விமல்-வடிவேலுவின் போலீஸ் கூட்டணி; சுராஜின் அடுத்த மருதமலை

Director Suraaj teams up with Vimal and Vadiveluபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்து கடைசியாக வெளியான படம் ‘மன்னர் வகையறா’.

இதனையடுத்து வரலட்சுமியுடன் ‘கன்னிராசி’ படத்தில் டூயட் பாடி வருகிறார்

தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது-

இந்த படத்தை தொடர்ந்து விமல் அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி-2’ படத்திலும் அடுத்ததாக, எழில் இயக்கத்திலும் மறுபடியும் நடிக்க இருக்கிறார்.

இவை எல்லாம் முடித்துவிட்டு சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாக இருக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

இப்படம் அர்ஜீன் நடித்த மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் என கூறப்படுகிறது. மருதலை படத்தை இயக்கியவர் சுராஜ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தில் விமல் – வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.

இதுதவிர, `வெற்றிவேல்’ பட இயக்குநர் வசந்தமணி இயக்கத்திலும், `தமிழன்’ பட இயக்குநர் மஜித் இயக்கத்திலும் விமல் நடிக்க இருக்கிறார்.

இதனையடுத்து மீண்டும் `மன்னர் வகையறா’ படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளாராம் விமல்.

ஆக மொத்தம் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் விமல்.

Director Suraaj teams up with Vimal and Vadivelu

Overall Rating : Not available

Latest Post