மூன்றுமுகம்-அபூர்வ சகோதரர்கள் பட காப்பியா விஜய்-61

மூன்றுமுகம்-அபூர்வ சகோதரர்கள் பட காப்பியா விஜய்-61

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 61அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் மற்றும் மூன்றுமுகம் படத்தில் ரஜினி ஆகியோர் 3 வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படங்கள் வேறுவேறு கால கட்டங்களில் வெளியாகியிருந்தாலும், ஒரு தந்தை இரண்டு மகன்கள் வேடங்களை அவர்கள் ஏற்றிருந்தனர்.

மேலும் இரண்டு படத்திலும் தந்தையை கொன்றவர்களை இரு மகன்களும் பழிவாங்குவதாக காட்சியமைப்புகள் இருந்தன.

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் கதையும் இதுபோன்றே உருவாக்கப்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இந்த கதையை இந்த காலத்துக்கேற்ற வகையில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும், சமூக சார்ந்த செய்திடனும் அட்லி உருவாக்கி வருகிறாராம்.

‘விஸ்வரூபம் 2’ பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறார் கமல்

‘விஸ்வரூபம் 2’ பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishwaroopam 2 first look will be released by Kamalhassan on 2nd May 2017கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படம் விஸ்வரூபம்.

கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை படமாக்கும்போதே இதன் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்.
இதன் விநியோக உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார்.

ஆனால் அவரால் படத்தை வெளியிட முடியவில்லை.

எனவே, கமல்ஹாசனே இப்படத்தை வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளின் பர்ஸ்ட் லுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Happy to anounce: Today 7pm Vishwaroop 2 Hindi first look poster & Vishwaroopam Tamizh Telugu 1st look posters release Exclusively for you

Vishwaroopam 2 first look will be released by Kamalhassan on 2nd May 2017

குடியிருந்த கோயிலை அகரம் பௌண்டேஷனுக்கு கொடுத்தார் சிவகுமார்

குடியிருந்த கோயிலை அகரம் பௌண்டேஷனுக்கு கொடுத்தார் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar donates his home to Agaram Foundationநடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள “ லக்ஷ்மி இல்லத்திருக்கு “ சென்றுள்ளனர்.

நடிகர் சிவகுமார் அவர்கள் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடுதான்.

இந்த வீட்டில் தான் சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர்.

இந்த வீட்டில் தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன், பேத்திகள் பிறந்தது இங்கே தான்.

இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு. இந்த வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுகொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் “ லக்ஷ்மி இல்லத்திருக்கு “ சென்றுள்ளனர்.

அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பது சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை அதற்காக துவங்கப்பட்ட “ அகரம் பௌண்டேஷன் “ செயல்பாடிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

சிவகுமார் அவர்கள் கோவிலாக நினைத்து வந்த வீட்டை தொண்டு நிறுவனமான அகரம் பௌண்டேஷன் செயல்பாட்டிற்கு தந்துள்ளது பராட்டுக்குரிய ஒன்றாகும்.

ஹாட்ஸ் ஆப் சிவகுமார் & பேமிலி

Sivakumar donates his home to Agaram Foundation

sivakumar family

அஜித்-சிவகார்த்திகேயனுடன் மோத தேதி குறித்த விஷால்

அஜித்-சிவகார்த்திகேயனுடன் மோத தேதி குறித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivakarthikeyanகத்தி சண்டை படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் மற்றும் இரும்பு திரை ஆகிய இரண்டு படங்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுடன் மோதவுள்ளது.

மிஷ்கின் இயக்கியுள்ள துப்பறிவாளன் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் வெளியிடவுள்ளனர்.

இதே நாளில்தான் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுபோல், விஷாலின் மற்றொரு படமான இரும்பு திரை படத்தை செப்டம்பர் 29ஆம்தேதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal clash with Ajith and Sivakarthikeyan

தனுஷ் படத்தின் Mr.X இசையமைப்பாளர் இவர்தானா.?

தனுஷ் படத்தின் Mr.X இசையமைப்பாளர் இவர்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Enai Noki Paayum Thota stillsஅண்மைகாலமாக படத்தின் தலைப்பை அறிவிக்காமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் இதை ஒரு டிரெண்ட்டாகவே செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தனுஷ் நடித்துவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார்?

என்று அறிவிக்காமலே படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

இசையமைப்பாளர் யார் என்று கேட்டதற்கு? மிஸ்டர் எக்ஸ் என்றே கூறிவந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பவர் கௌதம் மேனன்தான் என்று சொல்லப்படுகிறது.

பின்னணி இசையை மட்டும், ராஜதந்திரம் படப் புகழ் நடிகரும், கிடாரி படத்தின் இசையமைப்பாளருமான தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார் என்கிறார்கள்.

Enai Noki Paayum Thota music composer name is revealed

இந்திய சினிமா வரலாற்றில் ‘பாகுபலி 2’ படைக்க போகும் சாதனை

இந்திய சினிமா வரலாற்றில் ‘பாகுபலி 2’ படைக்க போகும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali 2 going to make record in 100 years of Indian Cinemaஇந்தியாவில் சினிமா தோன்றி 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை முதன்முறையாக பாகுபலி2 நிகழ்த்த போகிறது.

ராஜமௌலி இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் ரூ. 600 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

எனவே இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துவிடும்.

இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு படமும் இத்தனை கோடிகளை வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார், டைட்டானிக், லார்ட் ஆஃப் ரிங்ஸ், ஹாரி பார்ட்டர், ஸ்பைடர் மேன், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற ஹாலிவுட் படங்களே இதுபோன்ற சாதனைகளை படைத்துள்ளது.

இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் பங்கு தொகை போக எப்படியிருந்தாலும் ரூ. 600 கோடி வரை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

இதன் பட்ஜெட் ரூ. 320 கோடி என்றாலும், மீதியுள்ள ரூ. 280 கோடி நிகரலாபமாக தயாரிப்பாளருக்கு கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வசூல் மேலும் மேலும் அதிகரிக்க தயாரிப்பாளர் காட்டில் வசூல் மழை பொழிய போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Baahubali 2 going to make record in 100 years of Indian Cinema

More Articles
Follows