தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருடத்திற்கு அரை டஜன் படங்களை நடித்து கொடுப்பது மட்டுமில்லாமல், அவற்றை தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக கொடுத்து வருபவர் விஜய்சேதுபதி.
எனவே இவரது மார்கெட் வேல்யூம் படத்துக்கு படம் அதிகரித்து வருகிறது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா’ படத்தினை படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது…
‘விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போதே இதன் வியாபாரம் முடிவடைந்துவிட்டது.
ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றுள்ளனர்.
இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல்.
இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் கார்த்தியின் காஷ்மோரா படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Arun Pandiyans AandP group bought theatrical rights of Vijay Sethupathi movie Junga