*ஆண் தேவதை* ரிலீசில் கட்டப் பஞ்சாயத்து.; டைரக்டர் தாமிரா குமுறல்

Aan Devadhai Director Thamira talks about his loss in movie releaseதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த ஆண் தேவதை படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் வெளியீட்டின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் தாமிரா.

இயக்குனர் தாமிரா கூறியதாவது…

ஆண் தேவதை படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகள் வந்தன.

விநியோகஸ்தர்கள் சங்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.

3.20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்தேன். ஆனால் ரூ. 20 லட்சத்திற்கு தான் படம் விற்பனையானது. இதனால் எனக்கு ரூ. 2.5 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

இங்கு சிறிய படங்களை பிழைக்க விடுவதில்லை. சிறு படங்களுக்காக வணிகம் நடந்தால் தான் சினிமா உயிர்ப்போடு இருக்கும்.

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 130 திரையரங்குகளில் தான் படம் வெளியானது. மேலும் காட்சிகளுக்கும் சரியான நேரம் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் பார்க்கும் வகையில் காட்சிகளின் நேரம் அமையவில்லை.

இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். மாலைக் காட்சியில் தான் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் அதிகம். ஆனால் ஆண் தேவதைக்கு காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளே கிடைத்தது.

நல்ல படங்களை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். படங்களுக்கு விளம்பரம் செய்தாலும், வாய்வழியாகப் பேசப்படும் தகவல்கள் தான் படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கிறது.

சிறிய படங்களுக்கான பிரச்சனைகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் வினியோகஸ்தர்கள் சங்கத்திலும் பேசுகிறார்கள். ஆனால் தீர்வு இல்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. கதிரேசன் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டாலும் அவர்களிமும் தீர்வு இல்லை. என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தாமிரா.

Aan Devadhai Director Thamira talks about his loss in movie release

Overall Rating : Not available

Related News

அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
...Read More
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து…
...Read More
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன்,…
...Read More

Latest Post