‘கோப்ரா’ சரியா போகல.. ஆனாலும் தேடிவந்து அருள்நிதி வாய்ப்பளித்தார்… – அஜய் ஞானமுத்து

‘கோப்ரா’ சரியா போகல.. ஆனாலும் தேடிவந்து அருள்நிதி வாய்ப்பளித்தார்… – அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி & பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘டிமான்டி காலனி 2’.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாயகி பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். போன வருடம் இந்தப்படம் ஆரம்பித்தோம் அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நிறைய நைட் ஷூட் பண்ணினோம், எனக்கு இந்த கதாபாத்திரம் தந்ததற்கு அஜய்க்கு பெரிய நன்றி. அருள்நிதி உடன் இரண்டாவது படம் எனக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். அருண் பாண்டியன் சார் உடன் ஷீட்டில் வீட்டுக்கதைகள் பேசிக்கொண்டிருப்பேன், ஜாலியாக இருந்தது. மீனாட்சி மிக அழகாக நடித்துள்ளார். பாபி சார் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக இந்தப்படம் அமையும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும்படி இருக்கும் நன்றி.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது…

பாபி சார் அவர் தான் இந்தப்படம் பெரிதாக வரக் காரணம். ஒரு படம் இயக்கும்போது இயக்குநருக்கு அந்தப்படத்தின் செலவைக் குறைக்க மனது வராது.

படத்தைத் தரமாகத் தரத்தான் நினைப்பார்கள் ஆனால் ஒருகட்டத்தில் எங்களால் முடியாத போது அதற்கு ஆதரவாகக் கிடைத்தவர் தான் சுப்பிரமணியன் சார். அவருக்கு என் நன்றி. நாம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், தாத்தா பேரில் ஆரம்பித்து அப்பாவை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டேன் என் அப்பாவுக்கு நன்றி. படம் முக்கால் வாசி முடிந்திருந்த போது உள்ளே வந்தவர்கள் தான் பிடிஜி.

மனோஜ் சார் தான் முதலில் படம் பிஸினசுக்காக பார்க்க வேண்டும் என்றார் பின்னர் முழுப்படத்தையும் தங்கள் தோளில் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் பிடிஜி பற்றி கேள்விப்பட்ட போது, பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எங்கள் படத்தை எடுத்துச் செல்வது மகிழ்ச்சி. சாம் சி எஸ் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் படத்தை அணுகுகிறார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ஹரீஷ் என்னுடன் நின்றார். அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் அருண் பாண்டியன் சார் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார். எல்லாவற்றைப் பற்றியும் கேட்டுக்கொண்டே இருப்பார் அவருக்கு நன்றி.

பிரியா அவருக்கு மிக முக்கியமான ரோல் அவர் கேரியரில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும். என் கோப்ரா படம் சரியான ரிவ்யூ இல்லை. அந்த நேரத்தில் உடனே என்னைத் தேடி வந்தார் அருள்நிதி சார், தூக்கிப்போடு அடுத்த படம் பண்ணலாம் என்றார். இப்படி ஒரு தோள் கிடைக்க ஆசீர்வாதம் வேண்டும். இப்போது வரை உடன் நிற்கிறார் அவருக்கு என் நன்றிகள். எனக்கு உடன் இருந்த உழைத்த என் குழுவினருக்கு நன்றிகள்.

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், R ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.

Ajay Gnanamuthu emotional about Cobra movie failure

கலைஞனின் படைப்பு தோற்கலாம்.. ஆனால் கலைஞன் தோற்பதில்லை… – சாம்.சி.எஸ்

கலைஞனின் படைப்பு தோற்கலாம்.. ஆனால் கலைஞன் தோற்பதில்லை… – சாம்.சி.எஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’ .

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துக் கொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது…

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இறங்கியுள்ளோம்.

ஒரு படம் பத்து படம் மொத்தமாகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஐடியா இல்லை. மக்கள் எதை ரசிக்கிறார்கள் எது அவர்களுக்குப் பிடிக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்தோம். மக்களுக்கு ஹாரர் படங்கள் பிடிக்கிறது. டிமான்டி காலனி அருள்நிதி அஜய் ஞானமுத்து டீம் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்.

அவர்கள் சராசரி படமாக இதைச் செய்யவில்லை. படத்தில் வரும் கதை அழுத்தமானது அதே டெக்னிகலாக இதுவரை பார்த்திராத உலகம் சவுண்டிங், சிஜி எல்லாமே உலகத்தரம். ஆதலால் நாங்கள் இதில் இணைந்து கொண்டோம். இந்தப்படம் பார்க்கும் போது இந்த புதிய உலகத்தை நீங்கள் ரசிப்பீர்கள்.

ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த டிரெய்லர், இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் நாங்கள் வெவ்வேறு ஜானரில் நான்கு படங்கள் செய்து வருகிறோம் ஆனால் எங்களின் முதல் அடையாளமாக டிமான்டி காலனி இருக்கும்.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் மனோஜ் பெனோ பேசியதாவது..

நான் ஒரு டாக்டர், சினிமா எதற்காக என்றால், இந்த இன்ட்ஸ்ட்ரி தேவைகளை சப்ளை செய்யும் ஒரு துறையாக இருக்கிறது. எண்டர்டெயின்மெண்ட் தேவை இங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் இருக்கிறது, அது இருக்கும் வரை நாங்கள் உழைத்துக்கொண்டே இருப்போம்.

மக்கள் எங்களை வாழ வைப்பார்கள் அதனால் தான் சினிமா. பாபி சினிமாவுக்குள் வருவதாகச் சொன்ன போது ஆச்சரியப்பட்டேன் ஆனால் அவர் வந்த பிறகு முன்னமே வந்திருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு பெரிய மாற்றத்தை திரைத்துறைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

டிமான்டி காலனி 2 ட்ரைலரில் நீங்கள் பார்த்தது ஒரு பருக்கை தான். இன்னும் உங்களை மிரட்டுவதற்கு நிறைய இருக்கிறது அதற்குக் காரணமானவர் அஜய் ஞானமுத்து தான். அவர் பேய்க்கு பயந்தவர் ஆனால் பாருங்கள் நம்மை எப்படியெல்லாம் மிரட்டுகிறார். இப்படம் உங்களை ஒரு நொடி கூட திரும்ப விடாது.

அருள்நிதி ஒவ்வொரு சின்ன விசயத்திலும், அக்கறை எடுத்துக்கொண்டு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார். பிரியா இந்தப்படத்தில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவருக்கு முக்கியமான படமாக இப்படம் இருக்கும். அருண் பாண்டியன் சார் எனக்கு அண்ணா தான்.

எங்களுக்கு எல்லா விசயத்திலும் அறிவுரை தந்து ஆதரவாக இருந்தார். சாம் சி எஸ் இசையில் சின்ன சின்ன சவுண்டிங்கில் அசத்தியிருக்கிறார். இந்தப்படம் ஒரு புதிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும், படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் அனைவருக்கும் நன்றி.

ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் விஜய் சுப்பிரமணியன் பேசியதாவது…

ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதரவு தந்த பாபி அவர்களுக்கும், அருள் நிதி அவர்களுக்கும் நன்றி. படம் முழுக்க ஆதரவாக இருந்த அருண் பாண்டியன் அவர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி. மிகச்சிறப்பான படமாக இப்படம் இருக்கும்.

நடிகர் அருண் பாண்டியன் பேசியதாவது…

இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பாபி மற்றும் மனோவிற்கு என் நன்றி. இந்தக்கதையை அஜய் சொன்ன போது மிகவும் உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரம், நான் ஓகேவா என்று கேட்டேன். நீங்கள் தான் வேண்டும் என்றார். அருள் நிதி ஃபிரண்ட்லியாக இருந்தார். பிரியா என் தோழி, அவருடன் பழகியது வீட்டில் இருப்பது போல் உணர்வைத் தந்தது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் எல்லோருக்கும் நன்றி

நடிகர் முத்துக்குமார் பேசியதாவது…

அஜய்க்கு என் நன்றி. பொதுவாகக் கதை சொல்லும் போது என் கேரக்டர் என்ன, அது எப்படி பிகேவ் பண்ணும் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் முதலில் இப்படத்தில் நடித்தேன். ஆனால் அஜய் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லித்தந்தார். அஜய்க்குள் மிகச்சிறந்த நடிகன் இருக்கிறான். அவர் சொன்னது போல் தான் எல்லோரும் நடித்தோம். ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். இப்படத்தில் காமெடி உட்பட எல்லாமே சிறப்பாக வந்துள்ளது. படம் புதுசாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…,

அஜய் சாருக்கு கோப்ரா வாய்ப்பிற்கே நன்றி சொல்ல வேண்டும். இந்த மேடையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன், எனக்கு ஒரு கைட் மாதிரி இருந்து வருகிறார். டிமான்டி வந்த போது எனக்கு 15 வயது, இப்போது இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. அருள்நிதி சார், பிரியா மேடம் எல்லோருக்கும் என் நன்றிகள். படத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…

இயக்குநர் அஜய்யிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம்.. கலைஞன் தோற்பதில்லை. இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக வேறு பல படங்கள் நான் செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான்.

ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார். தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார், இப்படத்தை அவர் பிஸினசாக அணுகவில்லை, ஆத்மார்த்தமாகப் பிடித்துச் செய்கிறார் அவருக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சிஜி எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

Musi composer Sam CS Speech at Demonte Colony 2 trailer launch

ஹைப்பர்லிங்க் வடிவில் கதைகளை சொல்லும் ‘யாவரும் வல்லவரே’

ஹைப்பர்லிங்க் வடிவில் கதைகளை சொல்லும் ‘யாவரும் வல்லவரே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் வழங்கும், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி. ஆனந் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29,2023 அன்று வெளியாகிறது!*

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் அவர்கள். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார்.

இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

11:11 புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.

படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களும் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்” என்றார்.

*தொழில்நுட்பக் குழு:*

இயக்குநர்: N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி,
ஒளிப்பதிவு: ஜெய்ஸ்,
இசை: N.R. ரகுநந்தன்,
படத்தொகுப்பு: ராமா ராவ்,
கலை: சிவா யோகா,
ஸ்டண்ட்: வெற்றி வீரா,
பாடல்கள்: பொன் முதுவேல், தீப செல்வன், ஆதிரை,
பாடகர்கள்: G.V. பிரகாஷ்குமார், N.R. ரகுநந்தன், பத்மலதா, மற்றும் லிஜேஷ் குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன்- எம்.பி. ஆனந்த்,
டிசைன்ஸ்: N- Talkies, குமரன் கே,
தயாரிப்பு: டாக்டர். பிரபு திலக், கி. ஆனந் ஜோசப் ராஜ்.

Samuthirakani and Yogibabu starrer Yavarum Vallavare

Don’t Judge Book by its Cover.; பாடி ஷேமிங் பற்றி சொல்ல வரும் இவானா & வெங்கட்

Don’t Judge Book by its Cover.; பாடி ஷேமிங் பற்றி சொல்ல வரும் இவானா & வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”.

இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில்…

தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது…

இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள்.

என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்தில் சம்மதித்து வேலைப்பார்த்தற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இந்தப்படம் பாருங்கள் கண்டிப்பாக உங்களை அழ வைப்பார். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். பத்திரிக்கை ஊடக தோழர்களுக்கு நன்றிகள்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது…

ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் வாழ்த்துக்கள். பாலாவின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் இயக்குநர் மந்திராவிற்கு வாழ்த்துக்கள் அவருக்கு முதல் பட வாய்ப்பை நம்பித்தந்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இந்த டைட்டில் பற்றி இயக்குநரிடம் கேட்டேன்.

படிக்காத பெண் கதாபாத்திரம் நாயகியின் பெயர் மதி, குள்ளமான நாயகன் பெயர் நெடுமாறன், இரண்டையும் இணைத்து வைத்ததாக சொன்னார். டைட்டிலே இவ்வளவு யோசித்து வைத்துள்ளார், கண்டிப்பாக அவரது படம் நன்றாக இருக்குமென நம்பினேன். உருவகேலியை வைத்து வித்தியாசமான களத்தில் படம் செய்துள்ளார். டிரெய்லர் அற்புதமாக உள்ளது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். வெங்கட், இவானா, ஆராத்தியா மூவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….

ஒரு அற்புதமான கதைக்களம். நாயகனுக்காகக் கதை எழுதும் காலத்தில் கதாபாத்திரத்திற்காக நாயகனைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் மந்திராவுக்கு வாழ்த்துக்கள். பாலாவின் உதவியாளர் மிக தைரியசாலியாக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் வெங்கட் உயரம் தான் குறைவு உள்ளம் உயரமானது. உயர்ந்த உள்ளம் கொண்டிருக்கிறார்.

உயரமாய் இருந்து என்ன பிரயோஜனம், ஒன்றுமில்லை. நம் தமிழ் நாட்டை வளப்படுத்திய அண்ணா உயரம் குன்றியவர். உலகம் போற்றிய அப்துல் கலாம் உயரம் குன்றியவர் தான். அழகென்பது உடலில் அல்ல, அவன் செய்யும் செயலில் இருக்கிறது.

படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம். வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் என் வாழ்த்துக்கள். இவர்கள் தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்துள்ளார்கள் அற்புதமான படைப்பைத் தந்துள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ரத்ன சிவா பேசியதாவது…

மந்திரா என்னிடம் வேலைபார்த்தவர் ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்பே ஒரு படம் எடுத்து அது நின்றுவிட்டது. பின் பாலாவிடம் உதவியாளராக வேலை பார்த்தான், இரண்டாவது படம் கிடைக்கும் போது, யாராக இருந்தாலும் கர்ஷியல் படம் தான் எடுப்பார்கள் ஆனால் இப்படி ஒரு கதைக்களத்தில் படம் செய்திருக்கும் மந்திராவிற்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பை தந்து இப்படி ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…

மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மந்திரா இப்படம் செய்துள்ளார். தயாரிப்பாளர் என் நண்பர் இப்படி ஒரு படத்திற்கு ஆதரவு தந்துள்ளார்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படி படம் தான் பலருக்குக் கதவைத் திறந்து விடும். இன்றைய நாயகன் கார்த்திக் ராஜா அவருக்கு இதுவரை ஒரு சரியான களம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது இந்தப்படம் அதை மாற்றும்.

இப்போதைய சினிமா ஏதாவது ஒரு கருத்தைப்பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. உருவக் கேலியை விமர்சிக்கும் அருமையான போராளிகளின் நல்ல படைப்பு இது வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் மந்திர பாண்டியன் பேசியதாவது…

மாதா பிதா பாலா சார் பாபு சார் எல்லோருக்கும் நன்றிகள். 11 வருட உழைப்பு, கனவு, சின்ன சின்னதாகப் பல வருடம் உழைத்த பிறகு, ஒரு படம் கமிட்டாகி நின்ற பிறகு, எங்கோ வேறு ஒருவருக்குக் கதை சொன்ன போது, அந்தக்கதையைக் கேட்டு எனக்காக மட்டுமே இந்தப்படத்தைச் செய்த பாபு சாருக்கு நன்றி.

எனக்காக மட்டும் கதையே முரசாகக் கேட்காமல் இந்தப்படத்தைச் செய்த பாபு சார் எனக்குக் கடவுள் தான். இப்படத்தை வெளியிடும் பாப்பின்ஸ் நிறுவனம் வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும்.

நான் கிராமத்திலிருந்து வந்தவன், என்னை என் உருவத்தை வைத்துத் தான் எடை போடுகிறார்கள். Don’t judge book by its cover அது தான் உண்மை ஒருவரின் திறமை அவரது உருவத்தில் இல்லை. அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படம் எடுத்தேன்.

இந்தப்படத்தை நிஜத்திற்கு நெருக்கமாக, கமர்ஷியல் அம்சத்துடன் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளோம். இந்தப்படம் உங்களைத் திருப்திப்படுத்தும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இவானா நாச்சியார் படத்தில் மூலம் அறிமுகம், அப்போது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த அறிமுகம், நான் இந்தக்கதை சொன்ன போது அம்மாவுடன் சென்னை வந்து கேட்டார். கதை கேட்கும்போதே அவரது அம்மா அழுது விட்டார். இந்தப்படத்தில் வருவது போல் இவானாக்கு நிஜத்தில் டிவின், லியோ எனும் தம்பி அவருக்கு இருக்கிறார்.

இதில் அக்காவுக்கும் தம்பிக்குமான உறவு தான் கதை. அதனால் எமோஷனலாக கமிட்டாகிவிட்டார். நான் தான் கண்டிப்பாக செய்வேன் என்றார். சிலர் நல்ல அறிமுகமான நடிகையைப் போடலாமே என்றார்கள் படம் வரும் போது மிகப்பெரிய நடிகையாவார் என்றேன் எங்கள் படம் வருவதற்கு முன்னே ஸ்டாராகிவிட்டார்.

என் தங்கை தான் இவானா, அவர் ஸ்டாரானது எனக்கு மகிழ்ச்சி. வெங்கட் ஒரு வீடியோவில் டான்ஸ் ஆடியதைப் பார்த்துத் தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன், அயலான் படத்தில் ஏலியன் உடம்பில் அவர் தான் நடித்துள்ளார். முகம் தெரியவிட்டாலும் பரவாயில்லை என்று திறமையைக் காட்ட நினைத்தவர் தான் வெங்கட்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக மாறுவார். சுதர்ஷன் ஒரு ஹீரோயிக் ரோல் செய்துள்ளார் நன்றாக நடித்துள்ளார். பர்வேஸ் அழகான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். சதீஸ் சூர்யா பாலா சார் படங்கள் செய்தவர் எனக்காக எடிட் செய்தார் அவருக்கு என் நன்றிகள். தொழில் நுட்ப குழுவில் எனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள். எம் எஸ் பாஸ்கர் சார் அவர் என் அப்பா அவ்வளவு தான். கார்த்திக் ராஜா சாருக்கு ஈகோ அதிகம் அவர் வேண்டாம் என்று நிறையப் பேர் சொன்னார்கள் அவரிடம் பழகும் வரை நானே அப்படித்தான் இருந்தேன், அவரது சவுண்டிங் எனக்கு அவ்வளவு பிடிக்கும். படம் மொத்தமாக முடித்துவிட்டு ஹார்ட்டிஸ்க்கில் படத்தை எடுத்துக் கொண்டு போய் தான் அவரைப்பார்த்தேன். அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார், எனக்குப் பிடித்தால் இசையமைக்கிறேன் இல்லாவிட்டால் வேறு நல்ல இசையமைப்பாளர் சொல்கிறேன் என்றார்.

ஆனால் படம் பார்த்துவிட்டு என்னுடைய கம்பேக் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் நினைத்ததைக் கொண்டு வர முயற்சிக்கிறேன் என்றார். மிக மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார் அவருக்கு நன்றிகள். படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் நந்தகோபால் பேசியதாவது…

பாடல்கள் டிரெய்லர் வசனங்கள் எல்லாமே அருமையாக உள்ளது. படம் குறித்து அனைவரும் பேசிவிட்டார்கள். ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மற்றும் இயக்குநர் மந்திரா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசியதாவது…

எனக்கு இந்தப்படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஓதுவார் திருவண்ணாமலையில் தினமும் கடவுள் முன் பாடுபவர், என்னைப்பார்க்க வந்தவர் இங்கு வந்து கடவுள் வாழ்த்து பாடினார் அதுவே இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வாழ்த்து, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகை இவானா பேசியதாவது…

என்னோட டீம் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். 3 வருடமாகச் செய்த படம். இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. மந்திரா அண்ணாவை நாச்சியார் டைமில் இருந்து தெரியும் அப்போது தொடங்கிய நட்பு, இண்டஸ்ட்ரி பத்தி எனக்கு நிறையச் சொல்லித் தந்தார்.

என் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். இந்தக்கதை சொன்னபோது எனக்காக எழுதியதாகச் சொன்னார்.

இந்தப்படம் பாடிஷேமிங் பத்தி பேசியுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பேசியதாவது…

எனக்கு என் மேல் நம்பிக்கை இருப்பதை விட நான் ஜெயிப்பேன் என நிறையப் பேர் என்னை நம்பினார்கள், என் அப்பா அம்மா முதல் என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி.

என்னை ஹீரோவாக போட்டு படம் எடுக்கலாம் என நம்பிய இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு, என் நன்றிகள். எல்லோரும் கஷ்டப்பட்டு இப்படம் எடுத்துள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விபரம்…

இயக்கம் – மந்திர வீரபாண்டியன்
தயாரிப்பு – லெனின் பாபு
தயாரிப்பு நிறுவனம் – ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல்
TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ் K
எடிட்டர் – சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Madhimaaran movie based on Dont Judge Book by its Cover

முடி கொட்டிய பிறகே வாய்ப்புகள் வந்தது… நிறைய உருவ கிண்டல்கள்.. – எம் எஸ் பாஸ்கர்

முடி கொட்டிய பிறகே வாய்ப்புகள் வந்தது… நிறைய உருவ கிண்டல்கள்.. – எம் எஸ் பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள படம் ‘மதிமாறன்’. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எஸ் பாஸ்கர் பேசியதாவது…

“இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத் தான் நிறைய இடத்தில் டயலாக் பேசினேன்.

என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக்கேட்டுக்கொண்டே இருப்பார் அவ்வளவு ஆர்வம்.

உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான்.

அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார் என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார் இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அனைவருக்கும் என் நன்றிகள்.

நடிகர் சுதர்ஷன் பேசியதாவது…

மதிமாறன் மிக அர்ப்பணிப்பான நடிகர் அருமையாக நடித்துள்ளார். நான் இந்தப்படத்தில் ஒரு போலீஸ் பாத்திரம் நடித்துள்ளேன். வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிரவீன் குமார் பேசியதாவது…

8 வருட நட்பு, நாளைய இயக்குநர் குறும்படம் பார்த்து எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் மந்திர பாண்டியன். பாலா சார் படத்தில் வாய்ப்பு தந்தார் ஆனால் அதில் நடிக்க முடியவில்லை. மீண்டும் இந்தப்படத்தில் வாய்ப்பு தந்தார் என்றென்றும் நன்றிகள். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

இயக்குநர் தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். இயக்குநர் மந்திரா மிகத்திறமையானவர். அவர் திறமை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது அவரிடம் நிறையக் கதைகள் பேசியுள்ளேன். அவர் கண்டிப்பாக நல்ல படம் செய்திருப்பார். தயாரிப்பாளர் நவீன் என் நண்பர். இந்தப்படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்கள். எம் எஸ் பாஸ்கர் சமீப காலங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இருந்தாலே படம் நன்றாக இருக்கும்.

கதாபாத்திரங்கள் மீது தான் இந்தப்படம் பயணிக்கிறது. இந்தப்படமும் சிறப்பாக இருக்கும். எப்போதுமே ஒரு கதைக்காகச் செலவு செய்ய வேண்டும் ஹீரோவுக்காக செலவு செய்யக்கூடாது அப்போது தான் படம் சிறப்பாக வரும்.

தமிழ்த்திரை இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் தான் இன்றைய நாயகன். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

MS Baskar emotional about his cinema carrier at Madhimaaran event

பட்டைய கிளப்பும் ‘பார்க்கிங்’.. டைரக்டருக்கு தங்கம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

பட்டைய கிளப்பும் ‘பார்க்கிங்’.. டைரக்டருக்கு தங்கம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது.

நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்”.

நடிகை பிரார்த்தனா, “இந்தப் படத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. அபர்ணா கதாபாத்திரம் கொடுத்த ராம் சாருக்கு நன்றி.

என் கேரக்டர் பலருக்கும் கனெக்ட் ஆகி இருக்கு. ’எங்க வீட்டு பொண்ணு மாதிரி இருக்க’ என சொன்னார்கள். நமக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர் சினிஸ் சாருக்கு நன்றி”.

நடிகை இந்துஜா, “’பார்க்கிங்’ படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இதற்கு முதலில் நான் மீடியாவுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய ஓப்பனிங் கொடுத்தீர்கள். பார்வையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படம் பண்ணும்போது நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. இயக்குநர் ராமுக்கும் படக்குழுவுக்கும் நன்றி. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நன்றி”

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்….

“மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்த சினிஸ் அண்ணனுக்கு நன்றி.

லாக்டவுண் சமயத்தில் மூன்று கதைகள் சொன்ன போது, இது செய்யலாம் என அவர்தான் சொன்னார். என் மீதும் படம் மீதும் சுதன் சார் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது படத்தின் ரிசல்ட் பார்த்து அவர் ஹேப்பி. ஹரிஷ் கல்யாண் அண்ணனிடம் கதை சொல்லும் போது ஒரு பதட்டம் இருந்தது. ஆனால், அவரும் இந்தக் கதையில் ஈடுபாடு காட்டி நிறைய சப்போர்ட் செய்தார். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்டரி ஆக்டர்.

படப்பிடிப்புத் தளத்தில் அந்தக் கதாபாத்திரத்திலேயே இருந்தார். படத்தில் வருவது போலயே ரொம்ப கோபமாக இருந்தார். படம் முழுவதுமே இந்துஜாவுக்கு கர்ப்பமாக இருப்பது போன்ற சவாலான கதாபாத்திரம். நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் என இந்துஜா ஒத்துக் கொண்டார். பிரார்த்தனா எல்லாமே சிங்கிள் டேக்கில் நடித்து விடுவார். படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி”.

இணைத் தயாரிப்பாளர் சினிஸ், “ஒவ்வொரு நாளும் படத்தின் கலெக்‌ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. ஆனால், மழை வெள்ளத்தால் பாதிப்பு வருமோ என யோசித்தோம். ஆனால், திரையரங்குகளில் இப்போது வரை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல கதை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், பிரார்த்தனா, ரமா என அனைவருக்கும் நன்றி”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர்…

“இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. ராம், முருகேஷ், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, பிரார்த்தனா என இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும்.

படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பிலும் நான் கோபமாக இருந்தது உண்மை. காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றிக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி”.

நடிகர் ஹரிஷ் கல்யாண்…

“படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள்.

இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.

Harish Kalyan presented Gold gift to Parking director

More Articles
Follows