உங்க இஷ்டத்துக்கு கோர்ட் செய்யனுமா..? தர்பார் டைரக்டருக்கு நீதிபதி கண்டனம்

உங்க இஷ்டத்துக்கு கோர்ட் செய்யனுமா..? தர்பார் டைரக்டருக்கு நீதிபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth AR Murugadossரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இணைந்த ‘தர்பார்’ படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.

இந்தியளவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் தமிழகத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சில விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் ரஜினி மற்றும் முருகதாஸை சந்திக்க சென்றனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமி‌‌ஷனருக்கு உத்தரவிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது முருகதாஸின் வக்கீல், ‘போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை’ என கூறினார்.

முதலில், ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும்.

போலீசாரும் அதன்படி வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்படனுமா’ என்று கண்டனம் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

விவேக் & சார்லியின் ‘வெள்ளைப்பூக்கள்’ 2ஆம் பாகம் தயாராகிறது

விவேக் & சார்லியின் ‘வெள்ளைப்பூக்கள்’ 2ஆம் பாகம் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vellai Pookkal 2புதிய கதை எதுவும் கிடைக்காவிடில் ஏற்கெனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்வது அல்லது ஹிட்டான படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை சில இயக்குனர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இரண்டாம் பாக படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவி வருகிறது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான படம் வெள்ளைப் பூக்கள்.

இதில் விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இவரின் நண்பராக சார்லி நடித்திருந்தார்.

அமெரிக்கா செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை கண்டுபிடிப்பதாக கதை இருக்கும்.

இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார்.

தற்போது 2ஆம் பாகத்துக்கான கதையை இவர் எழுதியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

ஓவரா சிரிச்ச ஹிப் ஹாப் ஆதியை ஓங்கி அடித்த ‘ஓ மை கடவுளே’

ஓவரா சிரிச்ச ஹிப் ஹாப் ஆதியை ஓங்கி அடித்த ‘ஓ மை கடவுளே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh My Kadavule beats Naan Sirithal in box office கடந்த வாரம் வெள்ளியன்று காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமா களைகட்டியது.

காதலர்களுக்கு விருந்தளிக்க காதல் இளசுகளுக்கான படங்கள் வெளியானது.

அஸ்வத் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது.

ஆக்சஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

இத்துடன் ஹிப் ஹாப் ஆதி இசையைமத்து நடித்த நான் சிரித்தால் படமும் வெளியானது.

சுந்தர் சி தயாரித்த இந்த படத்தை ராணா என்பவர் இயக்கியருந்தார்.

ஹிப் ஹாப் ஆதி படங்களுக்கு க்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருப்பதால் முதல் நாள் நல்ல வசூலானது.

ஆனால் அடுத்தடுத்து கலவையான விமர்சனங்களையே பெற்றது. படம் முழுவதும் கெக்கே பேக்கே என சிரித்துக் கொண்டே இருப்பார் ஹீரோ.

இதற்காக 50 வகையான சிரிப்புகளை அவர் ஹோம் ஓர்க் செய்தாராம்.

கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

ஆனால் எல்லாம் சிரிப்பும் ஒரே மாதிரிதான் இருந்தன. நாயகியும் கவர்ச்சியான உடைகளை தோன்றினார்.

இந்த படத்துடன் மோதிய ஓ மை கடவுளே படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இது முழுக்க முழுக்க காதலர்களுக்கான படமாக இருந்தாலும் கொஞ்சம் கூட கவர்ச்சியே இல்லாமல் படமாக்கப்பட்டது.

எனவே இதனை அனைத்து தரப்பு குடும்பத்தினரும் ரசித்தனர்.

இதனால் தற்போது தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நான் சிரித்தால் படத்தை விட ஓ மை கடவுளே நல்ல வசூலையும் விமர்சனங்கள் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரு படங்களுக்கும் இன்று ஒரே நாளில் வெற்றி மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Oh My Kadavule beats Naan Sirithal in box office

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayalaan first look“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், அவர்களுக்கு அடுத்ததொரு இன்ப அதிர்ச்சியாக, “அயலான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் படக்குழு. ஏற்கனவே A. R. ரஹ்மான் இசைத்துணுக்குடன் வெளியிடப்பட்ட டைட்டில், பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் வேற்றுகிரக வாசியுடன் வெளிவந்திருக்கும் “அயாலான்” ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

“அயலான்” படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மொத்த படப்பிடிப்பும் முடிய இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் படப்பிடிப்புடன் இணையாக நடைபெற்று வருகிறது.தமிழின் பிரமாண்டமான அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிக்‌ஷன் ) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுதும் முன்னணி நாயகியாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். காமெடி ராஜாக்களாக வலம் வரும் கருணாகரன், யோகிபாபு ஆகிய இருவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். பாலிவுட்டில் மிக சிறந்த நடிகராக விளங்கும் சரத் கேல்கர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” அகாடமி அவார்ட் வின்னர் A. R. ரஹ்மான் சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலை பாடியுள்ளார். மாயஜால விஷ்வல்களை திரையில் கொண்டு வரும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Doctor First look posterசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும் இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2020 ஆம் வருடத்தின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் 15 நாட்கள் திட்டமிடப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கோவாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில், ஃபர்ஸ் லுக்கில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’ படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்டைலீஷ் நாயகன் வினய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

KJR Studios உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இப்படத்தினை இயக்குகிறார்.

33 நாட்களில் படமாக்கப்பட்ட மாஃபியா

33 நாட்களில் படமாக்கப்பட்ட மாஃபியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay in Mafiaஇந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”.
துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.

இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது.

பாடலாசிரியர் விவேக் பேசியது…

முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்த்திக்கின் திறமை பளிச்சிட்டது. இப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களுடன் வந்துள்ளார். அவர் பெரிய அளவில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் தாங்கும் அளவு பாடல்கள் எழுத வேண்டி இருந்தது. அது சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் ஜாக்ஸ் பெஜாய் பேசியது…

லைகாவுக்கும், கார்த்திக்கிக்கும் நன்றி. கார்த்தியை முன்னதாகவே தெரியும்.மிகவும் திறமை வாய்ந்த நபர். அவரது திட்டமிடல் அனைவரையும் அசரடிக்கும். இந்தப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் ரசிப்பீர்கள். இந்தப்படத்தில் இசையில் சிம்பொனியை பயன்படுத்தியுள்ளோம். வெளிநாட்டில் வைத்து ரெக்கார்டிங் செய்தோம். படம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கார்த்திக் நரேன் பேசியது….

“மாஃபியா” உருவாக காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண்விஜய்யும் தான் இருவருக்கும் நன்றி. கதை விவாதத்தின் போதே அருண் விஜய், பிரசன்னா தான் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப்படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. தடம் சமயத்தில் தான் அருண்விஜய்யிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார். பிரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் இந்தப்படத்தின் வில்லன் வேடம் மிகச்சிறப்பாக பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை செய்யாத வேடம், செய்துள்ளார் இந்தக்கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே என்னை வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள். பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணா துருவங்கள் பதினாறு படத்தில் இருந்தே தெரியும். இந்தபடத்தில் உலகத்தரமான இசையை தந்துள்ளார். 33 நாட்களில் இந்தப்படத்தை எடுத்துள்ளோம் படக்குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 21 படம் வருகிறது இது ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகை ப்ரியா பவானி சங்கர் பேசியது….

“மாஃபியா” எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நிறைய நல்ல நண்பர்களை வாழ்வில் தந்த படம். ஜேக்ஸ் இசை எனக்கு பிடிக்கும். அருண், பிரசன்னா திரையில் வந்தாலே அவர்களது திறமை மிளிரும். கார்த்திக் தனக்கு என்ன தேவை என தெரிந்து வேலை செய்யும் மனிதர். இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு படம் செய்ய, அவர் திறமையே காரணம். அருண் பலருக்கு முன்மாதிரியாக திகழ்பவர். என் வாழ்விலும் நிறைய பாதிப்பை தந்துள்ளார். ஒரு தோல்வியிலிருந்து மீண்டு எப்படி வெற்றி பெறுவது என கற்றுக்கொள்ள அவரிடம் நிறைய இருக்கிறது. தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். “மாஃபியா” இனி உங்கள் கைகளில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.

நடிகர் பிரசன்னா பேசியது….

இந்த மேடை நன்றி அறிவிப்பு கூட்டம் மாதிரி ஆகிவிட்டது. இந்தப்படம் வெற்றிப்படம் என அனைவர் மனதிலும் பதிந்ததால், எல்லோரும் நன்றி கூறுகிறார்கள். படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் லைகாவுக்கு நன்றி. தமிழில் சொன்ன நேரத்தில், சொன்ன பட்ஜெட்டில், முடிக்க கூடிய இயக்குநர்கள் வெகு சிலரே. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்றோர் வரிசையில் கார்த்தி இடம்பிடித்து விட்டார். அவர் வெகு நீண்ட காலம் சினிமாவில் மிளிர்வார். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இயக்குநர் அவர். மிகச்சிறந்த திட்டமிடல் அவரிடம் இருக்கிறது. அருண் பற்றி ப்ரியா அழகாக சொல்லிவிட்டார். தோல்வியில் இருந்து மீண்டெழுவதில், பலருக்கு சினிமாவில் முன் மாதிரியாக இருக்கிறார். உங்களிடம் கற்றுக்கொள்கிறேன். தமிழை கூச்சமின்றி அழகாக பேசும் நாயகி ப்ரியா, அவர் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். விவேக்கின் பாடல் வரிகள் அனைத்தும் அருமை. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். படம் எங்களுக்கு நிறைவாக இருக்கிறது. உங்களையும் கவரும் நன்றி.

நடிகர் அருண் விஜய் பேசியது…

25 வருடம் சினிமாவில், இது என் குடும்பம் போல். பத்திரிக்கையாளர்களின் எழுத்து தான் என்னை வடிவமைத்தது. உங்களுக்கு நன்றி. 25 வருடம் எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள். 25 வது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”. இயக்குநர் கார்த்திக் பார்வையில் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கை பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் எனபதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும் படக்குழு அனைவருமே பெரும் பலமாக இப்படத்திற்கு உழைத்துள்ளனர். இவ்வளவு சீக்கிரத்தில் படமெடுக்க பின்னணியில் பெரும் உழைப்பு இருக்கிறது. லைகா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம். விவேக்கின் வரிகள் அற்புதமாக இருந்தது. பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். ப்ரியா என்னை பற்றி நல்லவிதமாக சொன்னதற்கு நன்றி. தமிழ் பேசும் அழகான ஹீரோயின் ஷங்கர் சார் படம் செய்கிறார். மிக ஜாலியானவர். திறமை மிக்க ஒரு நடிகை. அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் தரும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து இயக்கம் – கார்த்திக் நரேன்

இசை – ஜாக்ஸ் பெஜாய்

ஒளிப்பதிவு – கோகுல் பெனாய்

படத்தொகுப்பு – ஶ்ரீஜித் சாரங்

சண்டைப்பயிற்சி – டான் அசோக்

கலை இயக்கம்- சிவ சங்கர்

உடை வடிவமைப்பு – அசோக் குமார்

விஷிவல் எஃபெக்ட்ஸ் – Knack Studios

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one

நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜன்

தயாரிப்பு – சுபாஸ்கரன்

தயாரிப்பு நிறுவனம் – Lyca Productions

More Articles
Follows