தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக ஆண் தேவதை அமையும்.. : தாமிரா

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக ஆண் தேவதை அமையும்.. : தாமிரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aan devathaiஅப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி. அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார்.

இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் “ஆண் தேவதை” படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது….

“படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த ஆண் தேவதையை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றி, குறிப்பாக உலகமயமாக்கல், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இந்த படம் பேசுகிறது.

ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றியை அடைகிறது. ஒன்று வெற்றிகரமான ஃபார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றியை அடைகிறது.

இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ஆண் தேவதை வெற்றியை பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சமுத்திரகனியின் நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு மேதை, அவரது கவர்ந்திழுக்கும் திரை ஆளுமையால் நம் கவனத்தை அவர் பக்கம் திருப்பி விடுவார்.

ரம்யா பாண்டியன் அவர் கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. படம் வெளியான பிறகு மக்களிடம் இருந்து அதற்காக பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆண் தேவதை படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கண்ணே கலைமானே படம் எனக்கு கிடைத்த பரிசு; உற்சாகத்தில் உதயநிதி!

கண்ணே கலைமானே படம் எனக்கு கிடைத்த பரிசு; உற்சாகத்தில் உதயநிதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinஉலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது.

அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம்.

அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை.

உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றிய எந்தவொரு பெரிய ஆச்சரியமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகிய படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்த பரிசு.

பலரும் கூறியதுபோல, சீனு ராமசாமி சாரின் திரைப்படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும், அவை நல்ல வரவேற்பை பெறும்” என்கிறார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப் மற்றும் வெற்றிக்குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா, சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்களின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த படத்தின் இசை இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிம்புவின் மாமியாரை மாற்றிய சுந்தர்.; குஷ்பூ இடத்தில் ரம்யா கிருஷ்ணன்

சிம்புவின் மாமியாரை மாற்றிய சுந்தர்.; குஷ்பூ இடத்தில் ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and ramya krishnanபவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’.

இதில் பவன்கல்யாணின் மாமியாராக நதியா நடித்திருந்தார்,

தற்போது இப்படத்தை தான் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார் சுந்தர். சி.

இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

நதியா நடித்த வேடத்தில் குஷ்பூ நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது குஷ்பூக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று ஜார்ஜியாவில் தொடங்கியது. செப்டம்பர் 27 ஆம் தேதி வரை அங்கே சூட்டிங் நடைபெற உள்ளதாம்.

ஒரு பாடல்காட்சியும், சேஸிங் காட்சியும் படமாக்கப்படவுள்ளது.

தற்போது பாடல் காட்சியின் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

என்.ஜி.கே. என்னாச்சு.? தயாரிப்பாளர் பிரபு மீது கடுப்பில் சூர்யா ரசிகர்கள்

என்.ஜி.கே. என்னாச்சு.? தயாரிப்பாளர் பிரபு மீது கடுப்பில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK postersஎஸ்ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. அதாவது நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கமே என்ஜிகே.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்க ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படம் ஆரம்பம் ஆகும் போது 2018 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப் போன பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

ரிலீஸாகாவிட்டாலும், படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்க படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் அப்படியே கிடப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணமோ..?

கமல்ஹாசனைத் தொடர்ந்து டிவி.க்கு வருகிறார் விஷால்

கமல்ஹாசனைத் தொடர்ந்து டிவி.க்கு வருகிறார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருபவர் விஷால்.

இவர் அண்மையில் தனது ரசிகர் மன்றங்கள் மக்கள் நல இயக்கமாக மாற்றினார்.

இந்நிலையில் தற்பேது கமல்ஹாசனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிறார் விஷால்.

தெலுங்கில் லக்‌ஷ்மி மன்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் ஓடக்கூடிய ப்ரோமோவை சன் டி.வி வெளியிட்டுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில், ‘விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா..?.’ என கேட்ட படியே நடந்து வருகிறார் விஷால்.

*காலா* மருமகள் சுகன்யாவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

*காலா* மருமகள் சுகன்யாவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala fame Singapore Suganya got posting in Rajini Makkal Mandramநடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த பின்னர் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினிகாந்த்.

விரைவில் கட்சி பெயர், கட்சி கொடி அனைத்தையும் அவர் அறிவிப்பார் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் சினிமா சூட்டிங் என பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வெளிநாடுகளில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ரஜினி.

இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாம்.

அண்மையில் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து நடிகை சுகன்யா பேசியதாவது… “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் அங்கேயும் உள்ளது-

ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம்.

ரஜினிகாந்த் முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. எனவே இவரை சிங்கப்பூர் சுகன்யா என்றே அழைக்கின்றனர்.

Kaala fame Singapore Suganya got posting in Rajini Makkal Mandram

More Articles
Follows