ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படத்தின் முக்கிய தகவல்

rajini shankarஜென்டில்மேன் என்ற திரைக்காவியத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து, பிரம்மாண்டத்தின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் டைரக்டர் ஷங்கர்.

இதனைத் தொடர்ந்து தன் கதைக்கு ஏற்ற நாயகர்களை தேர்ந்தெடுத்து அதற்காக அவர்களை மாற்றி, ஒவ்வொரு படத்தையும் செதுக்கி வரும் சிற்பி இவர்.

ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகியாக இருந்தாலும் இவரது படங்களுக்கு மட்டும் கால்ஷீட்டை வழங்க தயாராக இருந்தனர்.

ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு அவர்களின் கேரியரில் முக்கியமான படத்தை கொடுத்திருக்கிறார்.

இன்று தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விரைவில் இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்வார்.

வருகிற 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திரு. ஷங்கர் அவர்களை ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More

Latest Post