தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹீரோ மற்றும் வில்லன் என தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’.
இந்த படத்தை செல்வராகவன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.
செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு போதுமான புரமோஷன் இல்லை என தனுஷ் ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் திடீரென லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக தொடங்கி அதிரடி ப்ரோமோஷன் செய்து வருகிறார் தாணு.
‘நானே வருவேன்’ பட தொடர்பான செய்திகள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிகாலை காட்சிகள் தேவையில்லை என தாணு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில்… “நான் தயாரித்த அசுரன் & கர்ணன்.. இரண்டையுமே நான் காலை 8 மணி காட்சிக்குத்தான் வெளியிட்டேன்.
தமிழகத்தில் சில ஊர்களில் மட்டும்தான் அதிகாலை 4 & 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
மற்ற ஊர்களில் பொதுவாக 8 மணிக்கு தான் காட்சிகள் தொடங்குகின்றன.
அப்போதுதான், உலகம் முழுக்க அனைவராலும் ஒரே நேரத்தில் படத்தை பார்க்க முடியும்.
மற்றொரு காரணம்.. அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவே திரையரங்குக்கு ரசிகர்கள் வந்துவிடுகின்றனர். அது தேவையில்லை என நினைக்கிறேன்.
எனவே தான் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது” என நியாயமான காரணத்தை கலைப்புலி எஸ் தாணு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Why early morning shows cancelled for Dhanush mivies