‘ரெமோ’வுடன் மோதும் நான்கு சூப்பர் ஹீரோக்கள்

‘ரெமோ’வுடன் மோதும் நான்கு சூப்பர் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo releaseசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே இப்படத்தை ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் வெளியிட முடிவு செய்து, அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

இப்படத்தின் வெளியீட்டை முன்பே அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல படங்கள் ஒன்றாகபின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதே நாளில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் வெளியாகிறது.

இத்துடன் விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடித்துள்ள றெக்க படத்தையும் வெளியிடவுள்ளனர்.

தற்போது இன்னும் இரண்டு படங்கள் களத்தில் இறங்கவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படங்களும் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

வடசென்னை எம்.எல்.ஏ. ஆகிறார் தனுஷ்; ரசிகர்கள் ‘குஷி’

வடசென்னை எம்.எல்.ஏ. ஆகிறார் தனுஷ்; ரசிகர்கள் ‘குஷி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennai dhanushவெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இவருடன் விஜய்சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படம் 40 வருடங்களை கொண்ட கதையாக மூன்று பாகமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு கேங்ஸ்ட்ராக இருக்கும் தனுஷ், மெல்ல மெல்ல அரசியலில் நுழைந்து எம்எல்ஏ ஆக மாறுவாராம்.

இதற்கு முன்பு புதுப்பேட்டை படத்தில் தனுஷ் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் உடன் இணையும் ‘ஜோக்கர்’ ராஜூமுருகன்

தனுஷ் உடன் இணையும் ‘ஜோக்கர்’ ராஜூமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and Raju muruganகுக்கூ, ஜோக்கர் என இரு தரமான வெற்றிகளை கொடுத்தபின், இயக்குனர் ராஜூமுருகனின் படங்களுக்கு கோலிவுட்டில் கிராக்கி எழுந்துள்ளது. ஆனால், குக்கூ படத்தை முடித்த உடனே தனுஷ் படத்தை இயக்கவிருந்தாராம்.

ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போகதான் ஜோக்கர் படத்தை இயக்கியுள்ளார் ராஜீமுருகன்.

தற்போது ஜோக்கரை பார்த்த தனுஷ், சீக்கிரம் ஒரு படம் செய்வோம் என்று கூறியிருக்கிறாராம்.

எனவே, விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

விஜய், அஜித்தை தொடர்ந்து சல்மான்கானுடன் ஸ்ரீதேவி

விஜய், அஜித்தை தொடர்ந்து சல்மான்கானுடன் ஸ்ரீதேவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sridevi stillsதிருமண வாழ்க்கையில் செட்டில் ஆன முன்னாள் கனவுக் கன்னி நடிகை ஸ்ரீதேவி, சமீபகாலமாக படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் புலி, அஜித்துடன் இங்கிலீஷ் விங்கீலீஷ் படங்களில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து அம்மா-மகன் பாசத்தை சொல்லும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் இவர்.

இப்படத்தை சல்மான் கான் தயாரிக்கிறார்.

படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

தள்ளிப் போகும் ரெமோ ரிலீஸ்; குவியும் பாராட்டுக்கள்.!

தள்ளிப் போகும் ரெமோ ரிலீஸ்; குவியும் பாராட்டுக்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ படத்தை மிகுந்த பொருட்செலவில் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தங்களது முதல் படைப்பின் வெளியீட்டை மிகுந்த கவனமுடன் செய்து வருகின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட இருந்தனர்.

இந்தியாவில் வெளியாகும் முன்பே வெளிநாடுகளில் படங்கள் ரிலீஸ் ஆவதால், திருட்டு விசிடி முதல் இணைய தளங்களில் வெளியாகி விடுகிறது.

எனவே தற்போது வெளிநாடுகளில் மட்டும் இப்படத்தை 8ஆம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளரின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரெமோ மீது சந்தேகமா? இந்த நம்பருக்கு கால் பன்னுங்க பாஸ்

ரெமோ மீது சந்தேகமா? இந்த நம்பருக்கு கால் பன்னுங்க பாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan keerthy sureshசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் பெயர் வரி விலக்கு காரணமாக ரெங்கராஜன் என்கிற மோகனா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்தன.

எனவே இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய தயாரிப்பு குழுவினர் ஏதேனும் சந்தேகங்களுக்கு தங்களை தொடர்பு கொள்ளலாம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு எண் 99945 70024
இமெயில் முகவரி [email protected]

More Articles
Follows