மேக்ஸ் வாத்தி கம்மிங்.; ‘கோப்ரா’ பட சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்

மேக்ஸ் வாத்தி கம்மிங்.; ‘கோப்ரா’ பட சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் நடிப்பில் உருவான படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் கணித வாத்தியராக விக்ரம் நடித்திருக்கிறார். அவரது வாழ்வில் வில்லன் குழுவினர்களால் ஒரு விபரீதம் நடக்கிறது. அதனை தன் கணித மூளையால் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை எனத் தெரிகிறது.

இதில் நடிகர் விக்ரம் ஏழு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த வாரம் ஆகஸ்ட் 31ல் படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம், 3 நிமிடங்கள், 3 நொடிகள் என தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

காதல் திருமணம் செய்யும் காமெடி நடிகர் புகழ்.; மணமகள் யார்.? எங்கே எப்போ.?

காதல் திருமணம் செய்யும் காமெடி நடிகர் புகழ்.; மணமகள் யார்.? எங்கே எப்போ.?

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் புகழ்.

இந்த சீசனில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.

இதனையடுத்து அஜித் சந்தானம் அஸ்வின் ஆகியோரின் படங்களில் நடித்தார்.

வெள்ளித்திரைகள் இவரது காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வப்போது வருகின்றன.

இந்த நிலையில் பென்சியா என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி புகழ் – பென்சியா காதல் ஜோடிக்கு சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

pugazh

Comedy actor Pugazh to marry long time lover

கணித புதிர்களை மையப்படுத்திய ‘கோப்ரா’.; மலையாள ரசிகர்களின் மகத்தான ஆதரவு

கணித புதிர்களை மையப்படுத்திய ‘கோப்ரா’.; மலையாள ரசிகர்களின் மகத்தான ஆதரவு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையில் பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள தேசத்து ரசிகர்களை சந்திக்கும் வகையில் கொச்சிக்கு பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.

சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றி பெற்றதால் ‘கோப்ரா’ பட குழு உற்சாகமடைந்திருக்கிறது.

cobra stills

BREAKING : பாரதி ராஜா உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின்

BREAKING : பாரதி ராஜா உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின்

நுரையீரல் தொற்று காரணமாக சென்னை எம்‌ஜி‌எம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஐ‌சி‌யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என நேற்று அறிக்கை விட்டிருந்தார் பாரதிராஜா.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா உடல் நிலை குறித்து அவரது மனைவியிடம் போனில் கேட்டறிந்துள்ளார் .

இந்த செய்தி திரை உலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது .

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் – எஸ்‌ஜே சூரியா – ரீத்து வர்மா நடிக்கும் PAN INDIA படமான “மார்க் ஆண்டனி” யை த்ரிஷா இல்லனா நயன்தாரா படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் .

கேங்க்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஜி‌வி பிரகாஷ் இசையமைக்கிறார் .

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 க்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

‘ஜெயிலர்’ சீன் லீக்கானது.. சரக்கடிக்கும் ரஜினிகாந்த்.? ரசிகர்கள் அதிர்ச்சி

‘ஜெயிலர்’ சீன் லீக்கானது.. சரக்கடிக்கும் ரஜினிகாந்த்.? ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 169 படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் ரம்யா கிருஷ்ணன் , வசந்த் ரவி , யோகி பாபு , விநாயகம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று சென்னை எண்ணூரில் இப்பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அப்போது ஒரு பாரிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. அவர் சரக்கடித்து விட்டு வருகிறாரா.?? வருவது போல உள்ளது.

(ஆனால் சமீப காலமாக ரஜினிகாந்த் சரக்கு அடிக்கும் காட்சிகளிலோ புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிப்பதில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

இந்த காட்சியை சிலர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சி லீக் ஆனதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயிலர்

More Articles
Follows