தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வாடி வாசல் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் கலைப்புலி எஸ் தாணு, இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் படம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
சோதனை படப்பிடிப்பு நடந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக நூற்றுக்கணக்கான காளைகள் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பகிர்ந்து கொண்டார்.
கால்நடைகளுக்கான தீவனம் மட்டுமின்றி பணியாளர்களுக்கு மட்டும் இதுவரை சுமார் ஒன்றரை கோடி செலவாகியுள்ளது.
லண்டனை சேர்ந்த நிறுவனம் கிராபிக்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தாணு மேலும் கூறினார்.
Vaadi Vaasal official update given by producer thanu