‘ரஸாக்கர்’ கதை புரியல.. வரலாறு தெரிய 40 கோடியில் எடுத்து இருக்காங்க.. – பாபி சிம்ஹா

‘ரஸாக்கர்’ கதை புரியல.. வரலாறு தெரிய 40 கோடியில் எடுத்து இருக்காங்க.. – பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி..

வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான, ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன்.

இப்போதைய ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப்போராட்டத்தில் தான் உயிர் நீத்தார்.

இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதையை பதிவு செய்யும். இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது…

வாழ்த்த வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. முதலில் இந்தக் கதை கேட்ட போது, எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது.

இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும்.

குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி. அவர் தாத்தா இந்தப் போராட்டத்தில் போராடி இறந்துள்ளார். அவர் நினைத்தால் ஒரு கமர்சியல் படம் எடுத்திருக்கலாம் ஆனால் 40 கோடியில் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டுமென, இப்படத்தை எடுத்துள்ளார்.

இப்படி ஒரு படத்தை உருவாக்க முனைந்த இயக்குனருக்கு நன்றி. நடிகை வேதிகா, இப்படத்தில் முதலில் அவரை மேக்கப்போடு பார்த்த போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. அத்தனை மாறியிருந்தார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அனுஷா புது நடிகை மாதிரியே தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார்.

ஜான் விஜய், தலைவாசல் விஜய் சார், ராம்ஜி சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படத்தில் அத்தனை கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படம் வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் யதா சத்யநாராயணா பேசியதாவது…

தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஸாக்கர் மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு, ஒரு படம் பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இப்படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கே சுதந்திரம் கிடைத்த போது, ஹைதராபாத்தில் மக்கள் நிஜாமுக்கு எதிராகப் போராடி கொண்டிருந்தார்கள். வல்லபாய் படேல் எடுத்த நடவடிக்கைகள் மூலம், போர் செய்து தான் ஹைதராபாத் விடுதலை செய்யப்பட்டது. பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை வல்லபாய் படேல் தான் ஒருங்கிணைத்தார். ஆனால் ஹைதராபாத் மாநிலத்தை அத்தனை எளிதாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அது துர்கிஸ்தானாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள இந்து மக்கள் நிஜாம் மன்னரால் துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். ரஸாக்கர் ஹைதராபாத் மக்கள் மீது நடத்திய வன்முறை அளவில்லாதது. அதைத்தான் இப்படத்தில் சொல்ல முயன்றுள்ளோம். தமிழ் ரசிகர்கள் எங்களின் வரலாற்றைச் சொல்லும் இப்படத்தை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

First i don’t know story of Razakar says Bobby Simha

காந்திஜீ மரண மர்மங்கள்..; உண்மை சொல்ல வரும் ‘நாதுராம் கோட்சே’

காந்திஜீ மரண மர்மங்கள்..; உண்மை சொல்ல வரும் ‘நாதுராம் கோட்சே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராமலட்சுமி புரொடக்சன் மற்றும் ஈஞ்ச நாடு 18 பட்டி கணேஷ் நாகா புரொடக்சன், சிவன் OTT ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’

இந்த படத்தில் சசி, ரவி, தாமரை, பீட்டர் சரவணன், இன்பா, சிவகுமார், வடிவேல் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கிடுகு படத்திற்கு இசையமைத்த ஜெர்சன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு – JK & Team
எடிட்டிங் – விக்னேஷ்
கலை – திலக்
சவுண்ட் – சந்தோஷ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – வீரமுருகன்.

இதற்கு முன்பு இவர் இயக்கிய ‘கிடுகு’ திரைப்படம் தற்போது நடக்கும் அரசியல் பற்றிய பல உண்மைச் சம்பவங்களை வைத்து எடுத்திருந்தார்.

அந்த படம் அரசியல் கட்சிகளிடையே பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது.
திரையங்குகளில் வெளியிட விடாமல் அரசியல் செய்தார்கள். அதனால் தாமரை youtube சேனலில் வெளியிடப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாதுராம் கோட்சே

தற்போது ‘நாதுராம் கோட்சே’ படம் பற்றி இயக்குநர் வீரமுருகன் பகிர்ந்தவை…

”மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

கோட்சே காந்தியை சுட்டது இரண்டு புல்லட். ஆனால் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டது நான்கு புல்லட். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை இதில் சொல்கிறோம்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை ஆரம்பிக்கும் போது 42000 திருக்கோவில்கள் இருந்தன. ஆனால், இப்போது 22000 கோவில்கள் தான் இருக்கின்றன.

இதன் மூலம் அழிக்கப்பட்ட கோவில்களின் உண்மை வரலாறு மட்டுமின்றி . இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள் தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.

இப்படி பல உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 07 ஆம் தேதி சிவன் OTT, பரமசிவன் OTT என்று புதிய OTT தளங்களில் வெளியாகவுள்ளது.

நாதுராம் கோட்சே

Gandhiji death secrets Nathuram Godse movie

கூவத்தூரில் த்ரிஷாவுடன் கூத்து.?: மனஉளைச்சல் செய்து விட்டு மன்னிப்பா.? – டென்ஷனில் பேரரசு

கூவத்தூரில் த்ரிஷாவுடன் கூத்து.?: மனஉளைச்சல் செய்து விட்டு மன்னிப்பா.? – டென்ஷனில் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசிங்கவாதிகளாக
சில அரசியல்வாதிகள்!
அவர்களின் பேச்சில்
விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது, ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்.

ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகாது.

இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்.

Perarasu condemns VA Raju for Trisha speech

த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகர்.: உங்கள விட அதிகம் படித்த 2ம் வகுப்பு மாணவரிடம் கேளுங்க.. – விஷால்

த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகர்.: உங்கள விட அதிகம் படித்த 2ம் வகுப்பு மாணவரிடம் கேளுங்க.. – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞரை (TRISHA) பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன்.

அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார். என்பதற்க்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பர படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள்.

மேலும் உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை என்ணி வேதனை அடைகிறேன்.

இப்படி கீழ் தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டடங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான்.

இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை, சக கலைஞனாகவும், பெண்களை இழிவு படுத்தி பேசிய உங்களை சக மணிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

முன்குறிப்பு :- உங்களின் அறிவற்ற செயலினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேலை புரியவில்லை என்றால் உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.

– நடிகர் விஷால்

Vishal statement against Admk member about Trisha issue

MNM 7 YEARS மக்கள் நீதி மய்யம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.. – கமல்ஹாசன்

MNM 7 YEARS மக்கள் நீதி மய்யம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு…

மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.

மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.

மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது.

@maiamofficial

#MakkalNeedhiMaiam
#ஏழாம்ஆண்டில்_மய்யம்

Makkal Needhi Maiam 7 years Kamal statement

மலையாளிகளிடம் தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளனும்.; ‘என் சுவாசமே’ பட விழாவில் பிரபலங்கள் பேச்சு

மலையாளிகளிடம் தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளனும்.; ‘என் சுவாசமே’ பட விழாவில் பிரபலங்கள் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியதாவது..

நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3வது திரைப்படம் இது. இசையமைப்பாளர் பிஜே அவர்களுக்கு என் நன்றிகள். பல வருடங்களாக திரையில் இருக்கும் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைய வேண்டும். எனக்கு இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் வாய்ப்புத் தந்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.

மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி பேசியதாவது..

பாடல்கள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இணைத் தயாரிப்பாளர்கள் சேர்ந்து இன்று இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள், அது மூலமே அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படத்தின் புதுமுகங்கள் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். புதுமுகங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் ஶ்ரீவித்யா பேசியதாவது…

தமிழ்த் திரையுலகில் இப்படம் மூலம் நான் அறிமுகமாகிறேன். நான் கல்லூரிப் பேராசிரியர். பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் என் நண்பர் அவர் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்திக்கான வரிகள் நான் எழுதியுள்ளேன். தமிழில் எழுதவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. பெண்களை அவர்களின் உடலை வெளிகாட்டுவதை, நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் இன்றைய உலகம் அதை விரும்புகிறது. இப்படத்திற்காக படக்குழுவினர்கள் நன்றாக உழைத்து, விஷுவல்களை உருவாக்கியுள்ளனர். இளமை துள்ளல் படம் முழுக்க தெரிகிறது. படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் பிஜே பேசியதாவது..

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் அதனால் மன்னிக்கவும். தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வயநாடு ஏரியாவைச் சேர்ந்தவன் அங்கு ரஜினி கமல் படங்கள் தான் அதிகம் ஓடும். இந்தப்படத்தின் வாய்ப்பு எதிர்பாராததது. எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவர்களால் தான் இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டேன் தமிழக ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

கொலப்பள்ளி லீலா பேசியதாவது…

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும். உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். இந்தப்படத்தின் வாய்ப்பிறக்காக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இயக்குநரை எனக்கு நன்கு தெரியும். கடுமையான உழைப்பாளி, அவருக்கு எல்லோரும் நல்ல வாய்ப்புகள் தர வேண்டும். அவர் பெரிய வெற்றிகள் கிடைக்க வேண்டும். இபடத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஆதர்ஷ் பேசியதாவது…

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டுமே தெரியும். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் நன்றிகள். நான் புதுமுகம். உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.

நடிகை அம்பிகா மோகன் பேசியதாவது..

என் சுவாசமே படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளேன். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றி. ஒரு குடும்பமாக இருந்து, அனைவரும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

என் சுவாசமே

நடிகர் சாப்ளின் பாலு பேசியதாவது..

ஒரு சின்ன கேரக்டர் தான் நடிக்கப் போனேன், எனக்குப் பெரிய கேரக்டர் தந்து, படம் முழுக்க வரவைத்து விட்டார் இயக்குநர். கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார், அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் விஜய் விஷ்வா பேசியதாவது…

என் சுவாசமே இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் முன்னமே பார்த்தேன். மொபைலின் பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் கூப்பிட்டு பாராட்டியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளப் பேச்சு கேட்க அவ்வளவு அழகாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சின்னப்படங்கள் வியாபரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வில்லை, சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம். என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப் பெறும்.

மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது. இப்படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

KULAPPULLI லீலா அம்மா அவர்களுக்கு என் முதல் வணக்கம். நீங்கள் இங்கு வந்தது நிறைவு. என் சுவாசமே டைட்டில் மட்டும் தமிழில் இருக்கிறது மற்றதெல்லாம் மலையாளம் தான். இங்கு யாரும் மொழியைப் பெரிதாக பார்ப்பதில்லை. எல்லோரையும் கொண்டாடுவார்கள்.

மலையாளத்தில் இருந்து கன்னடத்திலிருந்து, இந்தியிலிருந்து எல்லாம் படங்கள் இங்கு ரீமேக் ஆகும். இங்கு நாக்கள் அனைவரையும் கொண்டாடுவோம். என் சுவாசமே படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பாடத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர், R மணி பிரசாத் கூறியதாவது..

இங்கு எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகள். மலையாளப்படங்களை இங்கு கொண்டாடுவது போல தமிழ்படங்களை கேரளத்தில் கொண்டாடுவார்கள். கேரளாவில் தமிழ்படங்களுக்கு பெரிய பிஸினஸ் இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு குறைவான நேரமே இருந்தது. அதனால் தான் மலையாளக் கலைஞர்கள் நிறைய பணியாற்றியுள்ளனர். எனக்காக எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது..

என் சுவாசமே.. மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள் ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள். எங்கு போனது தமிழ்ப்பற்று. இந்தப்படத்தில் 3 பாடல்கள் போட்டுக்காட்டினார்கள். அத்தனை அற்புதமாக இருந்தது.

இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பது இன்னும் பலம். மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத் தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள்,

இங்கு ஏவிஎம்மில் ஷீட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள். மம்முட்டி தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதே இல்லை. அவரே சொந்தமாக கேரவன் வைத்துக்கொண்டுள்ளார். இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கிறது.. ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர வேண்டும். என் சுவாசமே படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…

மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறார்கள். தமிழகம் எப்போதும் எல்லோரையும் வாழவைக்கும். படத்தின் பாடல்கள் விஷுவல்கள் எல்லாம் மிக நன்றாக வந்திருக்கிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

இணை தயாரிப்பாளர் ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியதாவது..

SVKA Movies சார்பில் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். சஞ்சய் அண்ணா எனக்கும் இயக்குநராக வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்படத்திற்கு அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. என்னை இணைத் தயாரிப்பாளராகவும் ஆக்கி, அழகு பார்க்கும் சஞ்சய் அண்ணாவிற்கு நன்றி. இயக்குநர் மணி பிரசாத் பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஷீட்டிங்கின் போது அவரது தம்பி இறந்து விட்டார், ஆனாலும் அவர் மறு நாள் ஷீட்டிங் வந்தார். சினிமா மீது அவ்வளவு அர்ப்பணிப்பு கொண்டவர். இந்தப்படத்திற்காக மொத்தக் குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். SVKA Movies சார்பில் தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் இணை தயாரிப்பாளர் ரமேஷ் வெள்ளைதுரை வரவேற்று பொன்னாடை போற்றி சிறப்பு செய்தார்.

என் சுவாசமே

Malayala Actress Leela and Ambika Mohan at En Suvasamae chennai event

More Articles
Follows