விமல் – வரலட்சுமி இணைந்துள்ள கன்னிராசி படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

விமல் – வரலட்சுமி இணைந்துள்ள கன்னிராசி படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)விமல் மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்துள்ள படம் ‘கன்னிராசி’.

இவர்களுடன் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

முத்துக்குமரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்பட சூட்டிங் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலைல் சென்சாரில்ல் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை எதிர்பார்க்கலாம்.

தன் மகன் சூர்யாவை திருடனாக அறிமுகப்படுத்தும் விஜய்சேதுபதி

தன் மகன் சூர்யாவை திருடனாக அறிமுகப்படுத்தும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். அதன் பற்றிய விவரம் வருமாறு…

விஜய்சேதுபதி, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் சிந்துபாத்.

இப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்குகிறார்.

இவர் விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர்.

இதில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் சிறுவனாக நடிக்கிறார்.

மேலும் சேதுபதி திரைப்படத்தில் நடித்த லிங்காவும் இதில் நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னாவும் நடிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தடையாக உள்ளது என்பதையும், அதற்கான தீர்வையும் சொல்லும் படமாக இது இருக்குமாம்.

‘அக்னி தேவி’யில் நான் நடிக்கலே.. பாபி சிம்ஹா போலீசில் புகார்

‘அக்னி தேவி’யில் நான் நடிக்கலே.. பாபி சிம்ஹா போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஜான் பால்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி தயாரித்துள்ள படம் அக்னி தேவி.

இதில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜாக்கீஸ் பிஜாய் இசையமைக்க, ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாளை மறுநாள் 22ந் தேதி படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அக்னி தேவி படத்தில் நான் நடிக்கவில்லை என படத் தயாரிப்பாளர் மீது பாபிசிம்ஹா பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்…

கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் இயக்கும் அக்னிதேவி (அக்னிதேவ் என்று முன்பு பெயரிட்டு இருந்தனர்) படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். 5 நாட்கள் தான் நடித்தேன்.

என்னிடம் சொல்லப்பட்ட கதையை மாற்றி வேறு மாதிரி எடுத்தனர். எனவே காட்சிகளை போட்டு காட்ட கூறினேன். ஆனால் காட்டவில்லை. எனவே படத்திலிருந்து விலகி விட்டேன்.

இது தொடர்பாக கோவை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது படத்தின் பெயரை அக்னி தேவி என்ற பெயரில் மாற்றி வருகிற 22ந் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றனர்.

விளம்பரங்களில் என்னுடைய போட்டோக்களும் உள்ளது.

மேலும் எனக்கு பதிலாக டூப் போட்டு சில காட்சிகளை எடுத்து கிராபிக்ஸ் செய்துள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜான்பால்ராஜ் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் அக்னிதேவி படம் 22ந் தேதி வருமா? எனத் தெரியவில்லை.

ஆதியுடன் பார்ட்னராக இணையும் ஹன்சிகா-பாலக் லல்வாணி

ஆதியுடன் பார்ட்னராக இணையும் ஹன்சிகா-பாலக் லல்வாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New ProjectRFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் ஆதி மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கின்றனர்.

ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் படத்தின் பெரும் பில்லர்களாக பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், vtv கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.

டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது,

“இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும்.

அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும்.

மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்” என்றார்.

இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

மேலும் படத்தில் பணிபுரியும் டெக்னிஷியன்ஸ் விபரம்.

ஒளிப்பதி: சபீர் அஹமது

மியூசிக்: சந்தோஷ் தயாநிதி

எடிட்டர்: கோபி

கலை: சசி

மக்கள் தொடர்பு: யுவராஜ்

சமூகத்தை பாதிக்கும் உலகமயமாக்கலை சொல்லும் ‘குச்சி ஐஸ்’

சமூகத்தை பாதிக்கும் உலகமயமாக்கலை சொல்லும் ‘குச்சி ஐஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kuchi ice directorஉலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற படம் உருவாகிறது.

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார்.

இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.

‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

பழநீஸ். Ks. ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார்.

உலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்கிறது படம்.

‘குச்சி ஐஸ்’ படத்தின் தொடக்க விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாத வாக்கில் படம் வெளியாகவுள்ளது.

Bigg Boss Barani and Rithika to romance in Kuchi Ice

வந்தியத்தேவன் வேடத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக கார்த்தி.?

வந்தியத்தேவன் வேடத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக கார்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi plays as Vanthiyathevan in Maniratnams Ponniyin Selvan‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் எது? என்ற கேள்வி கோலிவுட்டில் வெகுநாட்களாக உள்ளது.

தற்போது அவர் தனது கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதில் விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கலாம் என கூறப்பட்டது.

தற்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து இப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த கதையில் வந்தியத்தேவன் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க விஜய்சேதுபதியை அனுகினார்களாம்.

ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறாராம்.

Karthi plays as Vanthiyathevan in Maniratnams Ponniyin Selvan

More Articles
Follows