சன் பிக்சர்ஸ் – ரஜினியுடன் இணையும் ‘படையப்பா’ இயக்குனர்.; ‘பீஸ்ட்’ கொடுத்த ட்விஸ்ட்.?

சன் பிக்சர்ஸ் – ரஜினியுடன் இணையும் ‘படையப்பா’ இயக்குனர்.; ‘பீஸ்ட்’ கொடுத்த ட்விஸ்ட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 169’ என இந்த படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

‘தலைவர் 169’ படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டார்.; பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதிசயம்.!

இதனிடையில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்தன.

இதனால் ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால், அந்தத் தகவல்களை படக்குழு மறுத்தது.

நெல்சனின் வழக்கமான ‘டார்க் ஹுயூமர்’ பாணியில் இந்த படமும் எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஹிட் கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இந்த கூட்டணியில் இணைந்து இருக்கிறார். அவர் இப்பட திரைக்கதை அமைக்கும் பணியில் பங்கேற்கிறாராம்.

ரஜினியின் ‘முத்து’ ‘படையப்பா’ ‘லிங்கா’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Padayappa’ director to team up with Rajini

‘ஜென்டில் மேன் 2’ படத்தின் இயக்குநரை அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன்

‘ஜென்டில் மேன் 2’ படத்தின் இயக்குநரை அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில் மேன் 2 ‘
இவர் தனது *ஜென்டில்மேன், படத்தின் மூலம் ஷங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குனரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

இப்படி ஒரு பிரமாண்டமான படமா என மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் கே.டி.குஞ்சுமோன். இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்.

இப்போது இதன் இரண்டாம் பாகமாக ‘ஜென்டில் மேன் 2’ பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்து அசத்தினார். மேலும் இரண்டு கதாநாயகிகளாக நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயரை அறிவித்தார்.

‘ஜென்டில்மேன்2’ பட ஹீரோயின் நயன்தாரா என அறிவித்தார் K.T. குஞ்சுமோன்

படத்தின் இயக்குனரை அறிவிக்காமல் இருப்பதால், இயக்குனர் யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட வட்டாரத்திலும் சர்ச்சைகளும் யூகங்களுமாக சஸ்பென்ஸ் தொடர்ந்தது . தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து இயக்குனர் பெயரை அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.

நானி கதாநாயகனாக நடித்த வெற்றி படமான ‘ஆஹா கல்யாணம்’ இயக்கிய A.கோகுல் கிருஷ்ணா வை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ‘ ஜென்டில்மேன்2 ‘ வின் இயக்குனர் என்று அறிவித்து அந்த சஸ்பென்ஸ்க்கு முற்று புள்ளி வைத்தார்.

A.கோகுல் கிருஷ்ணா ஏற்கனவே பிரபல டைரக்டர் விஷ்ணு வர்தனிடம் பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல் ஆகிய படங்களின் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவ சாலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்தின் ஹீரோ, மற்றும் தொழி்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் உடனேயே எதிர்பார்க்கலாம் என்றும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார்.

The Director of K.T.Kunjumon’s Magnificent Film Gentleman2″ is announced as A.Gokul Krishna.

லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. நன்றி ஆண்டவரே.; கமலின் செயலால் லோகேஷ் நெகிழ்ச்சி

லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. நன்றி ஆண்டவரே.; கமலின் செயலால் லோகேஷ் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் உள்ளிட்டோர் இணைந்துள்ள படம் ‘விக்ரம்’.

நடிகர் சூர்யா இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி இந்த படம் வெளியானது.

‘விக்ரம்’ படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளவில் சுமார் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளதை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.; ரூ 150 கோடியை தாண்டியது விக்ரம் வசூல்

இந்த நிலையில் விக்ரம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷை பாராட்டி தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கமல்ஹாசன்.

அந்த கடிதத்தில்…

‘அன்பு லோகேஷ்…

பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களை கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன்.

இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும் பொதுவெளியில், என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.

ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.

ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரூ ஆண்டவரூ.; 7 வருடத்திற்கு பிறகு கமலுக்கு லோகேஷ் கொடுத்த வெற்றி

யூ டியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம்.

இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்…

உங்கள் நான் கமல்ஹாசன்’ என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தால் நெகிழ்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்….

‘லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்.. இதைப் படிக்கும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது! நன்றி ஆண்டவரே’ என லோகேஷ் பதிவிட்டுள்ளார்.

இந்த கடிதம் வைரல் ஆகி வருகிறது.

Kamal letter to lokesh kanagaraj

Lifetime Settlement .. Thank you Lord .; Lokesh thanked Kamal Haasan

அரிய கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே

அரிய கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே.

எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்ல அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்கே. தொடர்ந்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகர் ஆர்கே.

ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் உண்டு. வழக்கமான ஒரு பிசினஸ்மேன் ஆக இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்க புதுவிதமான கண்டுபிடிப்புகளை பல்வேறு ஆய்வுகளுக்கு இடையே கண்டுபிடித்து பல்வேறு தர சோதனைகளுக்கு பிறகு அவற்றை மார்க்கெட்டில் சந்தைப்படுத்தி வெற்றிகரமான ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வலம் வருகிறார் ஆர்கே.

ஆனால் இவருடைய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அதற்காக இவருக்கு கிடைத்த அங்கீகாரமும் பெரும்பாலும் வெளியே தெரியவே இல்லை. அவரும் அதை பறைசாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் கைகளில் ஒட்டாமல் நரைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு புதிய தீர்வாக இவர் கண்டுபிடித்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பு இவருக்கு உலகெங்கிலும் பல்வேறு விதமான அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. குறிப்பாக இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான டத்தோ ஸ்ரீ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற இந்த தயாரிப்பை கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக மார்க்கெட்டில் உலா வரச்செய்து இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ஆர்கே. உலகநாடுகள் இவரது கண்டுபிடிப்பை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என தீர்மானித்து அதற்கான வேலைகளில் இறங்கிய சமயத்தில், கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒரே இடத்தில் 1005 பேரை இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்புவை பயன்படுத்த செய்து மிகப்பெரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி இதன் தரத்தை நிரூபித்தார் ஆர்கே.

தற்போது அதற்கான அங்கிகாரம் தான் இவருக்கு அடுத்து அடுத்து கிடைத்து வருகிறது. குறிப்பாக இதற்காக இந்திய அரசிடமிருந்து இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார் ஆர்கே.

இந்தநிலையில் சினிமாவை விட்டு ஆர்கே சற்றே ஒதுங்கிவிட்டாரோ என்கிற சந்தேகம் ஏற்படவே செய்யும். ஆனால் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்கே அந்த சந்தேகத்திற்கு. முற்றுப்புள்ளி வைத்தார்.

“எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்துகொண்டேதான் இருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்த ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்

ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை.. என்னுடைய படம் எப்பொழுதும் தியேட்டர்களில் தான் வெளியாகும்.. திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான்.. ஆர்ஆர்ஆர் கேஜிஎஃப் 2 படங்களின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்”. என்று கூறினார்.

தலைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு மட்டுமல்ல இன்றைக்கு உலகத்தில் இன்னொரு தலையாய பிரச்சனையாக இருக்கும் குறட்டை பிரச்சினைக்கும் இவர் மருந்து கண்டுபிடித்துள்ளார் இதற்காக தான் கண்டுபிடித்துள்ள தயாரிப்பை கடந்த மூன்று வருடங்களாக மக்களிடத்தில் பயன்பாட்டிற்காக விட்டுள்ளார் ஆர்கே. எப்படி தனது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்திய அரசின் காப்புரிமை கிடைத்ததோ அதேபோல குறட்டை பிரச்சனைக்கு தீர்வாக தான் கண்டுபிடித்த இந்த தயாரிப்புக்கும் காப்புரிமை கிடைக்கும் என உறுதியாக கூறுகிறார் ஆர்கே

தன்னுடைய இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை விளம்பரப்படுத்துவதற்காக சினிமா பாணியில் இந்தியாவில் உள்ள ரயில் இன்ஜின்களில் வண்ண விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார் ஆர்கே. இப்படி மொத்தம் 50 ரயில் இன்ஜின்களில் தனது இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை விளம்பரப்படுத்த பட p கூறியுள்ளார் ஆர்கே.

இத்துடன். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏழை மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் நடிகர் ஆர்கே. ஒரு பக்கம் வியாபாரம், இன்னொரு பக்கம் சினிமா என்று இருந்தாலும் இதன் மூலமாக கிடைக்கும் தனது வருமானத்தில் 25 சதவீதத்தை ஏழை மக்களின் உதவிக்காக தனியாக ஒதுக்கி வைத்துவிடுகிறேன் என்கிறார் ஆர்கே.

Actor RK who holds 18 doctoral degrees in 11 countries for his rare invention

சதீஷ் இயக்கத்தில் கார்த்திகேயன் & சுபிக்‌ஷா இணைந்து நடிக்கும் ‘சூரகன்’

சதீஷ் இயக்கத்தில் கார்த்திகேயன் & சுபிக்‌ஷா இணைந்து நடிக்கும் ‘சூரகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்”.

அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன்
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கம் – சதீஷ் G.குமார்
ஒளிப்பதிவு – ஜேசன் வில்லயம்ஸ்
இசை – அச்சு ராஜாமணி
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – ஶ்ரீதர்
மேக்கப் – பிரின்ஸ் பிரேம்
காஸ்டுயும் டிசைனர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சூரகன்

‘Suragan’ directed by Satish and starring Karthikeyan , Subhiksha

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.; ரூ 150 கோடியை தாண்டியது விக்ரம் வசூல்

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.; ரூ 150 கோடியை தாண்டியது விக்ரம் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

கமல்ஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, நரேன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அனிருத் இசையமைத்த இப்படத்தில் முக்கிய கேரக்டரில் (ரோலக்‌ஸ்) சூர்யா நடித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே ஆமோக வரவேற்பை பெற்றது.

மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி தமிழக அரசு அளித்திருந்தது.

‘விக்ரம்’ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.49 கோடி வசூலை எட்டியது என்பதை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது, படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை ‘விக்ரம்’ படம் அள்ளும் என வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tamil film ‘Vikram’ grosses over Rs 150 crore

More Articles
Follows