அமரனின் கலைப்பயணம்; கலை இயக்குநர் முதல் தயாரிப்பு வடிவமைப்பாளர் வரை

Amaran from Art director to Production Designer‘லிங்கா’, ‘காற்று வெளியிடை’ படங்களின் கலை இயக்குநரான அமரன், தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் ‘சோலோ’ திரைப்படம் மூலம், தயாரிப்பு வடிவமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த ‘சோலோ’ திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிஜாய் மற்றும் அமரன் கூட்டணி, தற்போது ‘சோலோ’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது மேலும் சிறப்பு.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் ஒரு மிக முக்கியமான சிறப்பம்சம், அமரனின் கலை இயக்கம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம்.

மகிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தடம்’, நயன்தாரா நடிக்கும் ‘கோ கோ’ மற்றும் ‘மாரி 2′ ஆகிய படங்களில் தற்போது அமரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Amaran from Art director to Production Designer

Overall Rating : Not available

Related News

நடிகை பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப்…
...Read More
ஒரு படைப்பாளியின் பயணம் முற்றிலும் விநோதமானது.…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில், KS ரவிக்குமார் இயக்கத்தில்…
...Read More

Latest Post