‘மோடியை பாராட்டிய ரஜினி கணக்கு காட்டுவாரா..?’ அமீர் கேள்வி

‘மோடியை பாராட்டிய ரஜினி கணக்கு காட்டுவாரா..?’ அமீர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ameerசென்னை, தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கனிமொழி, நல்லகண்ணு, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் அமீர் பேசும்போது…

“மோடியின் புதிய திட்டத்தால், புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ரஜினிகாந்த் சொல்கிறார்.

பழைய இந்தியாவில் ‘கபாலி’ படம் வெளியானதே அதற்கு தியேட்டரில் டிக்கெட்டுகள் என்ன விலைக்கு விற்றது என்று தெரியுமா?

அரசு நிர்ணயித்த விலையிலா டிக்கெட்டுகளை விற்றார்கள்? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன?

அத்தனையும் கணக்கில் வருகிறதா? உங்களால் அந்த கணக்கை காட்ட முடியுமா?

ரூ. 200 டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது” என்று அனல் பறக்க பேசினார் அமீர்.

‘லிங்கா’ படத்தலைப்பை வழங்கியவர் இயக்குனர் அமீர். அதற்கு படக்குழு சார்பில் அப்போது அமீருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

அந்த விழாவில் ரஜினியை மிகவும் புகழ்ந்து பேசினார் அமீர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

‘ஃபீல் பண்ற விஜய் ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ணலாமே…’ வானதி சீனிவாசன்

‘ஃபீல் பண்ற விஜய் ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ணலாமே…’ வானதி சீனிவாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vanathi Srinivasan reaction to vijays speech about Demontisationகறுப்பு பணத்திற்கு எதிராக பிரதமர் எடுத்த நடவடிக்கையை நடிகர் விஜய் இன்று காலை பாராட்டி பேசினார்.

அதே சமயம் இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்தாகவும், முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன் கூறியதாவது…

‘சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

இதுதான் இந்த நாட்டு மக்களின் மனநிலை. மக்களின் துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது” என்றார்.

இதுகுறித்து பிஜேபியை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது…

‘நாட்டில் உள்ள ஏழை மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களும் மற்றவர்களைப்போல இந்த நாட்டின் அனைத்து வசதிகளையும் பெற்று வாழ வேண்டும்.

எனவேதான் ‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல்’ என்று பல்வேறு திட்டங்களை பிரதர் மோடி கொண்டு வந்தார்.

‘ஒரு பெரியவர் பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்துவிட்டதாகவும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் இதற்கு முன்பும் நிறைய பேர் இறந்துள்ளனர்.

ஏழைகள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தேவைக்கு போக மீதியை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டு ஏழைகளுக்கு உதவலாமே.

அறிக்கைவிடுவதை விட்டுவிட்டு, மக்களின் கண்ணீரை துடைக்க உதவுங்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்குதான் பயம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.

ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணையும் த்ரிஷா.?

ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணையும் த்ரிஷா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trisha hotகபாலியை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ரஜினி மற்றும் ரஞ்சித் இணைய உள்ளனர்.

தனுஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

இதற்காக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங்குக்கு தேவையான பகுதிகளை பார்த்து திரும்பியுள்ளார் ரஞ்சித்.

இந்நிலையில், இதில் நாயகியாக த்ரிஷா நடிக்கக்கூடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை இதுபோன்ற செய்திகளை வந்துக் கொண்டேத்தான் இருக்கும். எது உண்மையோ…?

சைத்தானுக்கு பயம்… கடவுள் இருக்கான் தைரியத்தில் ஜிவி. பிரகாஷ்

சைத்தானுக்கு பயம்… கடவுள் இருக்கான் தைரியத்தில் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadavul irukaan kumaru stillsபிரதமர் மோடியின் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால், மக்கள் சில்லரை பிரச்சினையால் தவிக்கின்றனர்.

இதனால் மக்கள், சினிமா, பார்க், பீச் உள்ளிட்ட தங்கள் பொழுதுபோக்குகளை குறைத்துவிட்டு அன்றாட தேவைகளுக்கு மட்டுமே பணம் செலவழித்து வருகின்றனர்.

இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

பெரும்பாலான படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் இந்த வாரம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாக இருந்தது.

தற்போது பின்வாங்கியுள்ளது.

ஆனால் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு இந்த வாரம் நவம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

முன்பு நவம்பர் 10இல் இருந்து 17ஆம் தேதிக்கும் தற்போது 18ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

சூர்யாவுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ்3 (சிங்கம்3) டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.

எனவே படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் ‘சிங்கம் குரூப் திருச்சூர்’ என்ற மன்றத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சொப்னம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்.

இவர்கள் எஸ்3 படத்தை கேரள மாநிலம் முழுவதும் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எஸ் 3 படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘கேள்வி கேட்கவும் தேர்தலில் நிற்கவும் பயமில்லை…’ – விஷால்

‘கேள்வி கேட்கவும் தேர்தலில் நிற்கவும் பயமில்லை…’ – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal speechதயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது…

எனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

மீடியாக்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்துதான் இதைதான் தெரிந்து கொண்டேன்.

போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள்.

“போண்டா, பஜ்ஜி“ என்பது கெட்ட வார்த்தையா?? அது ஒரு தவறான உணவு இல்லை.

சூட்டிங்கிலும் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம்.

என்னை பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்று இல்லை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.

தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம்.

அதற்க்கு ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். கேள்வி கேட்பது தவறே இல்லை.

கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் இப்போது என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசி கொண்டு இருக்கிறேன்.

இதற்கு சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதை நான் என்னுடைய வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

ஜனவரி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரப்போகிறது. தயவு செய்து தேர்தலை நடத்த விடுங்கள்.

நிச்சயமாக இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும்.

எனக்கும் தாணு அண்ணனுக்கும் எந்த பிரச்சனையையும் இல்லை.

தாணு அண்ணனிடம் கேட்க சில கேள்விகள் இருக்கிறது. நான் நடிகர் சங்க பொது செயலாளராக வருவதற்கு முன்னர் கேள்விகளை கேட்டுள்ளேன்.

இப்போது நான் பதவிக்கு வந்த பிறகு எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியது எனக்கு கட்டாயம். அதே போல் அது என்னுடைய பொறுப்பு.

அதே போல் தான் நானும் கேள்வி கேட்கிறேன். அவர்களுக்கு நான் எதிர் இல்லை.
நான் ஜனநாயக முறையில் அவர்களிடம் கேள்வி கேட்டேன். எனக்கு பயமில்லை, கேள்வி கேட்கவும் பயமில்லை.

கேள்வி கேட்டால் பதில் வரவில்லை என்னும் பட்சத்தில் தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை.

விஷால் என்ற தயாரிப்பாளருக்கே இந்த கதி என்றால், சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கேள்வியே கேட்க கூடாதா??

விஷாலுக்கு இந்த முடிவு எடுத்திருக்கும் நீங்கள், இதே முடிவை கருணாஸுக்கு எடுக்க முடியுமா?

நிச்சயமாக எதிர் அணி என்பது இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலில் அந்த அணி போட்டியிடும்.

அந்த அணிக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன்.

திருட்டு வி.சி.டி எங்கு பிடிபட்டாலும் என்னை தான் எல்லோரும் டேக் செய்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் நிற்பேன்.” என்றார் நடிகர் விஷால்.

More Articles
Follows