நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர் ஒருவர் அன்பான கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ரஜினியின் அரசியல் முற்றுப்புள்ளி குறித்தும் ‘அண்ணாத்த’ ரிலீஸ் குறித்தும் நெத்தியடி கேள்வி கேட்டுள்ளார்.
அந்த கடிதம் இதோ…
மக்களின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட தலைவா் திரு:ரஜினிகாந்த் அவா்களுக்கு… ஒரு கடைக்கோடி ரசிகனின் அன்பான வேண்டுகோள்
ரசிகா்களின் மீது நீங்கள் கொண்ட அன்பினால் என்னை நம்பி வந்தவா்களை நான் கொரோனா தாக்கத்தால் அவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை என்று சொல்லி நீங்கள் அரசியலுக்கு வரும் முடிவையே கைவிட்டீா்கள்.
ஆனால் இப்பொழுது கொரோனாவின் தாக்கம் முழுவதுமாக முடிந்து விடவில்லை.
இந்த நிலையில் மூன்றாவது அலை வர அதிக வாய்ப்புள்ள பண்டிகை காலத்தில் அண்ணாத்த படத்தை வெளியிட்டால்..? ரசிகா்களும், மக்களும் பெரும் கூட்டமாக திரையரங்குகளுக்கு செல்வாா்கள்.
இதனால் மூன்றாவது அலை பரவுவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது. அது உங்களால் உருவாகும்.
எனவே மக்களை காத்திட அண்ணாத்த படத்தின் வெளியீட்டை கொரோனா பரவல் முழுமையாக முடியும் வரை நீங்கள் நிறுத்தி வைக்கவும் அல்லது OTT தளங்களில் வெளியிட்டு மக்களை பலிகாடா ஆக்காமல் காப்பாற்றுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்”கொள்கிறோம்.
இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி செய்வாரா? பார்க்கலாம்..
Fan request Rajinikanth to postpone his movie release