சுஜா வருணி திருமணத்தை ஒரு அப்பாவாக நடத்தி வைக்கும் கமல்

சுஜா வருணி திருமணத்தை ஒரு அப்பாவாக நடத்தி வைக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and suja varuneeஅண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி.

இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ் என்ற சிவகுமாருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை கமல்ஹாசனை சந்தித்து நேரில் வைத்துள்ளார் சுஜா.

இதுபற்றி அவர் கூறும்போது ‘என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்தி வைக்க உள்ளார்.

என் தந்தை இறந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துகொண்டு கமல் தான் என் திருமணத்தின்போது தந்தை இடத்தில் இருக்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.

தற்போது என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்’ என்றார்.

*மூடர் கூடம்* நவீன் இயக்கத்தில் இணையும் இரண்டு விஜய்கள்

*மூடர் கூடம்* நவீன் இயக்கத்தில் இணையும் இரண்டு விஜய்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

moodar koodam naveen‘மூடர் கூடம்’ படத்தில் நடித்து இயக்கி தயாரித்தவர் நவீன்.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இதில் 2 விஜய்கள் இணைந்துள்ளனர். அதாவது ஒருவர் விஜய் ஆண்டனி. மற்றொருவர் அருண் விஜய்.

ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை வெளியிட உள்ளனர்.

ஹாரிஸ் இசையில் கார்த்திக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஹாரிஸ் இசையில் கார்த்திக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spbஅறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் ‘தேவ்’. இதில் இவர் கபில்தேவ் ரசிகராக நடிக்கிறார்.

கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை சூர்யா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா…’ என்ற பாடலை பாடியிருந்தார் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பி நாராயணனை நம்பி இயக்குனராக களமிறங்கிய மாதவன்

நம்பி நாராயணனை நம்பி இயக்குனராக களமிறங்கிய மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor madhavanகேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன்.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்த இவர், அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதனையடுத்து சில நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது இவரின் வாழ்க்கை படமாக உருவாகியுள்ளது. நடிகர் மாதவன், நம்பி நாராயணாக நடிக்கிறார்.

‘ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் தயாராகிறது.

தமிழில் ராக்கெட்ரி நம்பி விளைவு என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ராக்கெட்டரியில் 35 ஆண்டுகளும், ஜெய்லில் 50 நாட்களும் வாழ்ந்திருக்கிறேன். இந்த 50 நாளில் என் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான் இந்த கதை, என்னைப்பற்றி அல்ல என டீசரில் மாதவன் சொல்வது போல உள்ளது.

இப்படத்தை ஆனந்த் மகாதேவன் உடண் இணைந்து நடிகர் மாதவனும் இயக்கியுள்ளார்.

இதன்மூலம் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி உள்ளார் மாதவன்.

ஏற்கெனவே எவனோ ஒருவன், இறுதிச்சுற்று ஆகிய படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.சுரேஷின் *பில்லா பாண்டி* படத்திற்கு தடைகோரி வழக்கு

ஆர்.கே.சுரேஷின் *பில்லா பாண்டி* படத்திற்கு தடைகோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

billa pandi posterபத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள நண்பர்களுக்கு வணக்கம் ஆர்.கே.சுரேஷ் நடப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ‘பில்லா பாண்டி’ இந்த படத்தினை திரு.கே.சி.பிரபாத் ஜே கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்….
இவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான திரு ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம்
‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம்
என ஆசைவார்த்தை கூறி படம் 60% எடுத்துக்கொண்டிருக்கும்போது மேற்குறிப்பிட்ட திரு கே.சி.பிரபாத் அவர்கள் புதிதாக படம் எடுக்கப்போகிறேன் என்று
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு ஏ.ஜமால் சாகிப் அவர்களை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லாபாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.

ஏன் என்று விளக்கம் கேட்டபோது…’பில்லா பாண்டி’படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்…

ஆனால் இதுவரை மேற்படி
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு.ஏ.ஜமால் சாகிப் அவர்களுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் திரு.கே.சி.பிரபாத் அவர்கள் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ராஜலட்சுமிக்கு நேர்ந்த கொடுமையை யார் பேசுவது..? : ராஜாவுக்கு ராஜா விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

ராஜலட்சுமிக்கு நேர்ந்த கொடுமையை யார் பேசுவது..? : ராஜாவுக்கு ராஜா விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karu pazhaniappanஅக்கூஸ் புரொடக்‌ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது, ‘இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார்.

படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய்? எது உண்மை? என்பதே தெரியவில்லை.

சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும்.

பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது” என்றார்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

More Articles
Follows