தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
87 வயது நடிகர் சாருஹாசனை கதையின் நாயகனாக நடிக்க வைத்து ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.
வருடத்திற்கு இரண்டு படங்கள் இயக்கம் என இவரது பட வரிசை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்..
இதனை எடுத்து பப்ஜி & பவுடர் என்ற படங்களை இயக்கினார். இதில் ‘பவுடர்’ என்ற படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹரா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மோகன் ரீ என்ட்ரி கொடுக்கும் இந்த படம் 2024 ஏப்ரல் மாதம் வெளியாகும் என சமீபத்தில் போஸ்டர் வெளியானது.
இதனை அடுத்து அனித்ரா நாயர் நடிப்பில் ‘பேங்க்’ என்ற என்ற ஒரு படமும் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து ‘ஸ்டாலின் ஜோசப்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த வரிசை பட்டியில் தற்போது ஒரு புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.
‘காதலிச்சா கல்யாணம் பண்ண கூடாது’ ‘KKPK’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தை இயக்குவதாக காதலர் தினத்தில் காதலர்களுக்கு அதிர்ச்சியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே நம் வாழ்க்கையில் காதல் திருமணமா¿ என்ற பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால் காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது… கழட்டி விடனும் என்பது போல இவர் தலைப்பு வைத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, கோவை, கோவா, மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறதாம் ‘காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது’.
Vijay Sri G next titled Kadhalicha Kalyanam Panna Koodadhu