தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் இரு வேடங்களில் நடித்த ‘நானே வருவேன்’ நேற்று செப்டம்பர் 29 இல் வெளியானது.
செல்வராகவன் இயக்கி கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.
யுவன் இசையமைத்திருந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.
வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவனை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.