மூன்று முகம் படத்தை மெர்சலாக காப்பியடித்து விட்டார்; அட்லி மீது புகார்

மூன்று முகம் படத்தை மெர்சலாக காப்பியடித்து விட்டார்; அட்லி மீது புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 mugamஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இப்படம் ரஜினியின் மூன்று முகம், கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என பலரும் கூறி வந்தனர்.

மெர்சல் படக்குழுவினரை கமல் சந்திக்கும்போது கமலின் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டரை பின்னணியில் வைத்து இருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இது ‘மூன்று முகம்’ படத்தின் காப்பி என்று மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.

எனவே ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே ரீமேக் கிங் அட்லி என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளதும், சிறந்த காப்பி அண்ட் பேஸ்ட் டைரக்டர் அட்லி என பிரபல நடிகர் ஒருவர் குறிப்பிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Five star films complaint against Atlee on Moondru Mugam remake issue

kamal vijay atlee

மச்சான்ஸ்… நமீதாவுக்கு கல்யாணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

மச்சான்ஸ்… நமீதாவுக்கு கல்யாணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namitha veerவிஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா.

இதனைத் தொடர்ந்து சத்யராஜ் மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஆஸ்தான நாயகியாகி அவர்களுடன் நடித்தார்.

‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்யா’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ரசிகர்களை இவர் மச்சான்ஸ் என அன்புடன் அழைப்பது வழக்கம்.

பரத்துடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பொட்டு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அண்மையில் கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த வீடியோவில் “நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் நமீதா பேசியிருப்பதாவது…

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் செய்யவுள்ளோம். உங்களது அனைவருடைய அன்பும், ஆதரவும் வேண்டும். நன்றி மச்சான்ஸ்.

என நமீதாவும் பேசியுள்ளார்.

Namitha set to get married to Veerendra aka Veer on 24th Nov 2017

டான்சர் யூனியனுக்கு விஜய் வழங்கிய ரூ.15 லட்சம்

டான்சர் யூனியனுக்கு விஜய் வழங்கிய ரூ.15 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayபல நடிகர்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், ஒரு தனித்திறமைக்கு நாம் ஒரு நடிகரை குறிப்பிடுவோம்.

நடிப்புக்கு கமல், ஸ்டைலுக்கு ரஜினி, ஆக்சனுக்கு அர்ஜுன் என சொல்லுவோம்.

அப்படி டான்ஸ்க்கு என்று நாம் குறிப்பிடும் நடிகர் என்றால் அது நிச்சயம் விஜய்யாக மட்டுமே இருக்க முடியும்.

இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ. 15 லட்சத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறாராம் தளபதி.

சூர்யா-கார்த்தி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பமானது

சூர்யா-கார்த்தி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and karthiபிரபல நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா. இளைய மகன் கார்த்தி.

இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை.

கதை அமையும் போது இணைவோம் என தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இருவரும் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்திற்காக இணையவுள்ளனர்.

இதில் கார்த்தி, சாயிஷா ஜோடியாக நடிக்க சூர்யா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்பட சூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

இந்த பூஜையில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ரஜினியின் முடிவு தெரியாமல் கன்ப்யூஸாகும் கமல்

ரஜினியின் முடிவு தெரியாமல் கன்ப்யூஸாகும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and kamal haasanஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் அடுத்த வருடம் 2018 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் 2.0 படம் சில காரணங்களால் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

எனவேதான் கமல் தன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஒருவேளை 2.0 படம் ஏப்ரலுக்கு தள்ளிப்போனால் ஜனவரியில் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யலாம் எனவும், ஒரு வேளை 2.0 படம் ஜனவரில் வெளியானால் தன் படத்தை ஏப்ரலில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நாளில் 2.0-பேட்மேன் படங்கள் மோதல்; அக்‌ஷய்குமார் விளக்கம்

ஒரே நாளில் 2.0-பேட்மேன் படங்கள் மோதல்; அக்‌ஷய்குமார் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshay kumar with 2 point 0 teamஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படம் 2018 ஜனவரி 26ல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு படமான பேட் மேன் (PADMAN) என்ற படமும் இதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இவை இரண்டும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருப்பதால் இந்தியில் 2.0 படத்தை வெளியிடும்போது தியேட்டர்கள் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து PADMAN படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமாக அக்‌ஷய்குமார் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

2.0 படம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இப்படம் உறுதியாக ஜனவரியில் ரிலீஸ் ஆனால் என் படத்தை பின்னர் ரிலீஸ் செய்வேன்.

நான் தயாரிப்பாளர் என்பதால் என்னால் என் பட ரிலீஸை தள்ளி வைக்கமுடியும்.

ஆனால் 2.0 படம் ரிலீஸை ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம்தான் முடிவு செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows