பங்களுடனும், 2023 மலேசிய சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் இந்தியாவிற்கு 5 தங்கங்களை (50, 100,200,400 & 1500 மீ) பெற்றுள்ளார் என்றார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது நீண்டகால நண்பரைப் பாராட்டினார், “அவரை வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்த தியாகம் மற்றும் சரியான முடிவுகளுக்கு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நன்றி .. கடவுள் ஆசீர்வதிப்பார்” என பதிவிட்டுள்ளார்.

A.R. Rahman credits Madhavan and his wife for their son’s latest achievements

வைபவ் – 25வது படத்திற்கு வெறித்தனமான டைட்டில் லுக் வெளியீடு

வைபவ் – 25வது படத்திற்கு வெறித்தனமான டைட்டில் லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ்.

அதன் பிறகு ’கோவா’, ‘ஈசன்’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ’பிரம்மன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

‘கப்பல்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த அவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்த நிலையில், வைபவ் நடிக்கும் 25 வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ’ரணம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் நாயகிகளாக நடிக்கவுள்ளார்.

மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.

ரணம்

vaibhav 25th movie title and poster revealed by karthik subburaj

PS2 சென்சார் சர்டிஃபிகேட் & ரன்னிங் டைம் அப்டேட்

PS2 சென்சார் சர்டிஃபிகேட் & ரன்னிங் டைம் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இப்படம் சென்சார் போர்டு மூலம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் 169 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன் 1’ படத்தை விட பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ரன்னிங் டைம் குறைவாக இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

PS2 Sensor Certificate & Running Time Update

லால் சலாம் படத்தில் படத்தில் இணைந்த ரஜினி பேரன்கள்.. வைரலாகும் போட்டோ

லால் சலாம் படத்தில் படத்தில் இணைந்த ரஜினி பேரன்கள்.. வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மூன்றாவது படமாக ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.

சனிக்கிழமையன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு சிறப்பு மதிய உணவை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில், “எனது உலகம்.. நமது புன்னகையே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது” என்று எழுதியுள்ளார்.

Linga and Yathra in Aishwarya Rajinikanth’s ‘Lal Salaam’ sets

‘சூது கவ்வும்’ 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!

‘சூது கவ்வும்’ 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சி.வி. குமார் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று அறிவித்தார்.

தற்போது ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடிக்க கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி கேமியோ தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

‘சூது கவ்வும் 2’ படத்தை சித்தார்த் நடித்த ‘யங் மங் சங்’ படத்தை இயக்கிய எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

‘Soodhu Kavvum 2’ officially announced with cast and crew details

More Articles
Follows