தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.
இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதேபோல் சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 80 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75 லட்சம் மதிப்புள்ள காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்கள் யார்? யார்?
ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் நாசர், பொன்வண்ணன், பாடகர் ஹரிச்சரண் உள்ளிட்டோர் பெற்றனர்.
மேலும் களவாணி, மைனா, கும்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றன.
சிறந்த பாடலாசிரியருக்காக மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டன. அவரின் சார்பில், அவரின் மகனும், மகளும் மேடையில் பெற்றனர்.
நடிகர் – நடிகைகள் & கலைஞர்கள்…
விக்ரம், அஞ்சலி, ஜீவா, ஆர்யா, பாண்டிராஜ், பாபி சிம்ஹா, ராகவன், ஹெச்.வினோத், ஐஸ்வர்யா ராஜேஷ், கரண், சித்தார்த், தம்பி ராமையா, சமுத்திரகனி, மாஸ்டர் கிஷோர், ஸ்ரீராம், ‛ஆடுகளம்’ நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, ஆர்த்தி கணேஷ், லிங்குசாமி, எஸ்.ஆர்.பிரபாகரன், சுகுமார், சரத்பாபு, மஹதி, விக்ரம் பிரபு, வசந்தபாலன், பிரபு சாலமன், ராம், நாசர், இமான், ஸ்வேதா மோகன், விடியல் ராஜ், ஜெயபிரகாஷ், எஸ்.பி.பி.சரண், லியோ ஜான்பால், இனியா, களவாணி எஸ்.திருமுருகன், பொன்வண்ணன், சற்குணம், பாடகர் கார்த்திக், தேவதர்ஷினி, ராதா மோகன், அனல் அரசு, சூப்பர் சுப்பராயன், ஷோபி, ஜி.ஆர்.கே.கிரண், செல்வி சாதனா, ஜே.சதீஷ் குமார், ஹரிச்சரண், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், சந்தானம்(கலை இயக்குனர்), காயத்ரி ரகுராம், மாஸ்டர்ஸ் ரமேஷ், விக்னேஷ்(காக்க முட்டை) நீரவ்ஷா, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளை பெற்றனர்.
Tamil Nadu Government Film Awards (2009-2014) : Award winning artists movies details