தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
22 வருடங்களுக்கு முன் தாணு – கமல்ஹாசன் – சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் உருவான படம் ‘ஆளவந்தான்’.
இதில் கமல் வில்லன் & ஹீரோ என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
இவர்களுடன் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படம் டெக்னிக்கலாக பாராட்டைப் பெற்றாலும் மோசமான தோல்வியை தழுவியது.
இதனால் தயாரிப்பாளர் தாணுவிற்கு பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டது. கமலால் படத்தில் ஏகப்பட்ட பிரச்சினை. எனவே தான் இந்த தோல்வி என பல பேட்டிகளை கொடுத்திருந்தார் தாணு.
இந்த நிலையில் இப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மறுபடியும் ரீ- ரீலீஸ் செய்ய உள்ளதாக தாணு தெரிவித்துள்ளார்..
அந்த பேட்டியில்…
“1990களில் கமல் அமைத்த திரைக்கதை சரியாக பொருந்தவில்லை.
தற்போது இந்த சூழலுக்கு பொருந்தும்.
இப்போது படம் வெளியானால் நான் இழந்த பணத்தை கூட மீட்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் தாணு.