தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் இயக்குனர் பாரதிராஜா இருவரும் இணைந்து நடித்த படம் ‘ரெட்டைச் சுழி’.
இந்த படத்தை இயக்கியவர் தாமிரா.
அதன் பின்னர் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடித்த ‘ஆண் தேவதை’ படத்தையும் இயக்கியிருந்தார்.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் இயக்குனர் தாமிரா (53 வயது).
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தாமிரா.
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Aan devathai director Thamira died due to Corona