ஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..? அட்லி விளக்கம்

ஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..? அட்லி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atleeஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி அவர்கள் ராஜா ராணி என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.

இப்படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்று சிலர் கூறினர்.

இதனையடுத்து விஜய் நடித்த தெறி படத்தை எடுத்தார். இப்படமும் சத்ரியன் படத்தின் காப்பி என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது.

தற்போது மெர்சல் படத்தை உருவாக்கியுள்ளார். இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன் கருத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் அட்லி.

அவர் கூறியதாவது… ‘இசையில் 7 ஸ்வரங்கள்தான் இருக்கிறது.

அதற்குள்தான் மெட்டமைக்க முடியும்.
பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் நிச்சயம் இருக்கும்.

காப்பி அடிக்கின்றேன் என்று ஈசியாக சொல்லிவிடுகிறார்கள்.

ஒரு படத்தை எடுக்கும் போது அதை இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். அதற்கான கஷ்டம் எனக்குதான் தெரியும்.
நானும் ஒரு உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறினார் அட்லி.

பீச்சாங்கை கார்த்திக் மற்றும் தெறி சாய் தீணா நடித்துள்ள லேகா

பீச்சாங்கை கார்த்திக் மற்றும் தெறி சாய் தீணா நடித்துள்ள லேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peechaankai fame RSKarthik act in LEGAA Pilot filmசினிமா என்கிற கனவுத் தொழிற்சாலை ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள தவறுவதில்லை.

ஓர் இயக்குனரின் எண்ணத்தில் உயிர் பெரும் ஒரு கதை, பின் திரைக்கதை வடிவம் பெற்று, ஒரு தயாரிப்பாளரின் அடைக்களம் பெற்று, நடிகர்களின் அசாத்திய நடிப்பினாலும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பினாலும் மெருகேற்றப்பட்டு ஒரு ரசிகனின் பார்வைக்கு விருந்தாகின்றது. காகிதத்தில் உறங்கி கிடைக்கும் ஒரு கதை, திரைவடிவம் பெறுவதே ஒரு இயக்குனரின் அடங்காத கனவாக இருக்கும்.

இதை சாத்தியமாக்க ஒரு இயக்குனருக்கும் அவரது குழுவிற்கும் பல வழிகள் உள்ளன.அப்படி ஒரு வழிதான் – காட்சிப்படம்.

காட்சிப்படம் என்றால் என்ன ? ஒரு முழு நீள திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியையோ அல்லது சில காட்சிகளையோ டிஜிட்டல் வடிவத்தில், சிறிய budgetல் எடுப்பதே காட்சிப்படம் ஆகும்.இப்படி எடுக்கப்படும் இந்த காட்சிப்படமானது கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரி காசு கொடுத்து படம் பார்க்கும் ஒரு ரசிகனுக்கும் சரி அந்த படத்தை பற்றிய ஒரு எண்ணத்தையும் உணர்வையும் தருகிறது.

அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சிப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஒரு தயாரிப்பாளர் தன் முடிவை எடுக்கலாம். காற்றில் முழம் போடாமல்.

கண்ணெதிரே எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதால் லாபத்துக்கான வாய்ப்புகள் என்றுமே சிறப்பாக இருக்கும்.

மேலும் ஒரு ரசிகனுக்கும் தான் பார்க்க போகிற படத்தின் மீதான எதிர்பார்ப்பு சிறப்பாகவும் சரியாகவும் இருக்கும்.

காட்சிப்படம் எடுத்தல் குறும்படம் எடுப்பதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? ஆம் இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு குறும்படம் என்பது அதை எடுத்தவர்களின், நடித்தவர்களின் திறமையை எடுத்துக்காட்டும். ஆனால் காட்சிப்படமானது ஒரு படி தாண்டி தான் எடுக்கப் போகும் கதையின் பலத்தை ஒரு தயாரிப்பாளருக்கு எடுத்துக்காட்டும்.

எனவெ…. இவை அனைத்தையும் மனதில் வைத்து இளைஞர் குழு ஒன்று ஒரு 25 நிமிட காட்சிப்படத்தை எடுத்துள்ளது.. அந்த காட்சிப்படத்தின் பெயர் “லேகா”.

“பீச்சாங்கை” புகழ் கார்த்திக் மற்றும் “தெறி” புகழ் சாய் தீணாவும் தங்கள் ஒத்துழைப்பை கொடுத்து இந்த படத்தில் நடித்துக் கொடுத்துள்ளனர்.

முக்கியமாக இந்த திரைப்படத்திற்கான கதை ஒற்றை பாணியில் இல்லாமல் பல பாணிகளின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. மர்மம், திகில்,கற்பனை, காதல், சிரிப்பு, சண்டை என்ற பல பாணிகளின் சரியான கலவையாக படத்தின் கதை பயணிக்கும்.

இப்படிப்பட்ட கதையின் ஒரு சில காட்சிகள் மட்டும் இந்த காட்சிப்படத்தில் இடம்பெறும். எனவே ரசிகர்களின் ஏகோபித்த ரசனையை வெல்லும் படமாக இந்த காட்சிப்படம் அமைய வாய்ப்புள்ளது.

மேலும் இனிமையான செய்தி என்னவென்றால் இந்த காட்சிப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது.

Behindwoods இந்த குழுவுடன் இணைந்து OCT 5th 5 மணிக்கு இந்த காட்சிப்படத்தை வெளியிடுகிறது .இதை கீழே கொடுக்க பட்டுள்ள linkல் கண்டு களிக்கலாம்.

Peechaankai fame RSKarthik act in LEGAA Pilot film

www.youtube.com/user/behindwoodstv

அரசியலில் ஜெயிப்பேன்; ரஜினிக்கு சவால் விடுகிறாரா கமல்.?

அரசியலில் ஜெயிப்பேன்; ரஜினிக்கு சவால் விடுகிறாரா கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalசினிமா துறையிலும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும் 40 ஆண்டுகளாக ரஜினியும் கமலும் நட்புடன் பழகி வருகின்றனர்.

ஆனால் தற்போது இருவரும் அரசியல் களத்தில் இறங்க உள்ளதால் இவர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முரசொலி பவளவிழாவில் கமல் பேசும்போது… தற்காப்பை விட தன்மானமே முக்கியம் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.

இதனையடுத்து சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் அரசியலில் ஜெயிக்க சினிமா புகழ் மட்டும் போதாது எனவும், அந்த ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கலாம் எனவும் ரஜினி பேசினார்.

இதனையடுத்து பல்வேறு சர்ச்சைகள் அரசியல் உலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என பொருள் படும் கமல் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள், பிறகு சிரிப்பார்கள், பிறகு சண்டைக்கு வருவார்கள் கடைசியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் – காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு இப்போது தேவைப்படும் வலிமையைத் தருகின்றன. என குறிப்பிட்டுள்ளார்.

இது மறைமுகமாக ரஜினிக்கு கமல் தெரிவிக்கும் பதிலாக அமைந்துள்ளது என விவரமறிந்தவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Did Kamals new tweet to Challenge to Rajini

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

First they ignore you then they laugh at you then they fight you and then you win- Gandhi ji His words impart strength we need now

தமிழக அரசு வரி எதிரொலி; இன்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்து

தமிழக அரசு வரி எதிரொலி; இன்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Multiplex theaters will be closed from 3rd October 2017சினிமா திரையரங்குகளுக்கு மத்திய அரசின் 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டது.

பின்னர் 100 ரூபாய் டிக்கெட்க்கு குறைந்த வரியும் 100க்கு மேல் உள்ள டிக்கெட்டுக்கு அதிக வரியும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மொழி படங்களுக்கு 10%, மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி தமிழக அரசு விதித்துள்ளது.

இந்த இரண்டு வரிவிதிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அண்மையில் அறிவித்தார்.

மேலும் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர தமிழ் திரையுலகினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றுமுதல் சென்னையில் ஐநாக்ஸ், பிவிஆர் மால்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரபலமான எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் இந்த ஸ்டிரைக்கில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

Multiplex theaters will be closed from 3rd October 2017

அப்பா கார்த்திக்-மகன் கவுதம் ஆகியோரை இணைத்த தனஞ்ஜெயன்

அப்பா கார்த்திக்-மகன் கவுதம் ஆகியோரை இணைத்த தனஞ்ஜெயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik and Gautham Karthik to join hands with Producer Dhananjayanவிஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் திரு.

இவர் தற்போது கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இவர்களுடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மேலும் பல பிரபல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தயாரிப்பு தனஞ்செயன்.

Karthik and Gautham Karthik to join hands with Producer Dhananjayan

பிக்பாஸில் ஆரவ் வெற்றி; சிநேகன் தோல்வி… டிவி உடைப்பு

பிக்பாஸில் ஆரவ் வெற்றி; சிநேகன் தோல்வி… டிவி உடைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Snehan reaction to his failure in Bigg Boss Tamil showபிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள்.

இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் இருவருக்குமே ஆரவ்வைத் தாண்டி ஆதரவு இருந்தது.

இதனால் சமூக வலைதளத்தில் ஆரவ் வெற்றியடைந்ததிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு பாடலாசிரியர் சிநேகன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”எனக்கு வாக்களித்த ஆதரவாளர்கள், உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள், பிக் பாஸ் ரசிகர்கள், கமல் சார் ரசிகர்கள், என்னுடைய தோழமை உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றி.

உங்கள் ஆதரவால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் என் முழு வாழ்க்கையை, வேறொரு களத்தில் என்னை இயக்கிக் கொண்டிருந்தது. அதற்கு சாகும் வரை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

ஆரவ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு மேடையிலும் வாழ்த்து சொன்னேன், அதில் எந்தவித வருத்தமும் எனக்கில்லை.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது எனக்கொரு சிறு அச்சம் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நிறைய அழுதுகொண்டே இருக்கிறேன்.

எதற்கெடுத்தாலும் எமோஷன் ஆகுறேன் என்றார்கள். நான் கிராமத்துக்காரன். பாசத்தை கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். எங்களுக்கு வார்த்தைகள் இல்லை உணர்வுகள் மட்டும்.

ஆனால், இன்றைக்கு எனது ஆதரவாளர்கள், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிரொலியாக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போய் நிற்கிறேன். அனைவரது வருத்தங்கள், ஆதங்கங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

சில இடத்தில் தொலைக்காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறார்கள், பஸ் மறியல் செய்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

இவ்வளவு அன்பு வைக்க நான் என்ன பண்ணினேன். அங்கு நானாக வாழ்ந்திருக்கிறேன்.

அன்பு தேவைப்படுகிற இடத்தில் எல்லாம், சிநேகன் கட்டிப்பிடிப்பதற்காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னீர்கள்.

ஒன்று தெரியுமா, ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

அப்போது தான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே. அவர்கள் அந்த ஆதரவு என்னிடமிருக்கிறது என்று நம்பினார்கள்.

அன்பின் வெளிப்பாடாக தான் அரவணைத்தேன். தாயும், குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அங்கு நடந்தது.

நிறைய ரணங்களை அனுபவித்தவன். இந்த தோல்வியைக் கண்டெல்லாம் துவண்டு போக மாட்டேன்.

சிநேகனைக் காணவில்லை என்று செய்திகள் வெளியானது. அதற்கான பதிவு தான் இது. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.

உங்கள் அனைவரது ஆதரவு இருக்கும் வரை ஊர்க்குருவி மாதிரி மேலே பறந்து கொண்டே இருப்பேன். தயவு செய்து வருத்தப்படாதீர்கள், வேறு எந்த விபரீதமான முடிவுக்கும் போக வேண்டாம்.

கூடிய விரைவில் அனைவரையும் சந்திப்பேன். காரணம், நான் மக்கள் கவிஞன்.

கிராமத்துக்காரன். எங்கு நட்டாலும் முளைப்பேன், அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்கள் ஆதரவால் இன்னும் பல மடங்கு அந்த நம்பிக்கை பெருகியிருக்கிறது. நன்றி” என்று சிநேகன் தெரிவித்துள்ளார்.

Lyricist Snehan reaction to his failure in Bigg Boss Tamil show

More Articles
Follows