மூன்றும் முறையும் ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை

மூன்றும் முறையும் ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vidya balanலைக்கா தயாரித்து வரும் 2.0 படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை ரஞ்சித் இயக்க, அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை தேர்வு நடந்து வருகிறது.

அண்மைகாலமாகவே பாலிவுட் நடிகைகளுடனே ரஜினி ஜோடியாக நடித்து வருகிறார்.

எனவே, இம்முறையும் பாலிவுட் பறந்துள்ளது படக்குழு.

பிரபல நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் மறுத்துவிட்டாராம்.

ரஜினியின் லிங்கா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கும் வாய்ப்பு வந்தும் அதை மறுத்தவர் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivar 161: Vidya Balan walks out of Rajini movie?

ரஜினிக்காக ரூ. 5 கோடி செலவில் தாராவி செட் போட்ட ரஞ்சித்

ரஜினிக்காக ரூ. 5 கோடி செலவில் தாராவி செட் போட்ட ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith made Mumbai Dharavi set for Rajini 161 movieவசூல் வேட்டை செய்த ‘கபாலி’ படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் ’2. 0’ படத்தில் நடித்துள்ளார் ரஜினி.

இப்படம் 2018 ஜனவரி 26இல் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் மே 28ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக ரூ.5 கோடி செலவில் மும்பை தாராவி பகுதியை, அப்படியே உருவாக்கியுள்ளனர்.

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் வித்தியாசமான கெட்டப்பில் ரஜினி நடிப்பார் எனத் தெரிகிறது.

Ranjith made Mumbai Dharavi set for Rajini 161 movie

பாகுபலி2 வசூல் 1000 கோடி; ராஜமவுலிக்கும் ரசிகர்களுக்கும் பிரபாஸ் நன்றி

பாகுபலி2 வசூல் 1000 கோடி; ராஜமவுலிக்கும் ரசிகர்களுக்கும் பிரபாஸ் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali Prabhasஇந்திய சினிமாவில் எந்த சினிமாவும் செய்யாத சாதனை பாகுபலி 2 விரைவில் செய்யும் என்பதை முன்பே பார்த்தோம்.

கடந்த ஏப்ரல் 28ல் வெளியான இப்படம் நேற்றோடு (மே 6, 2017) ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.

இந்த வசூல் தகவலை பாகுபலி படக்குழு உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இப்பட நாயகன் பிரபாஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

என்னை அன்பு மழையால் நனைய வைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் அன்பை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் அன்பை ஈடுகட்ட என்னால் முடிந்த கடின உழைப்பை கொடுத்து பாகுபலி 2 படத்தில் நடித்தேன்.

என் மீது நம்பிக்கை வைத்து, இந்த வரலாற்று படைப்பில் எனக்கொரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் ராஜமௌலிக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார் பிரபாஸ்.

Prabhas thanks to Fans and Rajamouli for Baahubali2 collects 1000 crores

1000c baahubali2

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் சிறந்த தலைவராக இருப்பார்’ – நக்மா

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் சிறந்த தலைவராக இருப்பார்’ – நக்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Nagma meetசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி – நக்மா நடிப்பில் வெளியாகி தமிழக சினிமாவை அரசியலையும் கலக்கிய படம் பாட்ஷா.

இப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானது. அண்மையில் இதன் டிஜிட்டல் வெர்ஷனும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இன்று நக்மா ரஜினியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து, நடிகை நக்மா கூறியதாவது…

“ரஜினி என்னுடைய நண்பர். அவரை நட்பு ரீதியாக சந்திக்க வந்தேன்.

நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை. ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.

அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது. நிச்சயம் வெற்றி பெறுவார், சிறந்த தலைவராக இருப்பார். என்பது என் தனிப்பட்ட கருத்து” என்றார்.

இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Everyone Wish Rajini must enter in Politics says Nagma

rajini nagma meet

‘காதல் கண் கட்டுதே’ கதாநாயகனுக்கு கல்யாணம்

‘காதல் கண் கட்டுதே’ கதாநாயகனுக்கு கல்யாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadhal Kan Kattudhe hero KG marriageகாதல் கண்கட்டுதே என்ற பெயரிடப்பட்ட படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகன் கே.ஜி. மற்றும் நாயகி அதுல்யாவின் கெமிஸ்ட்ரிதான்.

இதன் பாடல்கள் மற்றும் இப்படம் வெளியாகி காதலர்களின் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகன் KG விரைவில் திருமணம் செய்யவிருக்கிறாராம். இதனை அவரே தெரிவித்து இருக்கிறாராம்.

சாப்ட்வேர்ட் இன்ஜினியரான நந்தினி ஸ்ரீனிவாசன் என்ற பெண்ணை மணமுடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Kadhal Kan Kattudhe hero KG getting married

வைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்

வைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran adhigaram ondruதோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் கார்த்தியின் கேரியரில் மிகப் பெரிய பங்கை வகுத்த நிலையில் காற்று வெளியிடை படத்தில் ஒப்புக் கொண்டார்.

மணிரத்னம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து தற்போது சதுரங்க வேட்டை பட இயக்குனர் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு இதில் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இவை தற்போது வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் விஷால், சாயிஷா உடன் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.

Karthi starring Theeran Adhigaram Ondru stills goes viral

More Articles
Follows