சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்ற ரஜினி பட கதாசிரியர்

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்ற ரஜினி பட கதாசிரியர்

2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார்.

பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை.

தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் கர்நாடகா முழுவதும் 100-நாட்களுக்கு மேல் ஓடியது.

2011 ஆண்டு வெளியான ‘விஷ்ணுவர்தனா’ மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்குமரன்.

இந்த படத்திற்கு அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.

பொன்குமரன், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியுள்ளார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களை வைத்து பொன்குமரன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி வினோத் ஜெயின் தயாரிக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ponkumaran wins best director award at SIIMA

அடுத்தவன் காதலி மீது பொறாமைப்படும் பங்காளியூர் மக்கள்

அடுத்தவன் காதலி மீது பொறாமைப்படும் பங்காளியூர் மக்கள்

சேலத்தில் பங்காளியூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பது தான் இவர்களது வேலை.

படத்தின் கதாநாயகன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.

அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகாக பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர் விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான்.

ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ‘ சூ மந்திரகாளி’

புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் சற்குணம் வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார்.

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சூ மந்திரகாளி’ படத்திற்கு முகமது பர்ஹாண் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன் இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசை அமைத்துள்ளார்.

கலை – J.K.ஆண்டனி
படத்தொகுப்பு – கோகுல்
நடனம் – தீனா
சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Choo Mandhirakaali movie SneakPeek and release updates

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘சூ மந்திரகாளி’

Choo Mandhirakaali SneakPeek – https://www.youtube.com/watch?v=0JTVBVKSsN8

அனபெல் கேரக்டருக்கு ஆங்கில டப்பிங் கொடுத்த ‘ஜீனியஸ்’ நடிகை பிரியாலால்

அனபெல் கேரக்டருக்கு ஆங்கில டப்பிங் கொடுத்த ‘ஜீனியஸ்’ நடிகை பிரியாலால்

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில் வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் டாப்சி.

அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் உயிரூட்டியது. அந்த குரலுக்கு உயிரூட்டியவர், தென்னிந்திய நடிகை பிரியா லால்.

ஆம், சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய ” குவா கோரின்கா “(Love Birds) ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அதே பிரியாலால் தான் டாப்சிக்கு ஆங்கிலத்தில் குரல் கொடுத்துள்ளார்.

இந்த கதா பாத்திரத்திற்காக பல நடிகைகள் மற்றும் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் .

ஆனால் எந்த குரலும் பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அந்த வேளையில் தான் வெளிநாட்டு பெண்ணான பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் தெரியவந்தது.

ஆனால் தமிழ் -தெலுங்கு பாடங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் டப்பிங் பேச சம்மதிப்பாரா என்ற சந்தேகம் பட குழுவினருக்கு. இருந்தாலும் படத்தின் தன்மை உணர்ந்து பட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரியாலால் குரல் கொடுக்க ஒப்பு குரல் கொடுத்துள்ளார்.

பிரியாவின் குரல், அவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷ் பாணியில் பேசி அசத்தியதை படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர் மூச்சு. தமிழ் , மலையாளம், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய பிரியா லால், ஹீரோயினாக நடிக்கும் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார். லண்டன் வாசியாக இருந்த பிரியா லால் கொச்சியில் தங்கி கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Priyaa Lal grabs attention in Vijay Sethupathi starrer Annabelle Sethupathy

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதில் ‘மாநாடு’ (நவம்பர் 4ல்) தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நம்பலாம்.

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சிம்புவின் 48வது படமாக உருவாகும் இப்படத்திற்கு கொரோனா குமார் என பெயரிட்டுள்ளனர்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கான தலைப்பிற்காக ஒரு் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் குமுதா, குமார் கேரக்டர்களை இணைத்து இந்த தலைப்பை அறிவித்துள்ளனர்.

எனவே இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக இந்தபடம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Simbu to play the lead in Director Gokuls Corona Kumar

எக்ஸாம் மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல.. உங்க தற்கொலை பெற்றோருக்கு நீங்க தரும் தண்டனை – சூர்யா

எக்ஸாம் மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல.. உங்க தற்கொலை பெற்றோருக்கு நீங்க தரும் தண்டனை – சூர்யா

மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது :

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானின்று வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

மாணவ, மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன். உங்களுக்கு போன வாரம் முன்னாடி, போன மாசம் இருந்த ஏதோவொரு மிகப் பெரிய கவலை, வேதனை இப்போ இருக்கா? யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், ஏன்? இல்லாமல்கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரை விட பெருசில்லை. உங்கள் மனசுக்கு கஷ்டமாக இருக்கா? நீங்க நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள், அப்பா, அம்மா, பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாரிடமாவது எல்லாத்தையும் மனசுவிட்டு பேசிடுங்கள்.

இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இவையெல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையும் விஷயங்கள்.

தற்கொலை.. வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.. என்று முடிவு பண்றதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா, அம்மா, குடும்பத்திற்கு நீங்க கொடுக்கும் வாழ்நாள் தண்டனை, மறந்துடாதீங்க.

நான் அத்தனை எக்ஸாம்ல ஃபெயில் ஆகியிருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமாக மார்க்ஸ் வாங்கியிருக்கேன். அதுனால உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும்.

மதிப்பு, தேர்வு இதுமட்டுமே வாழ்க்கையில்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம்.

நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால், எல்லோரும் ஜெயிக்கலாம். பெருசா ஜெயிக்கலாம்.

அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்-1’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

‘பொன்னியின் செல்வன்-1’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இதில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, பிரபு மற்றும் விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மணிரத்னம் “பொன்னியின்செல்வன்” எடுக்கிறார் என்றதும் , படம் ரிலீஸ்க்கு முன் நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த படம் உருவாகும்போதே 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனவே புதிய போஸ்டரை வெளியிட்டு. இப்படம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் (ஏப்ரல்-மே) ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

More Articles
Follows