கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சீயான் விக்ரம்.; இயக்குனர் யார் தெரியுமா.?

கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சீயான் விக்ரம்.; இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ படத்திற்காக பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மொழிகளில் புரொமோஷன் செய்து வருகிறார் விக்ரம்.

கோப்ரா படம் நாளை ஆகஸ்ட் 31ல் ரிலீசாகிறது.

அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 1’ படம் செப்டம்பர் 30 ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் கன்னடத்தில் விக்ரம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

யூ-டர்ன் மற்றும் லூசியா ஆகிய படங்களை இயக்கிய கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர் குடும்ப படத்தை பகிர்ந்து அப்பாவை வாழ்த்திய அருண்விஜய்

பெற்றோர் குடும்ப படத்தை பகிர்ந்து அப்பாவை வாழ்த்திய அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர குடும்பம் என்று சொன்னால் அதில் சினிமாவில் ஒரு சிலருக்கு தான் 100% பொருந்தும்.

அதில் முக்கியமான குடும்பம் நடிகர் விஜயகுமாரின் குடும்பம். இவரின் குடும்பத்தில் நடிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் நடிகர் நடிகைகளாகி விட்டனர்.

தற்போது அவரது பேரனையும் நடிக்க வைத்து விட்டார் விஜயகுமார்.

சினிமா சீரியல் என பிசியாக வரும் விஜயகுமார் நேற்று ஆகஸ்ட் 29ல் தன் 80ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனையொட்டி குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் விஜயகுமார்.

அவருடன் மனைவி, அவரது மகன் அருண் விஜய், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன் இயக்குனர் ஹரி மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோரும் சென்றுள்ளனர்.

ரசிகர்கள், திரையுலகினர் பிரபலங்கள் என பலரும் விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சாமி தரிசனம் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.

‘சர்க்கார் வித் ஜீவா’.: நிகழ்ச்சி தொகுப்பாளராகும் பிரபல நடிகர்

‘சர்க்கார் வித் ஜீவா’.: நிகழ்ச்சி தொகுப்பாளராகும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.

விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.

டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்… ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய ‘கேம் ஷோ’ நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.

இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.

இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பது தான் சுவாரசியமான பகுதி.

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களும், சந்தாதாரர்களும், புதிய வாடிக்கையாளர்களும் ‘சர்க்கார் வித் ஜீவா’வைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமான அரங்கம் – பிரபலமான போட்டியாளர்கள் – புதிய தோற்றத்தில் ஜீவா – தமிழர்களுக்கு ஏற்ற வகையிலான நிகழ்ச்சியை பிரத்யேகமாக வழங்கும் ஆஹா டிஜிட்டல் தளம்… என இந்த கூட்டணியின் புதிய நிகழ்ச்சியான ‘சர்க்கார் வித் ஜீவா’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகர் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனையை படைத்து வருகிறது.

இதற்கு முன் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, ‘ஜீவி’, ‘ஜீவி 2’ என ஏராளமான திரைப்படங்கள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள்… என பல அசலான … தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.

Actor become Show Anchor Sarkaar with Jeeva

கட்டியணைத்து பாராட்டு.; பாலிவுட் பிரபலத்தின் செயலால் நெகிழ்ந்த ரஞ்சித்

கட்டியணைத்து பாராட்டு.; பாலிவுட் பிரபலத்தின் செயலால் நெகிழ்ந்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ப்ரொடக்சன்ஸ் சார்பாக ரஞ்சித் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

காதலின் அரசியலை பேசும் படமாக இதை உருவாக்கியுள்ளார்.

இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திர கூட்டம் இணைந்துள்ளது.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளுக்காக கேரளா மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட குழுவினர் சென்று வருகின்றனர்.

நேற்றைய தினம், மும்பையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் முக்கிய பிரமுகர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குனரான அனுராக் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Bollywood Director Anurag appreciates Ranjith team at Mumbai

11 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் யுவனின் ‘யு & ஐ’ இசை மழை

11 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் யுவனின் ‘யு & ஐ’ இசை மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை.

மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை.

அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும் தான்.

யுவன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது. இந்த உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்த்து, உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லிட்டில் மேஸ்ட்ரோ அணுகப்பட்டுள்ளார்.

திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.

இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சமீபத்தில் யுவன் அறிவித்திருந்தார்.

இந்த கச்சேரிக்கு ‘யு & ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

அறிவிப்பு வெளியானது முதல், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் களிக்க யுவனின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் யுவன். இந்த இசை மாயாஜாலத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா

U and I Music Composer Yuvans Live in Concert at Chennai

தேர்ந்த நடிகர் வெற்றி.; கேட்டதை கொடுத்தார் சுரேஷ் காமாட்சி. – ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார்

தேர்ந்த நடிகர் வெற்றி.; கேட்டதை கொடுத்தார் சுரேஷ் காமாட்சி. – ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட்-19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ‘ஜீவி-2’.

கடந்த 2019ல் வெளியாகி புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்திலும் தொடர்ந்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, படத்திற்கு முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் வரவேற்புடன் பாசிடிவான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பிரவீண் குமார் தனது அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

முதல் படத்தில் பணியாற்றும்போதே இந்த பரிசோதனை முயற்சி ஒர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகம் இருந்துச்சு. அதுல எதுனா புதுசா ட்ரை பண்ணலாம்னு பண்ணினோம். செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இடம்பெற்றுள்ன. அதையெல்லாம் 23 நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய சவால். நிறைய லொக்கேஷன், நிறைய இடம், நிறைய பயணம் இந்தப் படத்துக்கு தேவைப்பட்டது

ஸ்க்ரிப்ட்டை படித்தாலே பயங்கரமாக இருந்தது. முதல் பாகத்தில் இருந்த விஷயங்களை இரண்டாம் பாகத்தில் கனெக்ட் செய்திருந்த விதம் ஆச்சர்யத்தை மூட்டியது.

முக்கோண விதி, தொடர்பியல் இவையெல்லாமே தேஜாவு கான்செப்ட் தானே.. இதுக்கு முன்னடி நமக்கு எப்போதோ நடந்த மாதிரி இருக்கேன்னு நினைப்போம் இல்லையா..?

ஒரு மறந்துபோன கனவுன்னு சொல்வாங்க இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.. அதில் பேண்டசி கலந்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜே கோபிநாத்.

ஜீவி எடுக்கும்போது இரண்டாம் பாகம் எடுப்போமா என நினைக்கவே இல்லை.. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு லீட் வைத்துதான் முடித்துள்ளோம்.

முதல் பாகம் பார்க்கும்போதெல்லாம் ஏதோ குறையிற மாதிரி இருக்குதோ, இந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் அப்படி பண்ணியிருக்கலாமோ அப்படின்னு ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும்.

அதை இந்த இரண்டாம் பாகத்தில் ஜஸ்டிபை பண்ணியிருக்கேன். இந்த இடைவெளியில் இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு வந்த அனுபவமும் இந்த இரண்டாம் பாகத்தில் கைகொடுத்தது.

இயக்குநர் V.J.கோபிநாத் நிறைய தகவல்கள் கொடுத்து உதவினார் என்றால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாங்கள் கேட்ட அனைத்தையும் வழங்கினார்.

வெற்றியுடன் முதல் பாகத்திலிருந்தே நல்ல பழக்கம். முதல் பாகத்தில் கூட அவருக்கு நிறைய டவுட் இருந்துச்சு.. இப்படி பண்ணலாமா..? இது சரியா வருமான்னு கேட்டுட்டே இருப்பார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு தேர்ந்த நடிகராகவே மாறிவிட்டார். சிகரெட் பிடித்தால் கூட அதன் கண்டினியுட்டியை சரியாக பாலோ பண்ணுவார்.

இந்தப்படம் திரையரங்குகளுக்கு வராமல் ஒடிடியில் வெளியானதில் கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் தொடர்ந்து வரப்போகும் வாரங்களில் ரிலீஸுக்காக பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன..

இந்த சமயத்தில் நம் படம் தியேட்டர்களில் வெளியாகும்போது அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காமல் போனால், தயாரிப்பாளருக்கும் கஷ்டம்.. மொத்த உழைப்பும் வெளியே தெரியாமலேயே கூட போய்விடும் சாத்தியம் இருந்தது..

அதனால் இந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட்டது சரியான ஒன்று தான். ஓடிடி தளத்திலும் ரசிகர்களிடம் இருந்து குறைவில்லாத வரவேற்பு கிடைக்கவே செய்திருக்கிறது. மேலும் படம் துவங்கி ஆறு மாதத்திற்குள் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டதே மிகப்பெரிய சந்தோசம் தான்” என்கிறார் பிரவீண் குமார்.

Jiivi 2 DOP talks about Hero and Producer

More Articles
Follows