ரிலீசுக்கு ரெடியாக இத்தனை படங்களா.? வியக்க வைக்கும் விமல்.!

ரிலீசுக்கு ரெடியாக இத்தனை படங்களா.? வியக்க வைக்கும் விமல்.!

கடந்த பிப்ரவரி 18ல் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடித்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரிலீசானது.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது. எனவே இந்த படத்தை விமலின் கம்பேக் (COME BACK) எனலாம்.

இதனையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் விமல். இந்த படத்திற்கு ‘குலசாமி’ என தலைப்பு வைத்துள்ளனர். வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி.

இத்துடன் விமல் கைவசம் உள்ள படங்கள் லிஸ்ட் இதோ

சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’, முத்துக்குமரன் இயக்கத்தில் ‘கன்னிராசி’ ஆகியவை வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இவை இல்லாமல் விமல் நடிப்பில் ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் ஒரு படம் என லிஸ்ட் நீள்கிறது.

Actor Vimal Upcoming Movies list is here

சரத்குமாரின் 150வது படத்தில் இரண்டு நாயகிகள்

சரத்குமாரின் 150வது படத்தில் இரண்டு நாயகிகள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ‘தூங்காவனம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா.

இவர் கமல்ஹாசனின் உதவி இயக்குனராவார். இவர் தற்போது சரத்குமார் நடிப்பில் உருவான ‘இரை’ என்ற தொடரை ‘ஆஹா’ என்ற ஒடிடி தளத்திற்காக இயக்கி வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தன் 150வது படத்திற்கு தயாராகிவிட்டார் சரத்குமார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஷ்யாம் – ப்ரவீன் ஜோடி இயக்கவுள்ளனர்.

இதில் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரனாக நடிக்கிறாராம் சரத்குமார்.

இதில் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Actor Sarath Kumar’s 150th film announced

‘கடைசி விவசாயி’ நல்லாண்டி வீட்டில் மலரஞ்சலி..; மணிகண்டனை முத்தமிட்டு வாழ்த்திய மிஷ்கின்

‘கடைசி விவசாயி’ நல்லாண்டி வீட்டில் மலரஞ்சலி..; மணிகண்டனை முத்தமிட்டு வாழ்த்திய மிஷ்கின்

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ள படம் ‘கடைசி விவசாயி’.

சின்ன வேடங்களில் விஜய்சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் கதையின் நாயகனாக நல்லாண்டி என்ற பெரியவர் நடித்திருந்தார். ஆனால் அவர் கொரோனா காலத்தில் காலமானார்.

இப்படம் கடந்த பிப்ரவரி 12 அன்று தியேட்டர்களில் ரிலீசானது.

இப்படத்திற்கு அனைவரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்த மிஷ்கின் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார்.

‘கடைசி விவசாயி’ தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டியில் சந்தித்தேன். அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன்.

படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன்.

மேலும் படப்பிடிப்பு நடத்திய இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.”

இவ்வாறு மிஷ்கின் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Mysskin’s wishes to Kadaisi Vivasayee movie team

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விக்ரம்.; நாயகியாக ‘பீஸ்ட்’ பட நாயகி

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விக்ரம்.; நாயகியாக ‘பீஸ்ட்’ பட நாயகி

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘மகான்’.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ விரைவில் வெளியாகவுள்ளது. மற்றொரு படமான ‘துருவ நட்சத்திரம்’ கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் முன்னணி நடிகரான விக்ரம் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம் சீயான் விக்ரம்.

அந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கவுள்ளார்.

இதில் நாயகியாக விஜய்யின் ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபுவின் 28வது படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இப்பட பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் இப்பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

கூடுதல் தகவல்…

தற்போது பரசுராம் பெட்லா இயக்கத்தில் ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படத்தில் நடித்துள்ளார் மகேஷ்பாபு. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படம் வரும் மே 12-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

Vikram and Pooja hegde joins super star film

அனுபமாவின் அம்மாவாக விஜய்-சூர்யா பட ஹீரோயின்

அனுபமாவின் அம்மாவாக விஜய்-சூர்யா பட ஹீரோயின்

‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இதனையடுத்து தனுஷ் உடன் ‘கொடி’ மற்றும் அதர்வா உடன் ‘தள்ளிப்போகாதே’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் அனுபமா.

தற்போது ‘பட்டர்பிஃளை’ என்ற மலையாளத்தில் படத்தில் நடித்துள்ளார்.

கந்தா சதீஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை அனுபமாவின் பிறந்தநாள் பிப்ரவரி 18ல் வெளியாகியுள்ளது.

இதில் அனுபமாவின் அம்மாவாக பிரபல நடிகை பூமிகா நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன் ‘பத்ரி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் பூமிகா,

இந்த பட்டர்ஃபிளை படம் இன்றைய நவீன பெண்களின் சுதந்திரம் பற்றியும் அம்மா மகள் உறவை பற்றியும் சொல்ல வருகிறதாம்.

Vijay and Suriya film heroine acts as Anupama mother in butterfly

மரியாதையை காப்பாத்திக்கோ..’ ‘விசித்திரன்’ விழாவில் ஆர்.கே.சுரேஷ்க்கு பாலா எச்சரிக்கை

மரியாதையை காப்பாத்திக்கோ..’ ‘விசித்திரன்’ விழாவில் ஆர்.கே.சுரேஷ்க்கு பாலா எச்சரிக்கை

இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர். கே. சுரேஷின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள படம் விசித்திரன்.

இந்த படம் ஜோசப் என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நாயகிகளாக பூர்ணா மற்றும் அவன் இவன் பட புகழ் மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று பிப்ரவரி 22ல் இப்பட இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் நடிகை பூர்ணா பேசும்போது…

எனக்கு பாலா சார் படங்கள் பிடிக்கும். அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசை. அவரிடம் இந்த மேடையிலேயே வாய்ப்பு கேட்கிறேன். சார்.. ஒரு படத்திலாவது எனக்கு வாய்ப்பு தாருங்கள்” என பேசினார்.

விழாவில் ஆர்கே. சுரேஷ் பேசும்போது…

என் தந்தைக்கு பிறகு நான் மதிக்கும் மரியாதைக்குரிய நபர் என் அண்ணன் இயக்குனர் பாலாதான். அவர் தான் என்னை சினிமாவில் வழிநடத்தி வருகிறார். என் ரசிகர்களுக்கும் நன்றி என உருக்கமாக பேசினார்.

இறுதியாக பிரபல இயக்குனரும் விசித்திரன் படத்தின் தயாரிப்பாளருமான பாலா பேசியதாவது…

நான் தயாரித்த படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் என் பெயரை படத்தில் போட வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்.

ஆனால் இந்த விசித்திரன் படம் எனக்கு பிடித்துள்ளது. எனவே என் பெயரை போட சொன்னேன்.

இந்த படத்தில் ஆர்கே. சுரேஷின் நடிப்புக்கு நல்ல மரியாதை கிடைக்கும். இதில் கிடைக்கும் மரியாதையை காப்பாத்திக்கோ.. மசாலா படங்களில் நடிக்காதே… ராமநாதபுரத்தில் இருந்து உனக்கு கூட்டம் சேர்க்க ஆள் கூட்டிட்டு வந்தீயா..?

பிஆர்ஓ நிகில் முருகன் சொல்ல சொன்னார்.. எனவே பிரஸ் மீடியாக்களுக்கு நன்றி..” என சுருக்கமாக பேசினார் பாலா.

Director Bala speech at Visithiran audio launch

More Articles
Follows