உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் பெயர் ரஜினி..; பேரே கேட்டாலே வெற்றிதான் – தாணு

உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் பெயர் ரஜினி..; பேரே கேட்டாலே வெற்றிதான் – தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார், T. சிவா, , நடிகர் ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை, உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…
ரஜினி என்ற பெயரை கேட்டவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது, ஆம் ரஜினி என்ற பெயர் உலகம் முழுதும் ஓங்கி ஒலிக்க கூடிய பெயர், அவருக்கு இன்று திருமண நாள் இந்த இனிய நாளில் “ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீடு நடப்பது சிறப்பு.

தம்பி பழனிவேல் தொடர்ந்து திரைப்படங்கள் எடுக்கும் நல்ல பண்பாளர், இந்த பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் படமெடுக்கும் திறமை பெற்றவர் இயக்குநர் A.வெங்கடேஷ். ரஜினி பெயரில் நடிக்கும் சிறப்பை பெற்றிருக்கிறார் தம்பி விஜய் சத்யா. இசையமைப்பாளர் அம்ரீஷ் கமர்ஷியல் இசை என பட்டம் சூட்டிய நிலையில் என்னால் மெலடி தர முடியும் என சித் ஶ்ரீராம் வைத்து அழகான பாடல் தந்துள்ளார். இப்படம் அருமையான வெற்றியை பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கல்விதந்தை AC சண்முகம் பேசியதாவது…
திரு வெங்கடேஷ் அவர்கள் இந்தப்படத்தினை நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார்கள். என் நண்பர் ரஜினி அவர்கள் திருமண நாளில் இந்தப்பட விழா நடக்கிறது. அவருடைய தாக்கம் இந்தப்படத்திலும் இருக்கும். நடிகர் விஜய் சத்யாவிடம் ஜெயம் ரவி சாயல் இருக்கிறது. அவர் சினிமாவில் கண்டிப்பாக நல்லதொரு இடத்தை அடைவார்.

ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அம்சம் அவரிடத்தில் தெரிகிறது. ஒரு தாயின் பிரசவம் போல் தான் ஒவ்வொரு படமும் இப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியிருக்கிறார்கள். இசை சேனல்களில் பாடலில் இசையமைப்பாளர், பாடகர் பெயர் போடுகிறார்கள் ஆனால் தயாரிப்பாளர் பெயர் போடப்படுவதில்லை இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஜீவன் பேசியதாவது…

இந்தப்படம் பெயர் ரஜினி அதை தவிர இந்தப்படத்திற்கு எந்த விளம்பரமும் தேவை இல்லை. அந்தப்பெயரே படம் பற்றி சொல்லிவிடும். இந்தப்பட ஹீரோ விஜய் சத்யா, நடிகை ஷெரீன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெங்கடேஷ் அவர்களுடன் படம் செய்ய ஆசை, நீண்ட காலமாக தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

இயக்குநர் வெங்கடேஷ், மற்றும் தயாரிப்பாளர் பழனிவேல் இருவருக்காக தான் இங்கு வந்தேன். இந்தப்படம் பற்றி சொன்னபோது ஏதோ சின்ன படம் எடுக்கிறார்கள் என்று தான் நினைத்தேன் ஆனால் இந்தப்பட இன்விடேசன் பார்த்த போது பிரமிப்பாக பிரமாண்டமாக இருந்தது. இங்கு வந்து பார்த்த போது ஏய் பகவதி போல் பிரமாண்டமாக தெரிகிறது.

நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். தயாரிப்பாளர் படமெடுப்பது இன்றைய சூழலில் கடினமாக இருக்கிறது. நாயகன் பார்க்க அப்படியே ஜெயம் ரவி போல் இருக்கிறார். டிரெய்லர் காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தது, தனுஷிடன் நடித்தவர்கள் அம்மாவாக கூட நடிக்க முடியாமல் இருக்கும் போது அவருடன் நடித்த நடிகை ஷெரீன் புதுமுக நாயகி போல் அழகாக இருக்கிறார்.

மிக நல்ல கலைஞர்கள் இணைந்து மிக பிரமாண்ட படைப்பாக இப்படம் செய்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது…
சினிமாவில் மாவீரன், மகா தைரியசாலி தயாரிப்பாளர் பழனிவேல் தான். கொரோனா கடின காலத்திலும் இரண்டு படங்கள் எடுக்கிறார். இயக்குநர் A.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குநர், மக்கள் விரும்பி பார்க்ககூடிய படங்களை கமர்ஷியலாக தரக்கூடியவர் இருவரும் இணைந்து ஒரு நல்ல படம் தருகிறார்கள். ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள் இல்ல பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது கதை இல்லாவிட்டால் எந்த பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது.

கதை தான் முக்கியம். A.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான் எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்த தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் என தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள், எல்லோரும் நல்லா வர வேண்டும் அதே நேரம் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார்.

சேலை கட்டிய தமிழ் பெண்ணாக மாறுங்கள் தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும்.இப்போது கதை இல்லாமல் சமீபத்தில் வந்த பிரமாண்ட படமெல்லா ஹீரோ காலி. ஆனால் A.வெங்கடேஷ் கதை இல்லாமல் படமெடுக்க மாட்டார். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் அம்மா T. சிவா பேசியதாவது…

இது ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா, இயக்குநர் வெங்கடேஷ் அவர்களின் தீவிர ரசிகன். கமர்ஷியலாக நிறைய படங்கள் எடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர், என பலரை வாழவைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்பமாக அமைய வேண்டும், நண்பர் பழனிவேல் பலமுறை வீழ்ந்தாலும் மீண்டும் படமெடுப்பவர், அவர் மாதிரி ஒரு சிலரால் தான் சினிமா உயிரோடு இருக்கின்றது. அவரது முயற்சிக்கும், உழைப்புக்கும் இந்தப்படம் ஒரு பெரிய வெற்றியை தரவேண்டும். நாய்கன் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறார். விழா நாயகன் இசையமைபபாளர் அம்ரீஷ் அவருடன் இணைந்து நான் வேலை செய்யும் போது நல்ல பாடல்கள் வரும்.

அவர் கடினமான உழைப்பாளி, அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு வரவேண்டும். இங்கு இருக்கும் இசையமைப்பாளர் இமானை பார்த்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள், அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் நல்ல வசூல் பெற்று பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…
ஒரு அழகான மேடை வர்ணனையாளரிலிருந்து நாயகன் நாயகி வரை அனைவரும் அழகாக இருக்கிறார்கள்.

இந்தப்படம் சூப்பர்ஸ்டார் படம் மாதிரி மிகப்பெரிய வெற்றி பெறும், சினிமாவில் ரஜினி வேறு வெற்றி வேறு இல்லை. அந்த பெயரை பிடித்து வைத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மும்பையில் இன்னொரு படமும் எடுத்துகொண்டிருக்கிறார்.

இயக்குநர் வெங்கடேஷ் அழகாக படமெடுத்துள்ளார். முதல் படத்திலேயே சிக்ஸ் பேக்குடன் வந்துள்ளார் நாயகன் விஜய் அவருக்கும் படத்தில் உழைத்துள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகை ஷெரீன் பேசியதாவது…

படத்தில் விஷிவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு கடுப்பேற்றியிருக்கிறேன்.

உண்மையில் அவர் மிக மிக அழகாக இருக்கிறார். எங்க டைரக்டர் அட்டகாசமாக படமெடுத்துள்ளார். அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். சூப்பரான இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்திற்கு நிறைய கஷ்டப்பட்டுள்ளோம். விழுந்து, அடி வாங்கி கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம் தியேட்டரில் வந்து படம் பாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது…
ரஜினி தலைவர் டைட்டில் எங்களுக்கு கிடைத்தது சந்தோசம், அவரது திருமண நாளில் இந்த விழா நடப்பது மகிழ்ச்சி. தலைவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் பயிற்சி எடுத்து உடலை அட்டகாசமாக வைத்துள்ளார். நான் வெங்கடேஷ் சாரின் ரசிகன். மாஸ் கமர்ஷியல் இசையமைப்பாளர் என சொல்கிறார்கள் ஆனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடல் தந்தார் சித்ஶ்ரீராமை பாடவைத்துள்ளோம், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கு நன்றி.

இப்படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. நாயகி ஷெரீன் மிக அழகாக இருக்கிறார். அவரை வைத்த எடுத்த பாடலுக்கு ஷீட்டிங்கு என்னை கூப்பிடவில்லை, இனிமேல் என்னையும் கூப்பிடுங்கள். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், எல்லோருக்கும் நன்றி

நாயகன் விஜய் சத்யா பேசியதாவது…
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த அண்ணன் பழனிவேல் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுத்தவர், என்னை வைத்து படமெடுப்பாரா என நினைத்தேன், என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் அம்ரீஷ் உடைய அழகான பாடலுக்கு நன்றி. இப்போது தான் பயணம் ஆரம்பித்துள்ளது வெற்றிப்பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் A. வெங்கடேஷ் பேசியதாவது..

இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் தரப்பில் ரெடி செய்து வைத்திருந்தார்கள், நாயகன் விஜய் சத்யா தான் என்னிடம் இந்தக்கதையை சொன்னார். கதை சொன்னவுடன் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

ரஜினி டைட்டில் இந்த படத்திற்கு பொருத்தமாக ஈர்ப்புடன் இருந்தது. பழனிவேல் சார் தான் இந்த வாய்ப்பு தந்தார். எல்லாவற்றையும் இயக்குநர் முடிவுக்கு விட்டுவிடுவார். அவருக்கு வாத்தியார் எனும் படம் செய்தேன். அந்த படம் போல் இந்தப்படம்ஜ்ம் அவருக்கு பெரிய அளவில் லாபம் சம்பாதித்து தரும், இமான் சார் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. வாத்தியார் படத்திற்கு அவர் தான் இசை அன்று எப்படியோ இன்றும் அப்படியே பழகுகிறார்.

வெற்றி வந்தால் எல்லோரும் மறந்து விடுவார்கள், என் வாழ்க்கையில் அது நடந்துள்ளது அப்படி இல்லாமல் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஷெரீன் மிக சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். ஒளிப்பதிவு, எடிட்டிங் அபாரமாக செய்துள்ளார்கள். 30 நாளில் இந்தப்படத்தின் ஷீட்டிங்கை முடித்துள்ளேன். அம்ரீஷ் அருமையான இசையை தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

இத்திரைப்படம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்குவரவுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில், ஆக்சன், காமெடி, கலந்த குடும்ப திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடும் படமாக வரவுள்ளது.

Kalaipuli S Thanu speech at Rajini movie audio launch

விஜய் நடிக்கும் ‘ரஜினி’ படம் ரஜினியின் கதையா.?.; வெங்கடேஷ் விளக்கம்

விஜய் நடிக்கும் ‘ரஜினி’ படம் ரஜினியின் கதையா.?.; வெங்கடேஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி.

சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய
A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.

விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதி – மனோ V.நாராயணா
கலை – ஆண்டனி பீட்டர்
நடனம் – செந்தாமரை
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்
புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணை தயாரிப்பு – கோவை பாலசுப்ரமணியம்.
தயாரிப்பு – V.பழனிவேல்

திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்

படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன்.

ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம்.

ரஜினி ரசிகரான விஜய் சத்யா ( ரஜினி ) தனது வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்.

அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன்
அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.

விஜய் சத்யாவிற்கு இந்த படத்திற்கு பிறகு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ” துரு துரு கண்கள் ” பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அந்த பாடல் நிச்சயமாக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகமொத்தம் ரஜினி இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்.
என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்.

படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட தயாரிப்பாளர் V.பழனிவேல் திட்டமிட்டுள்ளார்.

Director Venkatesh talks about his movie Rajini

நடிகர் தனுஷூக்கு கைகொடுக்கும் சிலம்பரசன்

நடிகர் தனுஷூக்கு கைகொடுக்கும் சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘மாறன்’.

இதில் ‘மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடஉள்ளனர்.

இந்த டிரைலரை யார் வெளியிடுகிறார்கள் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாறன் பட டிரைலரை சிம்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். அந்த சமயத்தில் தனுஷின் மாறன் ட்ரைலரை வெளியிடுவார் என தகவல்கள் வந்துள்ளன.

STR to release Dhanush movie trailer

‘வலிமை’-யில் இத்தனை நெகட்டிவ்வா.? அஜித் ரசிகர்கள் அப்செட்.; போனிகபூரின் AK-61 போனியாகுமா?

‘வலிமை’-யில் இத்தனை நெகட்டிவ்வா.? அஜித் ரசிகர்கள் அப்செட்.; போனிகபூரின் AK-61 போனியாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்றுமுன் தினம் பிப்ரவரி 24ல் ரிலீசானது.

இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரித்திருந்தார்.

இதற்குமுன் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தையும் இவரே தயாரித்திருந்தார். வலிமைக்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள AK61 படத்தையும் போனிகபூரே தயாரிக்க வினோத் இயக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு நல்ல ஓபனிங் இருந்துள்ளது. ஆனால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வருகிறதாம்.

மேலும் அஜித்தின் லுக் படத்தின் பெரும் மைனசாக உள்ளது. இருட்டான இடத்தில் கூட அஜித் கருப்பு கூலிங் அணிந்தே வருகிறார். அவரின் சிவந்த கண்களை மறைக்கவே இப்படி செய்ததாக கூறப்படுகிறது. (இரவில் என்னாச்சோ.???!!!)

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

அத்துடன் போலீஸ்க்கு உரித்தான கம்பீரம் அஜித்திடம் இல்லை. சரியான காஸ்ட்யூம் கூட அஜித்துக்கு இல்லை. ஏதோ வெறுமனே வந்து நின்று டயலாக் பேசுவதாக உள்ளது.

இவையில்லாமல் தாடி வைத்த விஸ்வாசம் அஜித் கூட ஓகே. ஆனால் வலிமை படத்தில் க்ளீன் ஷேவ் செய்த அஜித்தை காணமுடியவில்லை என படம் பார்த்த நடுநிலையாளர்களே கூறி வருகின்றனர்.

அஜித்தின் முகத்தில் முதிர்ச்சி நன்றாகவே தெரிகிறது. அதை மேக்அப் மேன் சரி செய்திருக்கலாம். ஆக்சன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியவத்துவத்தை படத்தின் கதையிலும் அஜித்தின் தோற்றத்திலும் கொடுத்திருக்கலாம் வினோத் என ரசிகர்களே கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் AK61 படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளார். எனவே படம் போனியாகுமா? என்ற கவலை அவருக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Ajith’s Valimai received more negative comments

ஒரே வாரத்தில் ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் 2 படங்கள்

ஒரே வாரத்தில் ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து அவரது நடிப்பில் உருவான கனா படம் 2018ல் ரிலீசானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இருவரும் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விவசாயம் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

ரசிகர்களில் ஆதரவுடன் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை தற்போது மார்ச் 18ம் தேதி முதல் சீனா நாட்டில் சைனீஸ் மொழியில் திரையிட உள்ளனர்.

‛‛கனா படத்தின் மொத்த படக்குழுவுக்கும் இது பெருமையான தருணம். மகிழ்ச்சியாக உள்ளது” என அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள மற்றொரு படமான ‘டான்’ திரைப்படம் மார்ச் 25ல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஒரு வார இடைவெளியில் சிவகார்த்திகேயனின் 2 படங்கள் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாம்.

சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, மிர்ச்சி விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா புரொடக்சன் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan’s 2 films released in same week

‘காலா’ & ‘வலிமை’ பட ஹூமா குரேஷியின் DOUBLE XL அப்டேட்

‘காலா’ & ‘வலிமை’ பட ஹூமா குரேஷியின் DOUBLE XL அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா என்பது குறிப்பித்தக்கது.

‘வலிமை’ படத்தில் ஹூமாவின் நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து அன்பும் பாராட்டும் குவிந்து வருவதால், நடிகை ஹூமா குரேஷி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

அவரது ஆக்சன் காட்சிகளும் அவருக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இதுகுறித்து ஹுமா குரேஷி கூறியதாவது..,

“அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் வியப்பாக உள்ளது.

அவரது ரசிகர்களுக்கு எனது நன்றி. அஜித்துடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.

இந்த கேரக்டரை பரிசளித்த அஜித், போனி கபூர் மற்றும் இயக்குனர் .வினோத் ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

தற்போது, ஹுமா குரேஷி, நடிகர் மஹத் ராகவேந்திராவுடன் “டபுள் எக்ஸ்எல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு பிராந்திய மொழிகளில் பல முக்கிய படைப்புகளில் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது அதிகம் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்தி திரைப்படமான ‘கங்குபாய் காத்தியாவதி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், அதைத் தொடர்ந்து ‘மித்யா’ என்ற வெப் சீரிஸ், நெட்ஃபிக்ஸ் ஒரிஜினல் ‘மோனிகா, ஓ மை டார்லிங்’ ஆகியவற்றில் நடிக்கிறார்.

Kaala Valimai fame Huma Qureshis DOUBLE XL updates

More Articles
Follows