ஆண் தேவதை-க்கு வந்த சோதனை; மக்களை நம்பி காத்திருக்கும் தாமிரா

ஆண் தேவதை-க்கு வந்த சோதனை; மக்களை நம்பி காத்திருக்கும் தாமிரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thamira request audience to support Aan Dhevadhaiதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ராதாரவி, சுஜாவருணி ஆகியோர் நடித்த படம் ஆண் தேவதை.

கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்றை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வட்டிக்கு வாங்கி படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் வட்டியற்ற திரைப்படமாக ஆண் தேவதை திரைப்படத்தினை எடுத்து முடித்தோம்.

அதன் தொலைக்காட்சி உரிமை ஒரு நல்ல விலைக்கு விற்கப்பட்டது படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. இதுவரை எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது.

தமிழ்நாடு திரையரங்க விற்பனை உரிமைக்காக விநியோகஸ்தர்களை அனுகியபோது வியாபாரத்தில் எங்கள் அனுபவமின்மையை பயன்படுத்தி எங்களிடமிருந்து திருச்சி விநியோகிஸ்தர்கள் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் ஒருவர் ஒன்றே முக்கால் கோடி என விலை பேசி நாற்பத்தியோரு லட்சம் முன் பணமாக தந்தார்.

கடந்த மூன்று மாதகாலமாக பட வெளியீட்டு தேதியை மாற்றி மாற்றி சொல்லி தட்டிக்கழித்தபடியே இருந்தார். மேற்கொண்டு பணமும் தரவில்லை.

இதற்கிடையே அவர் எங்களுக்குக் கொடுத்த நாற்பத்தியோரு லட்சமும் வட்டிக்கடன்.

அந்தக் கடனுக்காக எங்கள் திரைப்படத்திற்கு ரெட்கார்டு போடப்பட்டது. ஒரு பைசா வட்டிக்கு வாங்காமல் அங்கங்கிருந்து நண்பர்கள் பணத்தை புரட்டி எடுக்கப்பட்ட படத்திற்கு ரெட் கார்ட்.

நிலைகுலைந்து போனோம். அந்த விநியோகஸ்தர் வாங்கிய பணத்திற்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டி வந்தது.

நாற்பத்தியோரு லட்சம் வாங்கிய பணத்திற்கு மூன்று மாதத்தில் ஐம்பது லட்சம் பணம் கட்ட வேண்டியதாயிற்று. சரி சூழல் நமக்கெதிராக வலுவான நிலையெடுத்திருக்கிறது.

இந்த பணத்தை கட்டி படத்தை நாமே வெளியிடுவோம் என்று தீர்மானித்து கடன் வாங்கி பணத்தை கட்டினோம், அதன் பின் ஒவ்வொரு பூதமாக கிளம்பியது.

இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை நியூ ஆர் எஸ் எம் பிலிம்ஸிற்கு வழங்கியிருக்கிறோம் என எங்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்த ஒரே காரணத்திற்காக அந்த நபர் முன்னம் பெற்றிருந்த அனைத்து கடனுக்கும் ஆண் தேவதை திரைப்படமே பொறுப்பு என்கிற நிலையை சங்கம் உருவாக்கியது.

அந்த வகையில் மேலும் ஐம்பத்தியாறு லட்சத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் ஆண் தேவதை வெளியாகவே ஆகாது என்கிற சூழ்நிலை உருவாகியது.

எங்களுக்கு வேறு வழியில்லை. சங்கத்திற்கு எங்கள் மேலெந்த தவறும் இல்லையென்று தெரியும். தெரிந்தும், இவ்வாறான ஒரு தீர்வினை முன் வைத்தது.

ரிலீஸிற்கான தேதியை மூன்றாம் முறையாக அறிவித்திருந்தோம். இதையும் தள்ளிவைத்தால் இனி திரைப்படமே வெளியாகாது என்கிற சூழ்நிலை.

எட்டுஆண்டுகள் கழித்து எனது திரை முயற்சி ஒரு நல்ல திரைப்படம் என பார்த்தவர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம்.

இனி மக்களை நம்பி திரைப்படத்தினை வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில் திரையரங்கத்திற்கு படத்தினை கொண்டு வந்தோம்.

கடைசி நேர நெருக்கடியில் ஒரு குடும்பத்திரைப்படம் வெளியாக வேண்டிய திரையரங்கங்கள் கிடைக்கப் பெறாத நிலை. என்ற போதும் நல்ல திரையரங்கில் நல்ல வசூலைப் பெற்றது ஆண் தேவதை. மற்ற திரையரங்கில் பார்த்தவர்கள் எல்லோரும் நல்ல திரைப்படம் என பாராட்டும்படியாக இருக்கிறது.

படம் மெல்ல மக்கள் கருத்தில் கவனம் பெறும் தருணத்தில் வடசென்னை, சண்டக்கோழி2 என இரண்டு பெரிய திரைப்படங்களின் வருகை.

இத்தனையும் தாண்டி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஆண் தேவதை வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறான்.

பெரிதாக விளம்பரம் செய்யும் வாய்ப்பில்லை. இப்போது சமூக வலைத்தளங்களையும் மக்கள் ரசனையையும் மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம்.

அருகிலிருக்கும் திரையரங்கில் ஆண் தேவதையைப் பாருங்கள்.

இது நல்ல படமென உணரும் பட்சத்தில் உங்கள் அக்கம் பக்கத்தினரிடம் படம்பற்றி கருத்துச் சொல்லுங்கள்.

உங்கள் சொல் எங்களின் வெற்றியாகட்டும்.. எங்களை இழப்புகளிலிருந்து மீட்கட்டும்.

Director Thamira request audience to support Aan Dhevadhai

aan devadhai team

சினிமாவில் மட்டுமே எங்களுக்கு போட்டி; தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

சினிமாவில் மட்டுமே எங்களுக்கு போட்டி; தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR wishes Dhanush for his Vadachennai movie releaseவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

எனவே தனுஷின் நண்பரும் நடிகருமான சிம்பு என்ற எஸ்.டி.ஆர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்து செய்தியில்…

“அன்புக்குரிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் ‘வடசென்னை’ படக்குழுவுக்கு என் சார்பாகவும், என் குடும்பம் மற்றும் ரசிகர்கள் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரையில் எங்களுக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. என் ரசிகர்களும், என்னைப் பின்தொடர்பவர்களும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். ‘வடசென்னை’ வெற்றிப்படமாக அமையும்” என்று கூறியுள்ளார்.

STR wishes Dhanush for his Vadachennai movie release

சூர்யாவின் *என்ஜிகே* ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யாவின் *என்ஜிகே* ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer SR Prabu statement about NGK release dateசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.

இதில் ரகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்த 2018 தீபாவளிக்கு திரைக்கு வர வேண்டிய இப்படம் தாமதமானதால் சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில, என்ஜிகே பட ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அதில், கேவி ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா,. அதை முடித்து திரும்பியதும் என்ஜிகே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நவம்பரில் ஆரம்பிக்கிறோம்.

சூட்டிங்கை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். இப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக தருவோம்” என தெரிவித்துள்ளார்.

Producer SR Prabu statement about NGK release date

மனதளவில் கம்யூனிஸ்ட்; கட்சியில் இல்லை. திவ்யா சத்யராஜ் விளக்கம்

மனதளவில் கம்யூனிஸ்ட்; கட்சியில் இல்லை. திவ்யா சத்யராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajநடிகர் சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், தனியார் நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, திவ்யா சத்யராஜ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இதற்கு தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார் திவ்யா சத்யராஜ்.

“நான் மனதளவில் கம்யூனிஸ்ட்.

கம்யூனிஸம்தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும். எனக்கு நல்லகண்ணு அய்யாவைப் பற்றி நன்கு தெரியும்.

ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு எளிமையுடனும் சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்.

சாதிகளற்ற சமூகத்தின் கொள்கைகளுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடியவர்.

என்னுடைய நோக்கம், ஏழை குழந்தைகளுக்குப் போதுமான சத்துள்ள சரிவிகித உணவை அக்‌ஷய பாத்திர மதிய உணவுத் திட்டம் மூலம் கிடைக்கச் செய்வதாகும்” எனத் தெரிவித்துள்ளார் திவ்யா.

ரஜினி செஞ்சிட்டார்; ஆனால் விஜய்க்கு முன்பே முந்திக் கொண்ட யோகி பாபு.

ரஜினி செஞ்சிட்டார்; ஆனால் விஜய்க்கு முன்பே முந்திக் கொண்ட யோகி பாபு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuசர்கார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை (2.0 படம் 3டியில் உருவானது) போல விஜய்யும் ஒரு 3டி படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டார் சன் டிவி கலாநிதி மாறன்.

விஜய் எப்போ 3டியில் நடிப்பார் என தெரியல. ஆனால் காமெடி நடிகரான யோகிபாபு முந்திக் கொண்டுள்ளார்.

விஜய்யுடன் ‘சர்கார்’ மற்றும் அஜித்துடன் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், விரைவில் கூர்கா படத்தில் ஹீரோ போன்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், 3டி-யில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறாராம் யோகி பாபு. இதில், வேதாளமாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை, ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.

நம் வீட்டு பெண்களை சிறந்த பெண்ணாக மாற்ற வரும் *பட்டறை*

நம் வீட்டு பெண்களை சிறந்த பெண்ணாக மாற்ற வரும் *பட்டறை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pattaraiபெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், ‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு தான். ‘

இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், ‘பட்டறை’ மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.

“நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம்.

அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்” என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.

அவர் மேலும் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.

ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.

முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.

மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

More Articles
Follows