‘என்னோட குருவே ஆர்யாதான்…’ கார்த்தி

‘என்னோட குருவே ஆர்யாதான்…’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi thanksகோகுல் இயக்கிய காஷ்மோரா வெற்றிப் பெற்றத்தில் அதன் நாயகன் கார்த்தி குஷியாக இருக்கிறார்.

இதனையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக முழுக்க ஷேவ் செய்த முகத்துடன் பளபள முகத்துடன் வலம் வருகிறார் கார்த்தி.

மேலும் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் புகைப்படத்தை பதிவிட்டு என் பிட்னஸ் குரு ஆர்யாதான் என ட்வீட் செய்துள்ளார்.

 

Actor Karthi ‏@Karthi_Offl
Thank you @AthulyaBS and @Dhayarajesh for helping me with the transformation. Feels great and Nandri my fitness guru @arya_offl

பவர் ஸ்டார்-அனிருத் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்

பவர் ஸ்டார்-அனிருத் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh hotதமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடி கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திலும் டூயட் பாடவிருக்கிறார்.

இப்படத்தில் கமிட் ஆனதை கீர்த்தி சுரேஷே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இது பவன் கல்யாணுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம்..’- ‘லைக்கா’ ராஜுமகாலிங்கம்

‘ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம்..’- ‘லைக்கா’ ராஜுமகாலிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini lyca raju mahalingamஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’.

பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை ரூ. 350 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நவம்பர் 20ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இவ்விழா மும்பையில் நடைபெறுவதால் தென்னிந்தியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் நேரடியாக பார்க்க முடியாதே என கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜுமகாலிங்கம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும்தான் மும்பையில் நடைபெறுகிறது.

மீதமுள்ள டீசர், பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா ஆகியவற்றை தென்னிந்தியாவில் நடத்த உள்ளோம்.

இது ரசிகர்கள் மாபெரும் விருந்தாக அமையும்” என்றார்.

விக்ரம் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

விக்ரம் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

????????????????????????????????????????????????????????சிம்பு-ஹன்சிகா நடித்து, நீ…..ண்ட நாட்களாக வருமா? வராதா என இழுத்தடித்த படம் வாலு.

விஜய் சந்தர் இயக்கிய இப்படம் ஒருவழியாக வெளியாகி வெற்றி பெற்றது.

எனவே மீண்டும் சிம்பு நடிக்க, டெம்பர் ரீமேக்கை விஜய் சந்தரே இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் இப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சந்தரின் கதைக்கு விக்ரம் ஓகே சொல்ல, தற்போது இருவரும் இணையவிருக்கிறார்களாம்.

SFF production நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மற்ற கலைஞர்கள் ஒப்பந்தமானவுடன் டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ வில் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.

கமல் பங்கேற்கும் ரஜினி பட விழாவுக்கு இத்தனை கோடியா?

கமல் பங்கேற்கும் ரஜினி பட விழாவுக்கு இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajiniரஜினி-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் நவம்பர் 20ந் தேதி நடக்கிறது.

பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோஹர் இந்த விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

இவ்விழாவை லைகா நிறுவனத்தின் யூடியூப் வீடியோ சேனல் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் ஆப்ஸ்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.

இதில் பங்கேற்க கமல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெளியீட்டு விழாவுக்கு மட்டும் ரூ. 6 கோடி வரை செலவிடப்பட உள்ளதாம்.

மேலும் மார்கெட்டிங் மற்றும் இதர தேவைகளுக்கு ரூ. 40 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல், தயாரித்து இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தை லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

கொலவெறி கொண்டாட்டத்தில் அனிருத்

கொலவெறி கொண்டாட்டத்தில் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and anirudhதனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி, முதன்முறையாக இயக்கிய படம் 3.

இதில் தனுஷ் உடன் சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், பிரபு நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்னரே, இதில் இடம் பெற்ற ‘கொலவெறி’ பாடல் உலகளவில் ஹிட்டடித்தது.

தமிழ் மொழியே தெரியாத நாடுகளிலும் இப்பாடல் பிரபலமாகியது.

இப்பாடலை தற்போது வரை 11 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் கண்டுகளித்துள்ளனர்.

இப்பாடல் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே, அனிருத் உள்ளிட்டோர் இப்பாடலை இன்று கொண்டாடி வருகின்றனர்.

More Articles
Follows