லிங்கா பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

லிங்கா பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Fans Celebrate LingaDhanush Birthdayலிங்கா என்றாலே நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் நடித்த படம்தான்.

ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கோ மற்றொரு லிங்காவும் ஞாபகத்திற்கு வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் ஆவார்.

இன்று லிங்கா ராஜா தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே தனுஷ் ரசிகர்களும் இவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

லிங்கா, ரஜினியின் மூத்த பேரன் என்பதால் ரஜினி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி-நயன்தாரா-ஸ்ரீதிவ்யா தரும் தீபாவளி விருந்து..!

கார்த்தி-நயன்தாரா-ஸ்ரீதிவ்யா தரும் தீபாவளி விருந்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kashmora Movie Release Scheduled For Diwaliதோழா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் காஷ்மோரா.

இதில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், மனீஷா யாதவ், சித்தார்த் விபின், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கோகுல் இயக்கிவந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

எனவே, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

இப்படத்தை 2016 தீபாவளிக்கு வெளியிட திட்டமிள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஷி 2 படத்தை இயக்க எஸ் ஜே சூர்யா மறுப்பு..!

குஷி 2 படத்தை இயக்க எஸ் ஜே சூர்யா மறுப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SJSurya drops out of Directing PawanKalyan Filmஅஜித் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ் ஜே சூர்யா.

இதனைத் தொடர்ந்து அவரே நாயகனாகவும் படங்களில் நடித்து வந்தார்.

அண்மையில் வெளியான இறைவி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

எனவே இனி நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளாராம்.

இதன் விளைவாக, பவன்கல்யாண் நடிக்கவிருந்த குஷி 2 படத்தை இயக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பவன்கல்யானுடன் பேசி, குஷி 2 படத்தின் இயக்கத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இப்படத்தை டோலி இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் சரத் மர்ரார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

அலறும் ஆந்திராவும்… ரஜினியின் அசத்தல் சாதனைகளும்..!

அலறும் ஆந்திராவும்… ரஜினியின் அசத்தல் சாதனைகளும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth's Kabali Songs Sets New Recordsகடந்த மே 1ஆம் தேதியானது ரஜினி ரசிகர்களால், கபாலி தினமாக பார்க்கப்பட்டது.

அன்றைய தினம் ‘கபாலிடீசர் வெளியாகி உலகளவில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

அதுபோல் இப்படத்தின் தெலுங்கு டீசரும், 39 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 50 ஆயிரம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

இது நேரடியான தெலுங்குப் படங்களை விட பெரிய சாதனையாம்.

பவன் கல்யாணின் ‘சர்தர் கப்பார் சிங்பட டீசரும், ஜுனியர் என்டிஆரின் ‘நன்னகு பிரேமதோ‘ ஆகிய படங்களின் டீசர் மட்டுமே இதுவரை 50 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

மேலும் அண்மையில் வெளியான கபாலி படத்தின் பாடல்களும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

பாடலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும்…

1.      ‘நெருப்புடா…பாடல் 50 லட்சம்

2.      ‘உலகம் ஒருவனுக்கா…பாடல் 19 லட்சம்

3.      ‘வானம் பார்த்தேன்…பாடல் 11 லட்சம்

4.      ‘வீர துரந்தரா…பாடல் 10 லட்சம்,

5.      ‘மாய நதி…பாடல் 10 லட்சம்

இவை தென்னிந்திய சினிமாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

‘கபாலி’க்காக தன் ஸ்டைலையே மாற்றிய ரஜினி..! (படம் உள்ளே)

‘கபாலி’க்காக தன் ஸ்டைலையே மாற்றிய ரஜினி..! (படம் உள்ளே)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivar Rajinikanth Changed his Style in Kabali?ரஜினி என்றாலே அந்த ஸ்டைல்தான் நம் ஞாபகத்திற்கு வரும்.

மற்ற நடிகர்கள் என்ன செய்தாலும் அதில் ரஜினியின் சாயல் நிச்சயமாக இருந்துவிடுகிறது.

ஒவ்வொரு நடிகரின் சில விஷயங்களை ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

ஆனால் 15-20 ஆண்களுக்கு முன், ரஜினியின் தலைமுடி ஸ்டைலைதான் ரசிகர்கள் பாலோ செய்தார்கள்.

இது எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்றும் கூட சொல்லலாம்.

இந்நிலையில் கபாலி படத்தில் ரஜினி தன் ஸ்டைலில் சிறிது மாற்றம் செய்து இருக்கிறார்.

அவரது பெரும்பாலான படங்களில் கால்மேல் கால் போட்டு ரஜினி அமர்ந்திருப்பார்.

அவை அனைத்திலும் வலது காலின் மேல் இடது காலை போட்டு இருக்கிறார்.

ஆனால் கபாலியில் முதன்முறையாக இடது காலில் மேல் வலது காலை போட்டு இருக்கிறார்.

இதனையும் ரசிகர்கள் கவனித்து, அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதோ உங்கள் பார்வைக்கு அந்த படங்கள்…

Kabali New Style

மீண்டும் விஜய்யுடன் அட்லி… தெறி 2 நிலவரம் என்ன..?

மீண்டும் விஜய்யுடன் அட்லி… தெறி 2 நிலவரம் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIjay and Atlee's Upcoming Movie Updatesராஜா ராணி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி.

இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே, இதனை தொடர்ந்து எந்த படத்தை இயக்குவார்? நடிகர் யார்? என்ற கேள்விகள் எழுந்தன.

இதனிடையில் ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் அட்லி.

இந்நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து தெறி 2 படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பரதன் இயக்கும் விஜய் 60 படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

லைகா தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் இப்படம் தெறி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows