தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற அக்டோபர் 12ஆம் தேதி ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா இயக்கியுள்ள ஆண் தேவதை படம் வெளியாகிறது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் தன் அனுபவம் குறித்து சுஜா வருணி பேசும்போது…
“தாமிரா சார் போனில் இந்த கதையை சொன்னவுடனேயே இதில் நடிக்கவேண்டும் என எனக்கு தோன்றியது. அவரோட ரெட்டசுழி படமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது. இதில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப்போகும் பெண்ணாக வருகிறேன்.
இன்றைய சமூகத்தில் எப்படி ஸ்டைலிஷா வாழலாம் என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னை திட்டாம படம் பாருங்க” என முன்கூட்டியே மன்னிப்பு கோரிக்கை விடுக்கிறார்.