விமல் வரலட்சுமி நடித்த ‘கன்னிராசி’ பட ரிலீசுக்கு இடைக்கால தடை

விமல் வரலட்சுமி நடித்த ‘கன்னிராசி’ பட ரிலீசுக்கு இடைக்கால தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanni rasi movieவிமல், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’.

கிங் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கியது.

இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார்.

ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.

இந்நிலையில், ‘கன்னிராசி’ திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டது.

ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை மீடியா டைம்ஸுக்கு அளிக்கவில்லை. வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாகப் படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘கன்னிராசி’ திரைப்படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

Court orders interim ban on Vimal’s Kanni Rasi

அண்ணாத்த & விஸ்வாசம் பட இயக்குனர் சிவா வீட்டில் நடந்த சோகம்

அண்ணாத்த & விஸ்வாசம் பட இயக்குனர் சிவா வீட்டில் நடந்த சோகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Siva fatherகார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா.

இதன் பின்னர் அஜித் படங்களை வரிசையாக இயக்கினார்.

வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.

இதில் விவேகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு பாதிப்பால் இப்பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.

Director Siva’s father Jeyakumar passed away today

‘மாஸ்டர்’ படத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்..?; ஓடிடி பக்கம் சாய்ந்த விஜய்… ரசிகர்கள் ஏமாற்றம்

‘மாஸ்டர்’ படத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்..?; ஓடிடி பக்கம் சாய்ந்த விஜய்… ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையில் உருவான இப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்த படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

எனவே ‘மாஸ்டர்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்த நிலையில் படக்குழு மறுத்தது.

மேலும் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என கூறியது.

எப்போது வெளியானாலும் மாஸ்டர் படம் கொண்டாடாப்படும் என்றார் பட இயக்குனர் லோகேஷ்.

இதனால் தியேட்டரில் தளபதி தரிசனத்திற்கு ரசிகர்கள் தயாராக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் விலைக்கு வாங்கியுள்ளதாம்.

இது தொடர்பான அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Master OTT rights bagged by Netflix?

அனைத்து துறைகளிலும் முதலிடம்.; சிறந்த மாநில பட்டியலில் ஹாட்ரிக் அடித்த தமிழ்நாடு.!

அனைத்து துறைகளிலும் முதலிடம்.; சிறந்த மாநில பட்டியலில் ஹாட்ரிக் அடித்த தமிழ்நாடு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது இந்தியா டுடே.

இந்தாண்டு, விருது பெற உள்ளவர்களின் பட்டியலை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

2000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்தச் செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருதை, தமிழ்நாடு அரசு 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்றுள்ளது.

“மாநிலங்களின் சிறந்த மாநிலம்” எனும் விருது தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதானது, கடந்து ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல், ஆளுமைத் திறன், மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது்.

இது தொடர்பான கடிதத்தை இந்தியா டுடே நிர்வாகம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான விருது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu wins the first place in India Today’s 2020 state of the states survey

India Today Survey

விபத்தில் சிக்கிய போதும் அசத்திய அஜித்.; ரசிகர்களின் வலியை தீர்த்த ‘வலிமை’ அப்டேட்

விபத்தில் சிக்கிய போதும் அசத்திய அஜித்.; ரசிகர்களின் வலியை தீர்த்த ‘வலிமை’ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai Ajithபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதில் அஜித்துடன் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்படபடப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அஜித் பைக் ரேஸ் பிரியர் என்பதால் அவரின் திறமைக்கு சவால் விடும் வகையில் பிரத்யேகமாக பைக் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கி வருகிறார் வினோத்.

இதற்காக ஸ்பெஷல் பைக் ஒன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை படமாக்கிய போது அஜித்துக்குக் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்கை வீலிங் செய்யும்போது தவறி கீழே விழுந்து அஜித்துக்கு கையில் காயம் ஏற்பட்டதாம்.

இருந்தாலும் சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தாராம் அஜித்.

அஜித் அந்த பைக்கில் ஸ்டண்ட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

பல மாதங்களாக வலிமை அப்டேட் வேண்டும் என அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். படத் தயாரிப்பாளர் போனி கபூரை காணவில்லை என்றெல்லாம் போஸ்டர் அடித்தனர்.

தற்போது வலிமை அப்டேட் வந்துள்ளதால் அவர்களின் வலி பறந்துவிட்டதாம்.

Pics of Ajith performing bike stunt at Valimai sets sends fans into frenzy

‘தி லயன் கிங்’ பாணியில் ஏஆர். முருகதாஸின் அடுத்த படம்

‘தி லயன் கிங்’ பாணியில் ஏஆர். முருகதாஸின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadossவிஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது-

இதனையடுத்து முருகதாஸ் இயக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிக்கவிருந்தார்.

இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகினார் முருகதாஸ்.

எனவே ‘தளபதி 65’ பட இயக்குநர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து முருகதாசின் அடுத்த பட ஹீரோ என்ற கேள்வி கோலிவிட்டில் எழுந்தது.

தற்போது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படம் அனிமேஷன் படமாக உருவாகவுள்ளதாம்.

அதாவது ‘தி லயன் கிங்’ பாணியில் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

Director AR Murugadoss in next film details here

More Articles
Follows