‘கபாலி’யிடம் தோற்ற ‘பாகுபலி 2’.?

‘கபாலி’யிடம் தோற்ற ‘பாகுபலி 2’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali release theatre count less than Kabali movieசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் கடந்த 2016 வருடம் வெளியானது.

உலகளவில் இப்படம் பேசப்படும் வகையில் இதற்கான விளம்பரங்களை செய்திருந்தார் இதன் தயாரிப்பாளர் கலைப்புலி தானு.

கேரளாவில் இதன் வெளியீட்டு உரிமையை பெற்ற மோகன்லால் 306 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இது நேரடி தமிழ் படமாகவே அங்கு வெளியானது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி பாகுபலி 2 வெளியாகவுள்ளது.

இப்படத்தை மலையாள மொழியில் வெளியிடவிருக்கிறார்கள்.

இதுவரை 300 தியேட்டர்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கபாலி எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளது பாகுபலி.

இனிவரும் நாட்களில் கபாலியை ஜெயிப்பாரா பாகுபலி என்பதை பார்ப்போம்.

Baahubali release theatre count less than Kabali movie

தனுஷ் உடலில் இருந்த அடையாளங்கள் அழிப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷ் உடலில் இருந்த அடையாளங்கள் அழிப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush medical report says his birth marks surgically alteredமதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களின் மகன் என உரிமை கோரி வருவதும், அது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருவதும் தாங்கள் அறிந்ததே.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் தனுஷின் உடலில் இருந்த அங்க அடையாளத்தை (10ஆம் வகுப்பு சான்றிதழ் படி) சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஒரு தனியறையில், 2 அரசு மருத்துவர்கள் தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதனை செய்தனர்.

இந்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மெடிக்கல் ரிப்போர்ட்டால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Dhanush medical report says his birth marks surgically altered

‘காற்று வெளியிடை’ என் கனவு படமல்ல… கார்த்தி

‘காற்று வெளியிடை’ என் கனவு படமல்ல… கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiமணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள படம் காற்று வெளியிடை.

கார்த்தி நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.

இதற்கான விழாவில் கார்த்தி பேசும்போது…

“மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த நான், இன்று அவரின் படத்தில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏஆர் ரஹ்மான் இசையில் முதன்முதலாக நடித்துள்ளது சந்தோஷம்.

இது என் கனவு படமல்ல. ஏனென்றால் இப்பிடி ஒரு கனவை கூட என்னால் காண முடியாது.

படம் அவ்வளவு அருமையாக வந்துள்ளது.” என்று பேசினார்.

விருது வென்ற சிவகார்த்திகேயன்-அனிருத்தை கலாய்த்த சதீஷ்

விருது வென்ற சிவகார்த்திகேயன்-அனிருத்தை கலாய்த்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan anirudh sathishசிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் Pride Of TamilNadu என்ற விருதை அண்மையில் பெற்றனர்.

இது குறித்து இவர்களின் நண்பரும் நடிகருமான சதீஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

வாழ்த்துக்கள் நண்பர்கள்.

விருது விழா கல்யாண மண்டபத்தில் நடந்ததோ ?? என கலாய்த்துள்ளார்.

இருவரும் விருது விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தால் பவர்ஸ்டாருக்கு அடித்த அதிர்ஷ்டம்

அஜித்தால் பவர்ஸ்டாருக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajithஅஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஸ்ருதி நடித்துள்ள இப்படம் கட்டமராயுடு என்ற பெயரில் உருவாகியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 24ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இது அஜித்தின் ரீமேக் படம் என்பதால் தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனவே 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் இங்கு வெளியாகவுள்ளதாம்.

மேலும் சென்னை மாயாஜால் திரையரங்கில் இப்படத்துக்கு 45 காட்சிகளை ஒதுக்கியிருக்கிறார்களாம்.

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Khushbooரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தை தனுஷ் தயாரிக்கவிருக்கிறார்.

இப்பட அறிவிப்பு வெளியானது முதலே இப்படம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் குஷ்பூ நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் குஷ்பு நடிப்பது இது 6வது முறையாகும்.

இதற்கு முன்பு, தர்மத்தின் தலைவன் (1988), நாட்டுக்கொரு நல்லவன் (1991), பாண்டியன் (1992), மன்னன் (1992), அண்ணாமலை (1992), குசேலன் (2008) ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Khusboo teams up with Rajini for 7th time in Dhanush project

rajini dhanush ranjith

More Articles
Follows