கணித புதிர்களை மையப்படுத்திய ‘கோப்ரா’.; மலையாள ரசிகர்களின் மகத்தான ஆதரவு

கணித புதிர்களை மையப்படுத்திய ‘கோப்ரா’.; மலையாள ரசிகர்களின் மகத்தான ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையில் பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள தேசத்து ரசிகர்களை சந்திக்கும் வகையில் கொச்சிக்கு பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.

சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றி பெற்றதால் ‘கோப்ரா’ பட குழு உற்சாகமடைந்திருக்கிறது.

cobra stills

BREAKING : பாரதி ராஜா உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின்

BREAKING : பாரதி ராஜா உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நுரையீரல் தொற்று காரணமாக சென்னை எம்‌ஜி‌எம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஐ‌சி‌யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என நேற்று அறிக்கை விட்டிருந்தார் பாரதிராஜா.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா உடல் நிலை குறித்து அவரது மனைவியிடம் போனில் கேட்டறிந்துள்ளார் .

இந்த செய்தி திரை உலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது .

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் – எஸ்‌ஜே சூரியா – ரீத்து வர்மா நடிக்கும் PAN INDIA படமான “மார்க் ஆண்டனி” யை த்ரிஷா இல்லனா நயன்தாரா படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் .

கேங்க்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஜி‌வி பிரகாஷ் இசையமைக்கிறார் .

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 க்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

‘ஜெயிலர்’ சீன் லீக்கானது.. சரக்கடிக்கும் ரஜினிகாந்த்.? ரசிகர்கள் அதிர்ச்சி

‘ஜெயிலர்’ சீன் லீக்கானது.. சரக்கடிக்கும் ரஜினிகாந்த்.? ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 169 படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் ரம்யா கிருஷ்ணன் , வசந்த் ரவி , யோகி பாபு , விநாயகம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று சென்னை எண்ணூரில் இப்பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அப்போது ஒரு பாரிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. அவர் சரக்கடித்து விட்டு வருகிறாரா.?? வருவது போல உள்ளது.

(ஆனால் சமீப காலமாக ரஜினிகாந்த் சரக்கு அடிக்கும் காட்சிகளிலோ புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிப்பதில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

இந்த காட்சியை சிலர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சி லீக் ஆனதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயிலர்

மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் ஓணம் விருந்தளிக்கும் ‘கோல்டு’ படக்குழுவினர்

மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் ஓணம் விருந்தளிக்கும் ‘கோல்டு’ படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிவின் பாலி நடித்த ‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ ஆகிய படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

இந்த இரு படங்களும் தமிழகத்திலும் கேரளாவிலும் வசூல் மழை பொழிந்தது.

எனவே அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தடுத்த படங்களை வரவேற்க ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் அவர் அடுத்த படத்தை இயக்குவதில் தாமதம் செய்தார்.

தற்போது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய படத்திற்கு ‘கோல்ட்’ என்று பெயரிட்டுள்ளனர்.

பிருத்விராஜ் நாயகனாக நடிக்க நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘பிரேமம்’ இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படம் அடுத்த மாதம் செப்டம்பர் 8ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இந்த படத்தை வெளியிட உள்ளனர். ‘மாநாடு’, ‘வலிமை’ படங்களை வெளியிட்ட எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷனின் சுப்பையா சண்முகம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறார்.

இதில் மலையாள சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

Gold movie will be released on Onam festival

கூடுதல் தகவல்…

பகத் பாசில் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘பாட்டு’ என்ற படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு 2023 அன்று வெளியாக உள்ளது.

என் இனிய தமிழ் மக்களே..; பாரதிராஜாவின் பாசமான ‘அவசர’ அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே..; பாரதிராஜாவின் பாசமான ‘அவசர’ அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாரதிராஜாவிற்கு உடல்நிலை குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரே வெளியிட்டதாக ஓர் அறிக்கை அவரது பிஆர்ஓ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,

பாரதிராஜா

பாரதிராஜா

***
My Dear Tamil people,

I am your beloved Bharathiraja. I was admitted to hospital recently due to an health issue, and I am recovering due to the excellent treatment and kind care of doctors and medical staff.

I humbly request all my loved ones not to come to see me in person as visitors are not allowed in the hospital. I hope to get well soon and meet you all in person.

I would like to express my sincere gratitude to all those who have kindly inquired and prayed for my recovery in person, over the phone and online after hearing the news of my admission to the hospital. See you all soon.

With love,
Bharathiraja

பாரதிராஜா

More Articles
Follows