3 கேரக்டர்கள்… சிங்கிள் ஷாட்… 10 நிமிஷம்..; அசத்துகிறார் ஆதேஷ் பாலா

3 கேரக்டர்கள்… சிங்கிள் ஷாட்… 10 நிமிஷம்..; அசத்துகிறார் ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா.

நடிகர் சிவராமன் – சுப்புலெட்சுமி நட்சத்திர தம்பதிகளின் மகனாவார். தாயார் சுப்புலெட்சுமி விசு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆதேஷ்

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் B.A., செக்ரட்டரிஷிப் படித்தவர்.

விக்ரம் நடித்த சாமி படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக் கோட்டை, முண்டாசுப் பட்டி, இங்கிலீஷ் காரன், விந்தை, குருவி, வஜ்ரம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், ஜன்னலோரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாயம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பொண்டாட்டி மற்றும் நிக்குமா நிக்காதா போன்ற குறும்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். Take 1 shot 1 என்ற குறும்படத்தில் ஒரே ஷாட்டில் நடித்துள்ளார்.

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

சந்தோஷ் நவீன் இயக்கியுள்ள ‘இராஜமாபுரம்’ என்ற படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். ஷாம் ஒளிப்பதிவு செய்ய ரகு சரவணகுமார் இசையமைக்கிறார். Article 21 நிறுவனம் சார்பாக சந்தோஷ்குமார் தயாரித்துள்ளார்.

பேட்ட, ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான், சவரக்கத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

இப்போது பிரசாந்தின் ‘அந்தகன்’ & மணிரத்னத்தின் ‘பொன்னியின்செல்வன்’ உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த 2 படங்களும் விரைவில் ரிலீசாகவுள்ளது.

அதே நேரம் குறும்படங்களிலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் குறும்படம், ‘மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’.

காயத்ரி செந்தில்குமார் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக ஹேமா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக 10 நிமிடங்களில், 3 கதாபாத்திரங்களை வைத்து ஒரே ஷாட்டில் உருவான குறும்படத்தில் ஆதேஷ் பாலா நடித்துள்ளார்.

இதன் தலைப்பு பார்வை (Title look) ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.

நளதமயந்தி, அழகிய தீயே போன்ற பல படங்களின் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

சுபாஷ் அலெக்சாண்டர் ஒளிப்பதிவில், அன்பு எடிட்டர், முருகவேல் மாணிக்கம் இணை இயக்கம்..

3 characters … single shot … 10 min ..; Adesh Bala is awesome

சிம்பு பட இசை விழா தள்ளிப்போக இதான் காரணம்.; இதை படிச்சா நீங்களே சைலண்ட் ஆகிடுவீங்க!

சிம்பு பட இசை விழா தள்ளிப்போக இதான் காரணம்.; இதை படிச்சா நீங்களே சைலண்ட் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் 117 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

‘மாநாடு’ மகா வசூல்..; ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தார் சிம்பு

எனவே சிம்புவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது சிம்பு நடிப்பில் ‘மஹா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் ரீலுசுக்கு தயாராகவுள்ளன.

அண்மையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்…’ என்ற பாடல் வெளியானது.

இப்படத்தை கௌதம் மேனன் இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’ பட இசை விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

‘வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஒவர்.; சிலம்பரசன் கேரக்டர் சூப்பர்ல

சமீபத்தில் கமலின் ‘விக்ரம்’ இசை நிகழ்ச்சி இதே இடத்தில் நடைபெற்றது. அதில் சிம்புவும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இந்த விழா தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டிஆர் உடல்நலம் தேறிய பின்பு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கலாம்.

This is the reason why the Simbu Film audio release was postponed

‘தளபதி 66’ படத்தில் விஜய்யின் குழந்தைகள் இவர்களா.?

‘தளபதி 66’ படத்தில் விஜய்யின் குழந்தைகள் இவர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் தமிழ் நடிகர் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். “தனது கெரியரிலேயே பெஸ்ட்டான ஆல்பத்தை கொடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை பறந்து வந்த விஜய்..; வைரலாகும் படம்!

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் ஷ்யாம் மற்றும் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

காதலுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படம் அடுத்தாண்டு 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ல் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

விஜய் பிறந்தநாளில் தளபதி 66 – 67 ட்ரீட்க்கு ரெடியா இருங்க

இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தில் 2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய் நடிக்கப்போகிறாராம்.

இதில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் பெண்குயின் படத்தில் நடித்த அத்வைத் வினோத் ஆகியவர்கள் தான் அவரின் குழந்தைகளாக நடிக்கின்றனர்.

தங்கள் இன்ஸ்டாக்ராமில் விஜய் படத்தில் நடிப்பது பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளனர்.

Are these the children of Vijay in ‘Thalapathy 66’?

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகர் கே.கே.

‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை… பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிறப்பால் மலையாளியான கே.கே. பிறந்தது வளர்ந்தது எல்லாம் டெல்லியில்.

1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிறந்தார்.

இவர் ஹிப் ஹாப், ராக் பாடல்களை பாடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Singer KK (Krishnakumar Kunnath) biodata

ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

சிவகாசி, கில்லி, குருவி, தூள், சாமி, ஐயா, ரெட், மின்சார கனவு, ஜி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் இவரது பாடல்கள் உள்ளன.

காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே… 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன்… மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்… உள்ளிட்ட பாடல்களை இவர்தான் பாடினார்.

தமிழ் உள்பட 10 மொழிகளில் பாடியுள்ளார்.

விரைவில் வெளிவரவுள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் 2 பாடல்கள் பாடியுள்ளார். இப்படத்திற்கு ஹாரீஸ் இசை.

இந்த நிலையில் கொல்கத்தாவில் ஒரு மேடை கச்சேரியில் இந்தி பெங்காலி பாடல்களை பாடிக் கொண்டிருந்தார் கே.கே.

இவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டது.

எனவே சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கே.கே. உயிரிழந்தார்.

கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Singer KK dies at 53 while performing in Kolkata

KGF பாணியில் உருவாகும் விக்ரம் – ரஞ்சித் இணையும் படம்.; கமல் படம் எப்போது.?

KGF பாணியில் உருவாகும் விக்ரம் – ரஞ்சித் இணையும் படம்.; கமல் படம் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காலா’ & ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஜூலை / ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகரான விக்ரமை வைத்து ‘சீயான் 61’ படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷஷன் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. (முன்பு ஞானவேல் மட்டுமே தயாரிப்பதாக இருந்தது)

இந்த படங்களை அடுத்து ‘வேட்டுவம்’ ‘பிர்சா முண்டா’ உள்ளிட்ட படங்களை இயக்கவுள்ளார் ரஞ்சித்

இதன் பின்னர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்குவார் ரஞ்சித்.

2025-க்குள் இயக்க ஒப்புக் கொண்ட இந்த படங்களை முடித்துவிடுவார் ரஞ்சித் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீயான் 61 படம் கோலார் தங்க வயலை (KGF) மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக தங்கத்தை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்களை வாழ்க்கை பற்றிய கதைக்களம் இது எனவும் தெரிகிறது.

KGF style movie for Vikram-Ranjith new film; When is the Kamal movie?

குறை சொல்றவங்க சொல்லிட்டே இருப்பாங்க..; அஜித் பெயரில் அவரது மேனேஜர் கருத்து

குறை சொல்றவங்க சொல்லிட்டே இருப்பாங்க..; அஜித் பெயரில் அவரது மேனேஜர் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்குமாரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.

அஜித் தொடர்பான செய்திகளையோ அறிக்கைகளையோ இவர்தான் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார்.

இந்த நிலையில், தற்போது அஜித்தின் பெயரில் சுரேஷ் சந்திரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகிறது.

அந்த படத்தில்… ஒரு கழுதையுடன் சில மூட்டைகளை தங்கள் கைகளில் சுமந்து ஒரு தம்பதி செல்கின்றனர்.

சிலர் அந்த தம்பதியை கழுதை மேலே ஏற சொல்கின்றனர்.

சிலர் கழுதை பாவம் இறங்கி நடக்க சொல்கின்றனர். அதன் பின்னர் சிலர் அந்த தம்பதியை கழுதை மேலே ஏற சொல்கின்றனர்..

அதாவது ‘நாம் எதை செய்தாலும், அதை விமர்சிப்பவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும்’ என்ற நீதியை உணர்த்துகிறது அந்த புகைப்படம்.

இதற்கு கேப்ஷனாக, ‘இந்த குட்டி கதை, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக.. அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார்.

Comment on social media by his manager on Ajith’s name

More Articles
Follows