‘கோப்ரா’ படத்தில் என்னப்பா ஸ்பெஷல்.? சீயான் விக்ரமிடம் மகன் துருவ் கேள்வி

‘கோப்ரா’ படத்தில் என்னப்பா ஸ்பெஷல்.? சீயான் விக்ரமிடம் மகன் துருவ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது.. “மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’ என்ன ஸ்பெஷல்? என கேட்டேன்.

“அஜய், அஜய்யின் விஷன். கிரியேட்டிவிட்டி.. திரையில் சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் தியேட்டரில் ஒரு படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும்.” என அப்பா சொன்னார்.

‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 31ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

செல்வராகவன் & நட்டி இணையும் ‘பகாசூரன்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மோகன்

செல்வராகவன் & நட்டி இணையும் ‘பகாசூரன்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் & நட்டி இணைந்துள்ள படம் ‘பகாசூரன்’.

இவர்களுடன் நாயகியாக தாராக்‌ஷி நடித்துள்ளார். மேலும் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசிலையா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க பாரூக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் செல்வராகவன் மிரட்டலாக உள்ளார். இந்த படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பார்ட் 2.; ஆர்யாவுக்கு சந்தானம் கொடுத்த ஆஃபர்

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பார்ட் 2.; ஆர்யாவுக்கு சந்தானம் கொடுத்த ஆஃபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டெடி’ படத்திற்கு பிறகு சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் 2வது முறையாக ஆர்யா இணைந்துள்ள படம் ‘கேப்டன்’.

இதில் ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘கேப்டன்’ தலைப்பை தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரிடமிருந்து பெற்றுள்ளனர்.

இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

வரும் செப்டம்பர் 8-ல் ரிலீசாகிறது.

இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

“எனக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதைகள் வருகின்றன. ஒருவேளை பாஸ் என்ற பாஸ்கரன் படம் பார்ட் 2 எடுத்தால் அதில் ஆர்யாவுடன் நடிப்பேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பர்” என்றார்.

சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.; பொய் சொன்ன ஊடகத்திற்கு வெண்பா நெத்தியடி பதில்

சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.; பொய் சொன்ன ஊடகத்திற்கு வெண்பா நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.

இவர் சிறுமியாக இருந்தபோது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.. கற்றது தமிழ்.. சிவகாசி.. கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குமரியாக வளர்ந்த பின்னர் பள்ளி பருவத்திலே காதல் கசக்குதையா மாய நதி ஆனந்தம் விளையாடு வீடு உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில்.. இவர் டிவி சீரியலில் நடிக்க உள்ளார் என ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டது. “நான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இது போன்ற பொய் செய்திகளை போட வேண்டாம்” என எச்சரித்துள்ளார் நடிகை வெண்பா.

நடிகர் ரஜினிகாந்தை ஆளுநராக்க மத்திய அரசு போடும் திட்டம்.; விரைவில் சினிமாவுக்கு முழுக்கு

நடிகர் ரஜினிகாந்தை ஆளுநராக்க மத்திய அரசு போடும் திட்டம்.; விரைவில் சினிமாவுக்கு முழுக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது “நாங்கள் அரசியல் குறித்து 30 நிமிடம் பேசினோம். ஆனால் அதைப் பற்றி வெளியே தெரிவிக்க முடியாது” என்றார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து இவர்களின் சந்திப்பு ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியது.

இந்த நிலையில் விரைவில் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலம் ஒன்றில் ரஜினிகாந்த் ஆளுநராக பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுவார் என தெரிகிறது.

ஒரு மாநிலத்தில் பிறந்தவர் அந்த மாநிலத்தில் ஆளுநராக பதவி ஏற்க முடியாது என்பது இந்திய சட்ட விதிமுறை ஆகும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சூர்யா 42′ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.; பணிபுரியும் கலைஞர்கள் முழுவிவரம் இதோ..

சூர்யா 42′ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.; பணிபுரியும் கலைஞர்கள் முழுவிவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

படத்தில் பணி புரியும் கலைஞர்கள் யார் யார் என்பது பற்றிய விவரத்தை இங்கே காண்போம்…

Suriya 42

Suriya 42 movie shoot started with Pooja

*1 NEWS 1 MIN*: Suriya42 Cast & Crew full updates: சூர்யா சிவா ஞானவேல்ராஜா கூட்டணியில் பாலிவுட் நடிகை

More Articles
Follows