தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்.
இவர் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.
மாரிசெல்வராஜ் அவர்களின் குருநாதர் இயக்குனர் ராம் அவர்களின் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு மற்றும் திரையுலகத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லத்திற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Celebrities attend grand function at director Mari Selvaraj’s new home