தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
நடிகர் கூல் சுரேஷ்…
“’வடக்குப்பட்டி ராமசாமி’ எனக்கு குலசாமி. சந்தானம் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகராக எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என இயக்குநர் கார்த்திக் சொன்னார். அந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.
நடிகை ஜாக்குலின்…
“இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த கடவுளுக்கும் இயக்குநர் கார்த்திக், தயாரிப்பாளர் விஸ்வா, நட்டி இவர்களுக்கு நன்றி. நான் சினிமாக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சினிமாவில் கடின உழைப்பு, அதிர்ஷ்டம் என எல்லாமே ஒன்று கூடி வந்தால்தான் மேஜிக் நடக்கும். அது எனக்கு இந்தப் படம் மூலம் நடக்கும் என நம்பிக்கை உள்ளது”.
நடிகர் அல்லு சிரீஷ்..
“நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் காலத்தில் இருந்து அவரைக் கவனித்து வருகிறேன். அவருடைய படங்களில் நகைச்சுவை வெகுவாக ரசித்து இருக்கிறேன். படம் மட்டுமல்ல, அவருடைய பேட்டிகளும் எனக்குப் பிடிக்கும். விரைவில் உங்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஏவிஎம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என அப்போதுள்ள தயாரிப்பாளர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்துப் படம் எடுத்தார்கள். அந்த டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இல்லை. இப்போது அது மீண்டும் இந்தப் படம் மூலம் ஆரம்பித்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்த விஸ்வா சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் அஸ்வின்…
“சந்தானம் சார் எங்க எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன். சந்தானம் சாரை வைத்து பெரிய பட்ஜெட் படம் என்ற நம்பிக்கை வைத்த நட்டி சார், விஸ்வா சாருக்கு நன்றி. இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அல்லு சிரீஷ், ஆர்யா ப்ரோ எல்லோருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திக்கிற்கு வாழ்த்துகள்”.
டான்ஸ் மாஸ்டர் ஷெரிஃப்…
“ஒரு ஹீரோவாக நடிப்பு, நடனம் எனப் பலவற்றிலும் சந்தானம் சார் கடின உழைப்புக் கொடுத்து சிறப்பாக வந்துள்ளார். பெரிய இன்ஸ்பிரேஷன் இது. இயக்குநர் கார்த்திக் இவ்வளவு பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவை சிறப்பாகக் கையாண்டுள்ளார். நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் இந்தப் படம். 70’ஸ் படம் என்பதால் சிறப்பாக வந்துள்ளது. படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்”.
இயக்குநர் மடோன் அஸ்வின்…
“’நாளைய இயக்குநர்’ செய்யும்போதில் இருந்தே நானும் கார்த்திக் யோகியும் நண்பர்கள். முதலில் நடிகராக இருந்து பிறகு இயக்குநரானார். படம் இயக்குவதில் திறமையானவர். நிறைய கற்றுக் கொண்டார். இந்த மேடை அவருக்குக் கிடைக்க பத்துவருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. கடின உழைப்புக் கொடுத்து இந்த இடத்திற்கு வந்துள்ள அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றிக் காத்திருக்கிறது. அவருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது. ‘டிக்கிலோனா’வில் அது வொர்க்கவுட் ஆனது. இந்தப் படமும் அப்படி உங்களுக்கு சிறப்பானதாக அமையும்”.
இயக்குநர் ஸ்ரீகணேஷ்…
“இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியும். படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். ’லொள்ளு சபா’ சமயத்தில் இருந்தே சந்தானம் சாரின் பெரிய ரசிகன் நான். அவர் படம் நடிக்க வந்ததும் நிறையப் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். கார்த்தி முதலில் சந்தானம் சாருக்கு கதை சொல்லப் போகிறேன் என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் படம் முக்கியப் படமாக அமைந்து பெரிய வெற்றிப் பெற வாழ்த்துகள்!”
இயக்குநர் ராம்…
“கார்த்திக் அண்ணா ரொம்ப ஜாலியான நபர். ‘டிக்கிலோனா’ படம் போல ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படமும் இன்னும் ஜாலியாக இருக்கும். சந்தானம் சாரும் இந்த காம்பினேஷனில் இருக்கும் போது நிச்சயம் தியேட்டர் கலகலப்பாக இருக்கும்”.
Vadakkupatty Ramasamy is my kulasamy says Cool Suresh