விரைவில் சிம்பு-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மணிரத்னம் விருந்து

simbu and vijay sethupathiகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து 4 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

செக்கச் சிவந்த வானம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிட்டனர்.

இப்படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை வைரமுத்து எழுத, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.

‘லைகா’ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ள மணிரத்னம் மொத்த சூட்டிங்கையும் சுமார் 60 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனவே படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.

Overall Rating : Not available

Related News

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில்…
...Read More
சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய…
...Read More
மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி,…
...Read More

Latest Post