நடுரோட்டில் Lip Kiss கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி

நடுரோட்டில் Lip Kiss கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் உலகில் ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

அதன் பிறகு, ’யாகாவாராயினும் நாகாக்க’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ’கடவுள் இருக்கான் குமாரு’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘மரகத நாணயம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் யாகாவராயினும் நாகாக்க, மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆதியை காதலித்த நிக்கி கல்ராணி கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வீட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், மே மாதம் 18ஆம் ஆதி – நிக்கி கல்ராணி தம்பதியர் பாரீசில் ஈபிள் டவர் முன் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடினர்.

அப்போது இருவரும் லிப் கிஸ் (Lip Kiss) அடித்த வீடியோ நிக்கி கல்ராணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nikki galrani lip kiss to Aadhi viral photos and video

வசந்த் ரவி – விமலா ராமன் இணைந்த ‘அஸ்வின்ஸ்’.; உரிமையை கைப்பற்றிய சக்திவேலன்

வசந்த் ரவி – விமலா ராமன் இணைந்த ‘அஸ்வின்ஸ்’.; உரிமையை கைப்பற்றிய சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அஸ்வின்ஸ்’ படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது.

நல்ல கதையம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டது படம் இன்னும் பல புதிய உயரங்களை அடைய உதவியது.

தற்போது தமிழக திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளதால், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பின்னணியில் உள்ள பவர்ஹவுஸான பி.சக்திவேலன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவுடன் ‘அஸ்வின்ஸ்’ படத்திற்காக இணைந்துள்ளார்.

பல படங்களின் வெற்றிக்கு அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பால், சக்திவேலனின் கோல்டன்-டச் ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*நடிகர்கள்:* வசந்த் ரவி, விமலா ராமன், ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படப்புகழ் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் (‘நிலா காலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர்) மற்றும் மலினா.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். எட்வின் சாகே ஒளிப்பதிவையும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பையும் கையாள்கிறார்கள்.

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்குகிறார்.

பிரவீன் டேனியல் இணைந்து தயாரித்துள்ளார்.

மற்றும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார்.

Sakthi Film Factory’s magic touch brings ASVINS to TN theatres on June 9

‘புஷ்பா 2’-வில் மொட்டை தலையுடன் கெத்து காட்டும் பஹத்பாசில்.; கேரக்டர் பெயரே மாஸா இருக்கே.!

‘புஷ்பா 2’-வில் மொட்டை தலையுடன் கெத்து காட்டும் பஹத்பாசில்.; கேரக்டர் பெயரே மாஸா இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021-ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் ’புஷ்பா: தி ரைஸ்’. இதில் பகத் பாசில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருந்தார்.

‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதே 2ஆம் பாகத்துக்கான எதிர்ப்பார்ப்பும் ஆரம்பமானது.

தற்போது ’புஷ்பா: தி ரூல்’ என்றழைக்கப்படும் ‘புஷ்பா 2’ பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஃபஹத் பாசில் நடிக்கும் காட்சிகள் நிறைவுபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

அவரின் கேரக்டர் பெயர் ‘பன்வர் சிங் ஷெகாவத்’ எனவும் விரைவில் ‘புஷ்பா 2’ முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

actor fahadh faasil completed pushba 2 movie

பிரபாஸ் படத்தை முடித்துவிட்டு Jr NTRஐ இயக்கும் கேஜிஎஃப் இயக்குநர்.; KGF3 எப்போ.?

பிரபாஸ் படத்தை முடித்துவிட்டு Jr NTRஐ இயக்கும் கேஜிஎஃப் இயக்குநர்.; KGF3 எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மே 19ஆம் தேதி RRR புகழ் நடிகர் ஜூனியர் என்டிஆர் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு ஜூனியர் என்டிஆர் 30 படத்தின் டைட்டில் & பர்ஸ்ட் லுக் வெளியானது.

‘தேவாரா’ என பெயரிடப்பட்டுள்ள இதில் ஜான்வி கபூர் – சாய்ப் அலிகான் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கொரட்டலா சிவா இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்தினவேல் ஒளிப்பதிவு செய்ய சாபூ சிரில் கலைப்பணிகளை மேற்கொள்ள ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

ஜூனியர் என்டிஆர்

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் 31 வது படத்தின் தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்படத்தை கே ஜி எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

இதன்பின்னர் ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குவார் என்றும் அதன்பின்னரே யஷ் நடிக்கும் ‘கேஜிஎஃப் 3’ படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர்

junior ntr next movie directer by Prashanth Neel

டும் டும் டும் எப்போ.? துபாய் தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கம்.!

டும் டும் டும் எப்போ.? துபாய் தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

துபாயில் தொழிலதிபராக இருப்பவர் ஃபர்ஹான் பின் லியாகத்.

சமீபத்தில், துபாயைச் சேர்ந்த ஃபர்ஹான் பின் லியாகத் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஃபர்ஹான் பின் லியாகத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் இதுவரையில் அளிக்கப்படவில்லை.

கீர்த்தி சுரேஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh make her relationship with a Dubai businessman

த்ரிஷா 68 டைட்டில் – புரொடியூசர் – டைரக்டர் ஹாட் அப்டேட்ஸ் இதோ..

த்ரிஷா 68 டைட்டில் – புரொடியூசர் – டைரக்டர் ஹாட் அப்டேட்ஸ் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக வழக்கமான நாயகி வேடம் ஏற்காமல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் நடித்து வருகிறார் திரிஷா.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

இது விஜய்க்கும் திரிஷாவுக்கும் 67வது படமாகும். இந்த நிலையில் திரிஷா நடிக்க உள்ள அவரின் 68வது படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ‘கொலை வழக்கு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Trisha 68 Title : Producer – Director Hot Updates Here..

More Articles
Follows