'தமிழ்', 'ஜோடி' படங்களில் பிரசாந்த் &…
...Read More
ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்த், மலேசியா டானாக நடித்திருந்தார்.
இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதே போன்ற கதையம்சம் கொண்ட கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் சாருஹாசன்.
இவர் கமல்ஹாசனின் சகோதரர் என்பது தாங்கள் அறிந்ததே.
அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ இப்படத்தை இயக்க, ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.
முதலில் இவ்வேடத்தில் நடிக்க 88 வயதான சாருஹாசன் மறுத்தாராம். பின்னர் இயக்குனர் வறுபுறுத்தவே நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இப்படத்தில் சாருஹாசன் உள்பட எவருக்கும் மேக்கப் கிடையதாம். அதாவது இப்படத்தின் டேக்லைன் ‘நோ பவுடர் நோ மேக்கப்’ என்பதுதான் ஹைலைட்