மீண்டும் ரீ-ரிலீசாகும் ‘சுப்ரமணியபுரம்’.; சசிகுமார் அறிவிப்பு

மீண்டும் ரீ-ரிலீசாகும் ‘சுப்ரமணியபுரம்’.; சசிகுமார் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சசிகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’.

இப்படத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீசாக உள்ளது.

இதனை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியபுரம்

Sasikumar’s ‘Subramaniapuram’ rereleases in theatres after 15 years

சூர்யா – துல்கர் சல்மான் கூட்டணியை இணைக்கும் பிரபல இயக்குநர்

சூர்யா – துல்கர் சல்மான் கூட்டணியை இணைக்கும் பிரபல இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து சூர்யாவின் பிறந்த நாளன்று ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்நிலையில், சூர்யாவின் 43வது படத்தின் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சூர்யாவின் 43வது படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா

director Sudha Kongara says suriya and dulquer salmaan joins for a suriya 43 movie

ஐஸ்வர்யா நடித்த காட்சிகளை நீக்கி விட்டு புதிய காட்சியை வெளியிட்ட கௌதம் மேனன்

ஐஸ்வர்யா நடித்த காட்சிகளை நீக்கி விட்டு புதிய காட்சியை வெளியிட்ட கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இப்பட டீசர் வெளியானது. மேலும் இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இப்படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடலையும் படக்குழு நீக்கியது.

இந்நிலையில், ‘ஒரு மனம்’ பாடல் புதிய காட்சிகளுடன் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

‘Dhruva Natchathiram’ makers release the new version of the ‘Oru Manam’ song

யாராச்சும் பிரச்சனை செஞ்சா விஷால் இருக்காரு சொல்லுங்க.; பூமிக்கும் லஞ்சம் கொடுக்குறாங்க – விஷால்

யாராச்சும் பிரச்சனை செஞ்சா விஷால் இருக்காரு சொல்லுங்க.; பூமிக்கும் லஞ்சம் கொடுக்குறாங்க – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 8-வது நினைவு தினம் சென்னையில் வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் கனவான மரம் நடுவது, இயற்கையை காப்பது என்கிற வேண்டுகோளுக்கு இணங்க தனது தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மெகா மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் நடிகர் விஷால்.

இந்த நிகழ்வில் நடிகர் விஷால் பேசும்போது… “எனக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் பகத்சிங். இன்னொருவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா.

நம் நாட்டின் குடியரசுத் தலைவர் என்கிற அந்த பதவிக்கு மிகப்பெரிய மரியாதை அளித்தவர் ஏபிஜே அப்துல் கலாம் மட்டும்தான்.

தம்பி விஜய் வர்மா விவசாயிகளுக்கு பயன்படும் விதத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அப்துல் கலாம் போல இவரும் உலக அளவில் புகழ் பெறுவார்.

அவர் கண்டுபிடித்துள்ள அந்த கருவிகளை நானே வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்கப் போகிறேன். சாதிக்கத் துடிப்பவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், கைதட்டல் இவைதான் மேலும் மேலும் ஊக்கம் கொடுக்கும்.

என் தாயின் பெயரில் தேவி அறக்கட்டையை துவங்கி படிக்கும் ஆர்வமுள்ள, வசதியற்ற மாணவிகளுக்கு கல்லூரி படிப்பை வழங்கும் விதமாக என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்.

அப்படி நான் இங்கே சேர்த்துவிட்ட சகோதரி ஒருவர் கிடைத்த வாய்ப்பு பயன்படுத்தி மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்து எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மூன்று வருட கல்லூரி படிப்பில் புத்தகத்தில் படிப்பதை விட இங்கிருக்கும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் கை கொடுக்கும்.

மரம் நடு விழாவில் கலந்து கொண்டு மரம் நட்டோம் சென்றோம் என்று இல்லாமல் அது வளர்ந்து வலுவாக நிற்கும் வரை அதன் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அப்படி வளரும் வரை நான் எனது நபர்கள் மூலமாக அவற்றை கண்காணிப்பேன். அப்படித்தான் எனது தங்கைகளுக்கும் பின்னால் அவர்களுக்கு பாதுகாப்பாக நான் எப்போதும் இருப்பேன். யாராவது உங்களிடம் பிரச்சனை செய்தால் எனக்கு ஒரு அண்ணா இருக்கிறார், அவர் பெயர் விஷால் என்று நீங்கள் தைரியமாக சொல்லுங்கள்.

இன்று இயற்கை மாசுபடுவதற்கு ஒரு வகையில் நாமும் காரணம்.. இயற்கை கொந்தளிக்கும் போது தான் சுனாமி, சைக்லோன் போன்றவை வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இயற்கைக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகள் பல பேர் தாங்கள் வாங்கும் லஞ்சப்பணத்தை பூமிக்கு அடியில் தோண்டி புதைத்து வைப்பதன் மூலம் பூமித்தாய்க்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்.

2010ல் இருந்த சமூகம் வேறு.. இப்போது இருக்கும் சமூகம் வேறு.. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞரும் சோசியல் மீடியாவில் தினமும் நான்கு மணி நேரம் செலவிடுகிறார்கள். அதை குறை சொல்லவில்லை. அதை உங்களுக்கு பிடித்த வகையில் பயன்படுத்துங்கள்.

அப்துல் கலாம் எப்படி விஷன் 2020 என்று கனவு கண்டாரோ, அதேபோல தான் அவருடைய மாணவனாக நானும் இந்த சமுதாயத்திற்கு என்னால் இயன்ற பணிகளை செய்வேன்.

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மட்டுமல்ல, ராமேஸ்வரத்தில் இருக்கும் கல்லூரிகள் வரை எங்களது இறக்கைகளை விரித்து இதுபோன்று என்னுடைய தங்கைகளை படிக்க வைக்கும் முயற்சியை எடுப்போம்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று தான் கொடுக்க வேண்டும் என இல்லை.. பசித்தவர்களுக்கு 50 ரூபாய்க்கு அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்கள் வயிறு நிறைந்து வாழ்த்தினாலே அது கடவுள் வாழ்த்து போல தான்”

என்று விஷால் பேசினார்.

விஷால்

If anybody troubles you tell them my name says Vishal

BREAKING சூப்பர் ஸ்டார் பட்டம் தொல்லை.; இருவருக்கு மட்டுமே பயம்..- ரஜினி ஓபன் டாக்

BREAKING சூப்பர் ஸ்டார் பட்டம் தொல்லை.; இருவருக்கு மட்டுமே பயம்..- ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது (ஜூலை 28 இரவு 9.30) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது..

உங்கள் அன்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி கலாநிதி மாறன்.. உங்கள் பேச்சின் மூலம் நீங்கள் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.

இயக்குநர் நெல்சன் எதற்காகவும் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அவருக்கு திருப்தி ஆகும் வரை படமாக்கிக் கொண்டே இருந்தார்.

வசனக் காட்சிகளை படமாக்கிய பின்னர் ‘காவலா…’ பாடல் படமாக்கி கொண்டிருந்தபோது என்னுடைய கால்ஷீட் ஆறு நாட்கள் மட்டுமே மீதம் இருந்த

மூன்று நாட்கள் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஆனால் என்னை அழைக்கவே இல்லை.. பின்னர் கண்ணா இங்கே வா.. ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.

உங்களுக்கு ஸ்டெப் இருக்கு சார் ஆனால் ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றார்கள்..

(பின்னர் சிரித்தபடியே ரஜினி பேசியதாவது) தமன்னாவும் டான்ஸ் மாஸ்டர் ஜானியும் இணைந்து அந்த பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்கள். பெரும் சூப்பர்ஹிட் ஆகிவிட்டது.

ஹுக்கும்… தலைவர் அலப்பறை பாடல் வரிகளை பார்த்தேன். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை நீக்க சொன்னேன்.. சூப்பர் ஸ்டார் டைட்டில் என்றைக்குமே தொல்லை தான்.

சில வருடங்களுக்கு முன்பே நான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்க சொன்னேன்.. அப்போது நான் பயந்துவிட்டேன் என்றார்கள்.. நான் இருவருக்கு மட்டும்தான் பயப்படுவேன்.. ஒருவர் கடவுள் மற்றவர் மக்கள்.

நான் காக்கா கழுகு என்று சொன்னா அவரைத்தான் சொல்றாங்க இவரைத்தான் சொல்றாங்கன்னு சோசியல் மீடியாவுல போடுவாங்க.

குறைக்காத நாயும் இல்ல.. குறை சொல்லாத வாயும் இல்ல.. ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல.. நாம நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்.. அர்த்தமாயிந்தா ராஜா..

10 வருடங்களுக்கு முன்பு கன்னடம் படங்களை பற்றி அதிகம் வெளியே தெரியாது.. தற்போது கேஜிஎப், காந்தாரா படங்கள் கன்னட படங்களுக்கு பெரிய அறிமுகம் கொடுத்துள்ளது.

அதுபோல தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா ஆகிய படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

தமிழிலும் அதுபோல பிரம்மாண்ட படங்கள் வரவேண்டும். பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் தியேட்டருக்கு நிறைய லாபம் கிடைக்கும். எல்லோரும் சம்பாதிக்கலாம்.. எல்லாரும் நம்முடைய சகோதரர்கள் தான்.

சிவராஜ்குமார் பற்றி பேசும்போது..
ஒருத்தர பெரிய ஆளோட பிள்ளைன்னு சொல்றது ஈசி ஆனா அந்த பேர காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்..

மோகன்லால் பற்றி பேசும்போது..

அவர் எளிய மனிதர்.. சிறந்த நடிகர் என புகழ்ந்து பேசினார்..

தமன்னாவை பற்றி பேசும்போது அவர் ஆன்மீக பற்று உள்ளவர்.. என்று பாராட்டினார்.

ரஜினிகாந்த் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மேடை ஏறி ய ரம்யா கிருஷ்ணன் மைக்கை பற்றி கொண்டு பேசியதாவது..

“வயசானாலும் உங்க ஸ்டைல் உங்கள விட்டு போகாது.. என படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி வசனத்தை பேசி காட்டினார். அப்போது ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது..

இறுதியாக மதுபானம் பற்றி ஒரு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார். எப்போதாவது குடிக்கலாம்.. ஆனால் எப்பொழுதும் குடித்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கெடுக்காதீர்கள் என்றார் ரஜினிகாந்த்.

Rajini open talk about SuperStar title issue

BREAKING பீஸ்ட் தோல்வியால நெல்சனை மாத்த சொன்னாங்க.; இது என்னடா புதுசா இருக்கு – ரஜினி ஓபன் டாக்

BREAKING பீஸ்ட் தோல்வியால நெல்சனை மாத்த சொன்னாங்க.; இது என்னடா புதுசா இருக்கு – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் இறுதியாக ரஜினிகாந்த் மேடை ஏறி பேசினார்.. அவர் மேடை ஏறும்போது ரசிகர்கள் கரகோஷத்தில் விசில் சத்தத்தில் நேரு ஸ்டேடியம் அதிர்ந்தது.

ரஜினி பேசியதாவது…

“அண்ணாத்த படத்திற்குப் பிறகு நிறைய இடைவெளி விட்டு விட்டேன். நிறைய கதைகள் வந்தன. அவையெல்லாம் பாட்ஷா அண்ணாமலை டைப்பில் இருந்தன.

எனவே நிறைய கதைகளை தவிர்த்து வந்தேன். ஒரு கட்டத்தில் நிறைய கதைகளை தவிர்ப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது.. எனவே கதைகள் கேட்பதை நிறுத்தி வைத்தேன்.

ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் அம்மா போன்றவர் என்றால் இயக்குனர் அப்பா போன்றவர்.

என் வாழ்க்கையில் பல இயக்குனர்கள் எனது சினிமா பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.

முத்துராமன் மகேந்திரன் சுரேஸ் கிருஷ்ணா பி வாசு கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ். இவர்கள் வரிசையில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார்.

நெல்சன் இடம் கதை கேட்க அவரை நான் வர சொன்னேன். காலை 10 மணிக்கு அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் நான் லேட்டாக எழுந்திருப்பவன். எனவே லேட்டாக வருகிறேன் என்றார்.

எனவே நான் அவருக்கு காலை 11:30 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தேன். ஆனால் அவர் அப்போதும் வரவில்லை. 12 மணிக்கு மேல் தான் வந்தார். வந்தவுடன் என்ன வேண்டும் என கேட்டேன். நல்லதா ஒரு காபி சொல்லுங்க என்று சொன்னார் நெல்சன்.

நெல்சன் எனக்கு ஒன் லைன் ஸ்டோரி சொன்னார். நான் கதையை விரிவாக கேட்டேன்.. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து வந்து முழுக்கதை சொன்னார். கதை சிறப்பாக இருந்தது.

நாங்கள் ‘ஜெயிலர்’ படத்தின் அறிவிப்பை வெளியிடும்போது ஒரு பிரமோ வீடியோ வெளியிட்டோம். அதன் பிறகு தான் ‘பீஸ்ட்’ படம் வந்தது. ‘பீஸ்ட்’ படம் தோல்வி அடைந்ததால் பல விநியோகஸ்தர்கள் என்னை தொடர்பு கொண்டு இயக்குனரை மாற்ற சொன்னார்கள்.

அதன் பின்னர் நாங்கள் சில பேர் சன் நிர்வாகத்தை சந்தித்து பேசினோம். அப்போது அவர்களும் ஆமாம் படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் தான் வருகின்றன. ஆனால் எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் படம் லாபம் தான் என்றனர்.

அதன் பின்னர் ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அப்போது முதல் காட்சி எடுத்த பின்னர் எனது முதல் காதலை பற்றி கேட்டார் நெல்சன். ஏன்? என் காதல் பற்றி கேட்கிறீர்கள் என கேட்டேன்.

எனக்கு கொஞ்சம் எனர்ஜி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றார் நெல்சன். இது என்னடா புதுசா இருக்கே.? என்று நினைத்தேன்.

இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.

Rajini open talk about Vijays Beast movie failure

More Articles
Follows