தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படம் சென்சாருக்கு சென்று வந்த பின்னர்தான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்த முடியும் என்று தயாரிப்பாளர் தாணு சொன்னாலும், ஜுலை 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
அதன்படி கபாலி விநியோக உரிமையும் களை கட்டி வருகிறது.
இப்படம் வெளியாகும் சமயத்தில் கிட்டதட்ட தமிழகத்தில் உள்ள 85% தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் மதுரை மாவட்ட உரிமையை சாய் சினிமாஸ் நிறுவனம் ரூ. 8 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்த படத்திற்கு இவ்வளவு விலை கொடுக்கப்பட்டது இல்லையாம்.
இவையில்லாமல், இந்தியா முழுவதிலும் இப்படத்தை அதிக தியேட்டர்களில் திரையிடவுள்ளனர்.
இதனிடையில், மலாய் மொழியிலும் டப்பிங் செய்து மலேசியாவில் வெளியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சீன மொழியிலும் படத்தை டப்பிங் செய்யவுள்ளனர்.
அண்மையில் பாகுபலி படம் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், பாகுபலியை மிஞ்சும் வகையில் கபாலி, அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.