நீ படிச்ச காலேஜ்ல நான் பிரின்சிபால்.; சிவகார்த்திகேயன் Vs எஸ்.ஜே. சூர்யா

நீ படிச்ச காலேஜ்ல நான் பிரின்சிபால்.; சிவகார்த்திகேயன் Vs எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் ‘டான்’.

இதில் சிவகார்த்திகேயன் உடன் எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி, புகழ் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் தயாரித்துள்ளன.

மாஸ் காட்டும் டான்.; சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

அனிருத் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் வெளியான ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae) ஆகிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.

இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயனும் அதே கல்லூரி முதல்வராக எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர்.

மேலும் தனது உடல் எடையைக் குறைத்து பள்ளி மாணவராகவும் நடித்துள்ளாராம் நாயகன் சிவகார்த்திகேயன்.

நாயகி பிரியங்காவும் பள்ளி மாணவியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan Vs SJ Surya in DON

இளையராஜா இசையே புரட்சி.. அவரை கைப்பற்ற அரசியல் சூழ்ச்சி – ரஞ்சித்

இளையராஜா இசையே புரட்சி.. அவரை கைப்பற்ற அரசியல் சூழ்ச்சி – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித்.

இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.

பல்வேறு ஓவியர்கள் இதில் கலந்துக் கொண்டு ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார்கள். தலித் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது…

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

“கலை இங்கு எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் கலைஞர்கள் அவர்களின் பார்வையில் இந்த சமூகத்தை , இந்த அழகியலை , வாழ்வியலை பார்த்து தங்கள் கலைகளில் பிரதிபலிப்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன.

கல்லூரி காலங்களில் எங்களது ஆசிரியர் ஓவியர் சந்துரு அவர்களோடு தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நிலத்தின் அழகியலை படம் வரைவதற்க்காக சென்றிருந்தோம். மிக அழகான மலைகள், பசுமைபோர்த்திய வயல்கள், வண்ணவண்ண பூக்கள் என்று அழகியலின் உச்சத்திலிருந்தது.
அந்த இடத்தை சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அதன் அழகியல் தெரியும்.

ஆனால் அந்த நிலத்தில் அதே நிலத்தை சார்ந்த ஒடுக்கப்பட்டவர் ஒருவர் கழுத்தருக்கப்பட்டு கொல்லப்பட்டு
இரத்தம் வடிந்த உடல் அந்த நிலத்தில் கிடக்கும்பொழுது அந்த உடலோடு சேர்த்து அந்த அழகிய காட்சியை பார்க்கும் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையில் அந்த இயற்கை காட்சி எப்படி தெரியும்?

அப்படித்தான் கலைகள், கலைஞர்கள் வழியாக பார்க்கப்படுவதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன என்பதை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

இப்படித்தான் கலைஞர்கள் அவர்களின் இடத்திலிருந்து , அவர்கள் வாழ்விலிருந்து கலையை அணுகுவதும் அதை படைப்பதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.

அதன் வெளிப்பாடுதான் இந்த ஓவியக் கண்காட்சி.

இசைஞானி அய்யா அவர்கள் இந்த இசைத்துறையில் செய்த சாதனைகள் நம் எல்லோருக்கும் தெரியும்.
இசைத்துறை யார் கையிலிருந்தது?

அங்கிருந்து அதை ஜனநாயகப்படுத்தப்பட்ட இசையாக எல்லோருக்குமானதாக மாற்றியதில் இளையராஜா அய்யா செய்திருப்பது பெரும் புரட்சிதான்.

அவர் இசையின் வாயிலாக மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும் வலிமை மிக முக்கியமானது. இப்படிப்பட்ட வலிமையான கலைஞரை முக்கியமானவரை கைப்பற்றுவதன் மூலமாக, அவர் மூலமாக ஒரு வார்த்தையை சொல்லுவதன் மூலமாக அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்துவதற்கான வேலைதான் இங்கு நடக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட சூழலில்தான் இதுபோன்ற ஓவியக்கண்காட்சிகள் நடத்துவது ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன்.”

இவ்வாறு ரஞ்சித் பேசினார்.

Director Ranjith supports ilaiyaraaja in Modi Ambedkar issue

லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்து இயக்குனர் என். லிங்குசாமி இயக்கிய தி வாரியர் மூலம் தமிழ் மொழியில் ஆதித்யா மியூசிக் கால்பதித்திருப்பது பெருமைக்குரியது.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்தில் ராம் பொதினேனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 14 ஜூலை 2022 அன்று உலகெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் தி வாரியர், படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் சிலபரசன் டிஆர் பாடிய முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது . அந்த புல்லட் பாடலின் லிங்க் இதோ ..

Aditya music bagged the audio rights of Lingusamy’s The warrior film

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜிவி பிரகாஷ் அந்த துறையைதான் செலக்ட் செஞ்சிருப்பாராம்..; அவரே சொன்னதை பாருங்க.!

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜிவி பிரகாஷ் அந்த துறையைதான் செலக்ட் செஞ்சிருப்பாராம்..; அவரே சொன்னதை பாருங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது.

LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது ஜிவி பிரகாஷ் கூறியதாவது:-

உங்களின் இந்த உற்சாகத்தை பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.

நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன்.

இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக தோன்றவில்லை.
உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் ஜி வி பிரகாஷ் குமாரிடம் பாடல்களை பாடச் சொல்லி கேட்டனர்.

அவரும் பேச்சுலர், மதராசபட்டினம், ஆடுகளம் போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.

அப்போது மாணவர்கள் விசில் அடித்தும், உரக்கக்கத்தியும், கைத்தட்டியும், தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இயக்குனர் மதிமாறன்  கூறியதாவது:-

முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். செல்பி படத்தில் ஒரு டயலாக் இருக்கும் இஞ்சினியரிங் என்று சொன்னாலே காரி துப்புரான் என்று எழுதியிருப்பேன்.

இது பொதுவாக சொல்லப்பட்டது கிடையாது இன்ஜினீயரிங்கை தவறாக பயன்படுத்தும் சிலருக்காக சொல்லப்பட்டது.

எனக்கும் இன்ஜினியரிங் மிகவும் பிடிக்கும். நானும் இன்ஜினியரிங் படித்தவன்.
எனது நண்பன் ஒருவன் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கார் வாங்கினார். சில பிரச்சினைகளால் அந்த காரை விற்றான். அவரிடம் எப்படி கார் வாங்கினான் என்பது குறித்து கேட்டபோது, இதே கல்லூரியில் அட்மிஷன் போடும் புரோக்கராக வேலை பார்த்ததாக கூறினான் . அதை கதை கருவாக எடுத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சேர்த்து படமாக எடுத்தேன்.

கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது ஜிவி சார். அதனாலேயே அவர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.கல்லூரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கல்லூரி கலை விழாவில் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி.

அடுத்ததாக ஜிவி சார் நடிக்கும் ஐங்கரன் படமும் கல்லூரி சம்பந்தப்பட்ட படம் தான். அந்த படத்தின் டிரைலரும் இங்கு திரையிட்டது பொருத்தமான ஒன்று. மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐங்கரன் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-ஜிவி பிரகாஷ்குமார் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் தான். ஒரு அறிவு சார்ந்த படத்தை எடுத்துள்ளோம்.

அதற்கு மாணவர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. வரும் மே மாதம் 5ஆம் தேதி படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
அதன் பிறகு மே மாத இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஐங்கரன் வெளியாக உள்ளது என்றார்.

இறுதியாக கல்லூரி விழா குழு சார்பில் மூவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Music director GV Prakash recent speech at private college function

சிவாஜி கமல் ரஜினி உள்ளிட்டோருடன் நடித்த சக்ரவர்த்தி காலமானார்

சிவாஜி கமல் ரஜினி உள்ளிட்டோருடன் நடித்த சக்ரவர்த்தி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் சக்ரவர்த்தி.

அவருக்கு தற்போது வயது 62. சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி.

ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார். சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார்.

இன்று அதிகாலை மும்பையில் காலமானார்.

இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.

காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.

அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்ஸி படித்து வருகிறார்.

கண் மலர்களின் கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற ஹிட் பாடலில் ராதிகாவுடன் சக்ரவர்த்தி நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil actor Chakravrthy passed away due to heart attack

காதல் கலகலப்புடன் காதல் கவிதையாக உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர்

காதல் கலகலப்புடன் காதல் கவிதையாக உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது.

2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இயக்கியுள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Trailer link : https://www.filmistreet.com/video/kaathuvaakula-rendu-kadhal-trailer/

The trailer for Vijay Sethupathi’s Kaathuvaakula Rendu Kaadhal is here

More Articles
Follows